சிக்கலான நிகழ்விற்கான பிரார்த்தனை – மலாக்கா மாநிலம்

எபிரெயர் 12: 26-29 (NLT)

26 சீயோன் மலையில் இருந்து கடவுள் பேசியபோது அவரது குரல் பூமியை அதிர வைத்தது; ஆனால், இப்போது அவர் இன்னொரு வாக்குறுதியை அளிக்கிறார்: “நான் மீண்டும் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசைப்பேன்.” 27 இதன் பொருள் அனைத்துப் படைப்புகளும் அசைக்கப்பட்டு அகற்றப்படும், இதனால், அசைக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இருக்கும். 28 அசைக்க முடியாத ஒரு ராஜ்யத்தை நாம் பெற்றுக் கொண்டு இருப்பதால், ர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாகப் புனித பயம் மற்றும் பிரமிப்புடன் அவரை ஆராதிக்கின்றவர்களாகநாம் இருப்போம். 29 ஏனென்றால், நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்னியாயிருக்கிறார்.

அவர் இப்போது தேசங்களை அசைப்பது போல் நாம் கர்த்தருடைய அசைவுகளின் சகாப்தத்தில் வாழ்கிறோம். மலேசியாவில் நாம் இதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், தம்முடைய மக்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்ற கர்த்தரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவருடைய நோக்கங்கள் தேசங்களுக்கு வருவதைக் காண அவருடன் பங்காளியாக இருக்க வேண்டும்.

மத்தேயு 18: 18-20 இன் படி நாம் ஒன்றுபட்டு நிற்போம்; நாம் உடன்பாட்டிற்கு ஏற்ப பிரார்த்தனை செய்வதால் “பூமியில் உங்களில் இருவர் உடன்பட்டு எதையும் கேட்கும் போது, ​​அது பரலோகத்தில் இருக்கும் நம் தந்தையால் அவர்களுக்குச் செய்யப்படும்”

 

மலாக்காவின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை

5 அக்டோபர் 2021 அன்று, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.  ஓர் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்த இது,கோவிட் 19 மீட்பு திட்டத்தைக் கூட பாதிக்கும்.

கர்த்தர் நம்மை ஜெபிக்க எழுப்பியுள்ள வேளையில், மலாக்கா ஒரு பெரிய வரலாற்றுப் பாரம்பாரியத்தைக் கொண்ட நகரம் என்பதை நாம் உணர்கிறோம். மலேசியாவின் வரலாறு மலாக்காவின் வரலாற்றோடு நெருக்கமாகப்பிணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மலாக்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியானது, அதன்தலைவிதிக்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க இறைவனின் எக்காள அழைப்பாகும்.

 

இப்போது ஒரு மனப்பட்டு, மலாக்காவிற்காகக் கீழ்க்கண்ட விஷயங்களுக்காக ஜெபிக்க நாம் ஒன்றாக நிற்போம்:

1) இப்போதைய அரசியல் சிக்கலுக்காக ஜெபியுங்கள்

எங்கள் தந்தையாகிய ஆண்டவரே, மாநிலத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதா அல்லது அவசரகால நிலையைப் பிரகடனப்புடத்துவதா என்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புத்திசாலித்தனமாக முடிவு செய்ய நாங்கள் பிரார்த்திக்கிறோம். மேலும், ஒரு புதிய அரசாங்கத்தின் மாற்றத்திற்கு முன் மாநிலத்தை நன்றாக நிர்வகிக்க பிராத்திக்கிறோம். இந்த நிலைமையில் எந்த முடிவாக இருந்தாலும் இருளின் சக்திகள் வந்து இந்த உறுதியற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொள்ள  நாங்கள் இடம் கொடுக்கமால் ஒன்றாக நிற்கிறோம்.

ஆண்டவரே நாங்கள் இப்போது கிறிஸ்துவில் ஒன்றாக நின்று சங்கீதம் 33:8-11 மலாக்காவின் மேல் பிரகடனப்படுத்துகிறோம்

ஆண்டவரே, உலகம் முழுவதும் இறைவனுக்கு அஞ்சட்டும், அனைவரும் அவரை அண்டி அஞ்சி நிற்கட்டும். நீங்கள் பேசும்போது, ​​உலகம் தொடங்கியது! இது உங்கள் கட்டளையில் தோன்றியது. சர்வவல்லமையுள்ள தேவன்தேசங்களின் திட்டங்களை முறியடித்து அவர்களின் அனைத்து[f செயல்களையும் முறியடித்தார். ஆனால், இறைவா உங்கள் திட்டங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்; மலாக்கா மீதான உங்கள் நோக்கங்கள் ஒருபோதும் அசைக்கப்படக்கூடாது

 

2) மலாக்காவின் பாரம்பரியம் ஒரு நுழைவாயில் நகரமாக ஜெபியுங்கள்

பிரான்சிஸ் சேவியர் 1545 ஆம் ஆண்டில் மலாக்காவுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்த முதல் சுவிஷேச ஊழியர்ஆவார்.

லண்டன் சுவிஷேச அமைப்பு மலாக்காவில் சுவிஷே ஊழியத்தை மேற்கொண்டது. அது  பிரபலமான இரண்டு மனிதர்களான ராபர்ட் மோரிசன் (1782 முதல் 1834) மற்றும் வில்லியம் மில்னே (1782-1822) ஆகியோரை அனுப்பியது. அவர்கள் 1818 வாக்கில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் முதல் புராட்டஸ்டன்ட் பைபிளை மொழிபெயர்த்தனர். இது முதன்முதலில் 1823 இல் மலாக்காவில் அச்சிடப்பட்டது.

ஆண்டவரே மலாக்காவை உலகிற்கு அடித்தளம் அமைத்து நற்செய்தி எங்கள் நாட்டிற்கு வருவதற்கான நுழைவாயில் நகரமாக நீங்கள் தேர்வு செய்தீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறோம், இந்த நுழைவாயிலைக் கண்காணிக்க நாங்கள் இப்போது ஒன்றாக நிற்கிறோம். இந்த வாயில் எப்போதும் மகிமையின் ராஜாவுக்குத்திறந்திருக்கும்.

ஆண்டவரே, நாங்கள் இப்போது கிறிஸ்துவில் ஒன்றாகச் சேர்ந்து 24 ஆம் சங்கீதத்தை மலாக்கா மீது அறிவிக்கிறோம்:

கடவுளே, மலாக்கா இறைவனுடையது என்றும், அதில் உள்ள அனைத்தும் மற்றும் அதன் மக்கள் அனைவரும் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று நாங்கள் அறிவிக்கிறோம்,. கடவுளே, மலேசியா கடலில் அடித்தளமிட்டு அதைக் கடலின் ஆழத்தில் கட்டியுள்ளீர்கள். இவ்வளவு பெரிய அஸ்திவாரத்திற்காக நாங்கள் உங்களைப் புகழ்கிறோம்.

“உங்கள் தலைகளை உயர்த்துங்கள், மலாக்காவின் வாயில்களைத் தூக்குங்கள், பழங்கால கதவுகளே, மகிமையின் ராஜா உள்ளே வர வேண்டும். அவர் யார், இந்தப் புகழின் ராஜா? எல்லாம் வல்ல இறைவன் – அவர் புகழின் அரசர். ” ஆண்டவரே, மலாக்காவின் வாயிலுக்குள் வாருங்கள், என்று நாங்கள் அறிவிக்கிறோம்.

 

3) மலாக்காவில் உள்ள திருச்சபைகளுக்காக ஜெபியுங்கள் – மலாக்காவின் “எக்லீசியா”

18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் நாட்டில் கட்டப்பட்ட முதல் புராட்டஸ்டன்ட் தேவாலயமே மலாக்காவில் உள்ள கிறிஸ்து தேவாலயம் ஆகும். மேலும் பித்தளை பீடத்தில் யோவான் 1v1 என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன- இன்னும் அங்கே உள்ளது. நீங்கள் இந்தத் தேவாலயத்திற்குச் சென்றால், அதன் சுவர்களில் அங்கு வாழ்ந்த தெய்வீக மனிதர்களின் பல சான்றுகளைக் காணலாம்.

கடவுளே, எங்கள் தேசம் உருவாகுவதற்கு முன்பே மலாக்காவில் உள்ள கடவுளின் திருச்சபையின் அஸ்திவாரங்கள் அமைக்கப்பட்டன. ஆண்டவரே, இந்த அற்புதமான நகரத்தின் மீது பல ஆண்டுகளாக உண்மையுள்ள மனிதர்கள் பிரார்த்தனையில் உண்மையாக நின்றதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இப்போதும் ஆண்டவரே மலாக்காவில் உள்ள தேவாலயங்களைக் கிறிஸ்துவின் “எக்லீசியா” என ஒன்றிணைக்க, அதனால் இந்த நகரத்தின் விதியைத் திறக்க அவர்களுக்கு ராஜ்யத்தின் சாவி கொடுக்கப்படும்.

மலாக்கா தேவாலயம் வலுவாகவும், துடிப்பாகவும் இருக்கட்டும்; அனைத்து நிச்சயமற்ற நிலைகளுக்கும் மத்தியில் ஒரு நேர்மறையான செல்வாக்குக்கான அவர்களின் அழைப்புக்கு உயரும். மலாக்காவில் உள்ள கடவுளின் தேவாலயம் தொடர்ந்து இறைவன் மீது நம்பிக்கை வைக்கட்டும். நகரத்தின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட தேவாலயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், அரசு ஊழியர்கள், வணிக மற்றும் சந்தை மக்களை நீங்கள் உயர்த்தலாம்.

உங்கள் மக்கள் இடைவெளியில் நின்று இந்த நகரத்துக்காகப் பரிந்து பேசுகையில், சொர்க்கத்தில் கட்டளையிடப்பட்டுள்ளதால் உங்கள் விருப்பம் இந்த நகரத்தில் நிறைவேறும் என்று அறிவிக்கிறோம். இந்தப்பழமையான கதவு வழியாக மறுமலர்ச்சி வரும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்து அறிவிக்கிறோம்.

கிறிஸ்துவின் பெயரில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்

 

உள் நுழை