வாரம் 8-11 – திருச்சபையில் தெய்வீக ஒழுங்கை மீட்டெடுத்தல்
(ஏப்ரல் 19 – மே 16)
புகழ் (கொலோ 1: 17-18)
கர்த்தராகிய இயேசுவே, எல்லா புகழ்ச்சிக்கும் காரணக் கர்த்தாவே! நீர் எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருந்தீர்கள்; எல்லாவற்றையும் ஒன்றாக வைத்திருக்கிறீர்கள். ஆண்டவரே, நீரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, நீரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். உண்மையில் ஆண்டவரே, உமக்குரிய இடத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் சரீரமான திருச்சபைக்கு உயிரைக் கொடுங்கள்.
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்கள் எல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப் பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.
சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. (1 கொரி 12: 12-14).
தூர நோக்கின் மறுசீரமைப்பு
பிதாவாகிய கடவுளே, திருச்சபை கிறிஸ்துவின் சரீரம் என்பதையும், அதற்குக் கர்த்தராகிய இயேசு தலைவராக இருக்கிறார் என்பதையும் தெளிவாகக் காணும்படி, எங்கள் கண்களைத் திறந்து அருளும். கர்த்தாவே, உங்கள் உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புதிய புரிதலையும் எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும். அத்துடன் நாங்கள் ஒருவருக்கொருவர் தேவை என்பதையும் காட்டுங்கள்! உங்கள் அன்பு எங்களை உமது மகிமைக்காகவும் நாமத்திற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் சேவை செய்வதற்கும்எங்களை நெருங்கிச் சேர்க்கட்டும். உங்கள் சரீரத்தின் பாகங்கள் ஒவ்வொன்றும் மிகவும் தனித்துவமானதும் மிகவும் மதிப்புமிக்கதும் ஆகும். பிதாவே, உமது நாம மகிமைக்காகவும் பெயருக்காகவும் இதைச் செய்யவும்.,
ஐக்கியத்தின் மறுசீரமைப்பு
ஆண்டவரே, உமது உயர்ந்த ஞானத்தில் உங்கள் திருச்சபையைப் பல பாகங்களையும் உறுப்புகளையும் கொண்ட மனித சரீரத்திற்கு உவமைபடுத்தியிருக்கிறீர். நாங்கள் சுயாதீனமாகச் செயல்பட்டு, உம்முடைய இறைவனிடமிருந்துஉங்களைப் பிரித்தெடுத்ததற்காகவும், பல முறை உம்மில் தவறியதற்காகவும் எங்களை மன்னியுங்கள். ஆனால், கர்த்தராகிய இயேசுவே, சரீரத்தின் தலைவராக, உங்கள் உறுப்பினர்களான எங்களைக் குணமாக்கி, தெய்வீக ஒழுங்கிற்குள் வழி நடத்துங்கள். ஆண்டவரே எங்களை மன்னியுங்கள். எங்களுக்குள் ஒருவருக்கொருவர் தேவையில்லை என்று யாரும் சொல்லக்கூடாது (1 கொரி 12: 14-26). பரிசுத்த ஆவியானவரே, எங்களுக்குள்ஒருவருக்கொருவர் ஒற்றுமைபடவும், உண்மையான ஐக்கியத்தில் எங்களை மீட்டெடுங்கள். இதன்வழி உங்களுடன் ஆற்றல் வாய்ந்த உறவில் இருக்க கிருபை புரியுங்கள்.
(நீங்கள் அறிந்த திருச்சபையின் உடைந்த ஐக்கியம் சூழ்நிலைகள் குறித்துப் பரிசீலித்து மனந்திரும்புங்கள். யோவான் 17:20 -23 படி ஐக்கியம் முழுமையாக மீட்டெடுக்க ஜெபியுங்கள்).
சேவையை மீட்டமைத்தல்
எங்களுக்குள் ’ஓர் ஊழியரின் இதயம்’ வர மீட்டெடுங்கள் பிதாவே!. நாங்கள் ஒருவருக்கொருவர் உடன்படாதபோதும்,நேர்மையான அக்கறையை வெளிப்படுத்தி, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவோம். ‘எங்களுக்குள் ஒருவருக்கொருவர் தேவை என்பதை நினைவில் கொள்ள எங்களுக்கு உதவுங்கள். எங்களில் ஓர் உறுப்பினர் பாதிக்கப்பட்டால், அனைத்து உறுப்பினர்களும் அவருடன் பாதிக்கப்படுகிறார்கள்; ஓர் உறுப்பினர் கெளரவிக்கப்பட்டால், அனைத்து உறுப்பினர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஏனெனில், சரீர அவயங்களுக்குள்பிரவினை என்பது இல்லை. (1 கொரி 12: 25-26).
பிதாவே, நாங்கள் உங்கள் தெய்வீக ஒழுங்கிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்துவின் முழுமை உமது திருச்சபையை நிரப்புகிறது, நாங்கள் அனைவரும் உமது நாமத்தின் மகிமைக்கு ஏற்ற நீடித்த கனிகளைத் தருவோம்(யோவான் 15: 8-17).
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.