பெர்லிஸ்கான பிரார்த்தனை

பெர்லிஸ் பற்றிய பொதுவான தகவல்:

  • அ. பரப்பளவில் மலேசியாவின் சிறிய மாநிலம் (820 சதுர கிமீ – 40 கிமீ X 20.5 கிமீ); மக்கள் தொகை (254,000 பேர், 2019 கணக்குப்படி).
  • மக்கள்தொகை 246,000 பேர் குடிமக்கள்; 8,000 பேர் குடிமக்கள் அல்லாதவர்கள்.
  • குடிமக்களில்  219,000 பூமிபுத்ரா; 19,000 சீனர்கள்; 3.000 இந்தியர்கள்; 5000 மற்றவர்கள் (பூமிபுத்ரா அல்லாதவர்= 11%).
  • ஆ. மருத்துவமனைகள் – ஓர் அரசு மருத்துவமனை; ஒரு தனியார் மருத்துவமனை.

முக்கிய வர்த்தகம் (2012 ஆம் ஆண்டு தரவு)

  • சேவைகள் (166b) – UniMAP, Uitm, பாலிடெக்னிக், மெட்ரிக் கல்லூரி.
  • விவசாயம் (RM843m) – மீன்வளம் – மலேசியாவின் மிகப்பெரிய ஒன்றாகும்.
  • போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தொடர்பு (RM713m) – பாடாங் பெசார் தரை-துறைமுகம் மற்றும் தாய்லாந்திற்கு ரயில் போக்குவரத்து.
  • உற்பத்தி (RM352m) – சிமெண்ட், (சர்க்கரை), ஜெஜாவி தொழிற்சாலைகள்.

பெர்லிஸில் உள்ள திருச்சபைகள் (14 திருச்சபைகள்):

  • கங்கார் (6): கத்தோலிக்க தேவாலயம், கங்கர் பாப்டிஸ்ட் சர்ச், பெர்லிஸ் பாப்டிஸ்ட் சர்ச், பெர்லிஸ் கிரேஸ் சென்டர் (AOG), சீர்திருத்த தேவாலயம், தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை.
  • ஜெஜாவி (5): சீன மெதடிஸ்ட் சர்ச், பரோயிசா ஹார்வெஸ்ட் அசெம்பிளி (தமிழ்/ஆங்கிலம்), இந்தோனேசிய ஐக்கியம், நேபாளி பெல்லோஷிப்.
  • ஆராவ் (1): ஆங்கிலிக்கன் சர்ச்
  • குவாலா பெர்லிஸ் (1): குவாலா பெர்லிஸ் பாப்டிஸ்ட் சர்ச்
  • காக்கி புக்கிட் (1): துதி மையம்
  • பெர்லிஸ் திருச்சபைகளுக்கான முக்கிய பிரார்த்தனைகள்:
  • திருச்சபை வருகை. சமீபகாலமாகக் கோவிட் 19 தொற்றுக் காரணமாகத் திருச்சபை ஆராதனைக்குத் தவறாமல் வருபவர்கள் குறைவு.
  • சுவிசேஷ நடவடிக்கைகள். திருச்சபை மூப்பர்கள் தனிப்பட்ட சுவிசேஷத்தை நம்பியிருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்கள். கோவிட் சூழ்நிலை காரணமாகத் தற்போது திருச்சபைக்கு வரும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி மாணவர்கள் அரிதாகவே இல்லை.

திருச்சபைகளின் ஒற்றுமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்

  • திருச்சபை பலப்படுத்தப்படவும், பொருத்தப்பட்டதாகவும், நல்லிணக்க ஊழியத்தில் நடக்கவும்.
  • திருச்சபைகளின் போதகர்கள், மூப்பர்கள் ஒற்றுமையுடன் கூட்டுப் பிரார்த்தனை.
  • தனது மக்களை நற்செயல்களுக்குள் வழிநடத்தவும், வழிகாட்டவும் மற்றும் அதிகாரமளிக்கவும் ராஜ்ய எண்ணம் கொண்ட ஆன்மீக போதகர்கள் / தலைவர்களை எழுப்புதல்.

சிறிய பிரார்த்தனை குழுக்களை எழுப்புதல்

  • ஆன்மிகப் போராட்டங்களுக்குத் தயாராக இருப்பவர்கள்,
  • திருச்சபை, மாநிலம், தேசம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்தல்,
  • இருளின் பல்வேறு கோட்டைகளை அடையாளம் காணவும்
  • மாநிலம்/தேசத்திற்கு எதிரான எதிரியின் அனைத்துத் தீயத் திட்டங்களையும் தகர்க்க கர்த்தரின் ராஜ்யம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

தயவு செய்து அறுவடையின் ஆண்டவரிடம் வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள், இதனால் அவர்கள் மாநிலத்தில் தேவாலயத்தைத் திட்டமிட்டு வளர்க்க முடியும்.

  • பெர்லிஸ் மாநிலத்திற்கான முக்கியப் பிரார்த்தனை காரியங்கள்
  • மாநிலத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்யுங்கள். ஏனென்றால், சீனர்கள் பாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குப் போதைப்பொருளை விநியோகிக்கிறார்கள்.
  • பிரார்த்தனைக்கான கூடுதல் விடயங்கள்:
  • கங்கார் மாநகர நிருவாகம் கடைகள், வியாபார மையப் பகுதிகளில் திருச்சபைகள் செயல்பட வழங்கிய அனுமதிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.