தேசத்திற்கான பிரார்த்தனை – மே 2024

குடும்பம்

கடவுள் நினைத்தபடி தனிக் குடும்பம்

  • கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாக மாறுதல் (ஆதி.2:24)
  • இனப்பெருக்கத்திற்காக ஓர் ஆணும் பெண்ணும் இணைதல் (ஆதி.1:28)
  • கிறிஸ்து சபையில் அன்புகூருவதைப் போல ஒரு கணவன் தன் மனைவியை நேசிக்க 

வேண்டும், மனைவி கர்த்தருக்கும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் கீழ்ப்படிய 

வேண்டும் (எபே. 5:22, 25-33; 6:1).

இன்று குடும்பம் கடவுள் நினைத்தது போல் அமைவதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

  • குடும்பங்கள் சிதைவதால் சமூகத்திலும் சிதைவு நிலை ஏற்பட்டுள்ளது.
  • தந்தையின்மை, விவாகரத்து, திருமண பந்தத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள், தற்கொலைகள், தெருக்களிலும் வீடுகளிலும் வன்முறை, வளர்ந்து வரும் ஓரினச் (LGBTQ) சமூகம், பாலின அடையாள நெருக்கடி, மிகத் தீவிரமாகக் கடவுளின் அன்பை மறுப்பது, அவரை நிராகரிப்பது போன்றவற்றை நாம் காண்கிறோம். 
  • தனிக் குடும்பத்தின் மீதான தாக்குதல்களின் மையமானது குடும்பங்களில் தந்தையின் ஆளுமை நிலையை அழிக்கும் முயற்சிகள் ஆகும்.
  • தந்தையின்மை – தந்தை இல்லாதது குடும்பத்திலும் சமூகத்திலும் பல நோய்கள் அல்லது  பிரச்னைகளுக்கு முக்கிய காரணியாக உள்ளது.
  • குழந்தைகளுக்குத் தந்தையின் அதிகாரம், அன்பு, வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் அவரிடமிருந்து சட்டபூர்வமான உணர்வு, நோக்குநிலை முதலியவை தேவை.
  • தந்தைமார்களே குடும்பத்தின் ஆணி வேர்கள் ஆவர்.

ஆண்களுக்கான பிரார்த்தனை

  • குடும்பத்தில் அன்பான, அக்கறையுள்ள தந்தையாகத் தங்கள் கடமையில் அதிகாரம் பெற்று ஆண்கள் உயர வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
  • தந்தைமார்கள்கள் தாங்கள் பெற்றோர்கள் என்ற நினைத்துச் செயலாற்றுகின்ற பெருமைக்கு எதிராக நாங்கள் பேசுகிறோம்.
  • தந்தைமார்கள் கிறிஸ்துவில் தாங்கள் யார் என்பதையும், பிதாக்களாக அவர்கள் என்ன செய்ய அழைக்கப்பட்டவர்கள் என்பதையும் தெரிந்துகொள்ளட்டும்.
  • சமூகத்திலும் குடும்பத்திலும் உங்களின் இடத்தையும் அதிகார நிலையையும் அழிக்கும் அனைத்து முயற்சிகளும்வெற்றியடையாது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.
  • நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பிலி.4:13இல் “உங்களைப் பலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும்; சிலவற்றை மட்டுமல்ல.
  • கர்த்தருக்குப் பயப்படுவீர்கள்.
  • உங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளை நேசிக்கவும்.
  • உங்கள் குழந்தைகளை அவர்கள் செல்ல வேண்டிய கடவுளின் வழியில் வளர்க்கவும்.
  • உபா.11:19,20இல் கொடுக்கப்பட்டுள்ள கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்; உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக வாழ்வீர்கள்.
  • எதிரி உங்களுக்காக விரும்பும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் கடவுள் உங்களை வழிநடத்தட்டும்.
  • நன்மை செய்வதில் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.
  • கர்த்தர் உங்களுக்காகப் போராடுகிறார். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பெற்றோரின் பிரார்த்தனை

அன்புள்ள தந்தையே, எங்கள் கடவுளே, எங்கள் நிலையான ஜெபம் தொடர்ந்து இருக்கட்டும்: “ஆண்டவரே, உமது வழியை எனக்குப் போதிக்கவும், நான் உமது உண்மையைப் பேசுவேன். உமது நாமத்திற்குப் பயப்பட என் இதயத்தை ஒன்றுபடுத்துங்கள். சங்கீதம் 86:11

நாங்கள் அறிவிக்கிறோம்,

• மனிதநேயப் பண்பாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்.

• இயேசு கிறிஸ்துவில் எங்களுக்கு உண்மையான நிலையான நம்பிக்கை இருக்கிறது.

• பெருகியுள்ள பகைமை நிறைந்த உலகில் நாங்கள் எத்தகைய சிரமங்களை எதிர் 

  கொண்டாலும், நாங்கள் ஜெபத்தில் உம்மிடம் வரலாம் இயேசுவே, நீங்கள் எங்களுக்காக 

  வருவீர்கள்.

• நாங்கள் எங்கள் பிரார்த்தனையின் மூலம் எதிர்த்துப் போராடுவோம்.

• நாம் அமைதியாகவோ அலட்சியமாகவோ இருக்க மாட்டோம். மேலும், கடவுளின் வழிகள்,   

  சத்தியத்திற்காக ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்.

• கிறிஸ்துவிடம் உள்ள வல்லமை, அதிகாரம் முதலியவற்றுடன் நாம் போராடுவோம். 

 “அனைத்து ஆட்சிக்கும் அதிகாரத்திற்கு வல்லமைக்கும் மேலானவர் . . . அவர் 

  எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழே வைத்து, சபைக்கு 

  எல்லாவற்றின் மேலும் அவரைத் தலைவராகக் கொடுத்தார். எபி.1:21,22.

• வாழ்க்கையின் சோதனைகள், எங்கள் சுய-விருப்பத்தின் இழுப்புக்கு மத்தியில், உங்கள் 

  பார்வையில் சரியானதைச் செய்ய, எதிர்கொள்ளும் எந்த விதமான சூழலையும்

  பொருட்படுத்தாமல், உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க எங்களுக்கு உதவுங்கள்.

• வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், உங்களின் மாறாத அன்பின் உறுதியை 

  எங்களுக்கு உறுதிப்படுத்துங்கள்.

• வேலை பளு, நாட்டங்களுக்கு மத்தியில், எதிரிகளிடமிருந்து வரும் தாக்குதல்கள் நமது 

  திருமணங்கள் மற்றும் நம் குழந்தைகள் மீது நம்மை எச்சரித்து, ஞானம், தைரியம் மற்றும் 

  உறுதியுடன் பதிலளிக்க எங்களுக்கு உதவுங்கள்.

குழந்தைகளுக்குக் குறிப்பாக ஊதாரி பிள்ளைகளுக்கு

இஸ்.49:25; எரே.31:16-17

• நீங்கள் எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுவீர்கள், அவர்கள் உங்களால் 

  கற்பிக்கப்படுவார்கள் என்ற உங்கள் வாக்குறுதிக்காக ஆண்டவரே நன்றி. ஏசாயா 54:13.

• எங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள். உமது சத்தியத்திற்கு அவர்களின் செவிகளைச்

  சாய்க்க அவர்களின் இதயங்களை மாற்றுங்கள்.

• அவர்களின் இதயங்களில் அத்தகைய வெற்றிடம் இருக்கட்டும், அந்த வெற்றிடத்தை 

  உங்கள் அன்பு, உண்மை, அமைதியால் மட்டுமே நிரப்ப முடியும் என்பதை உணர்த்துங்கள்.

• ஞானம் உங்களிடமிருந்தே வருகிறது, செயற்கை நுண்ணறிவால் அல்ல என்பதை அறிய, 

  புதிய யுகத் தத்துவங்கள் மற்றும் மார்க்சிய இறையியல் ஆகியவற்றிலிருந்து எங்கள் 

  குழந்தைகளைப் பாதுகாக்கவும்.

• உமது வார்த்தை அவர்களின் இதயத்தில் மாத்திரைகளாகப் பொறிக்கப்படட்டும். இதனால்,

 அவர்களின் அறிவு உலக ரீதியாக இல்லாமல், பைபிள் பார்வையில் பெறப்படும்.

• பெற்றோர்களாகிய நாங்கள், வழி தவறி சென்ற குழந்தைகளைக் கையாள்வதில் 

  விரக்தியோ, குற்ற உணர்ச்சியோ கொண்டு இருக்கமாட்டோம்.

• உமது வாக்குத்தத்தங்களை அறிந்து, எங்களின் ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவதில் 

  காணப்படும் கர்த்தருடைய மகிழ்ச்சியை நாங்கள் பெறுவோம்; வழிபாட்டு 

  அடிப்படையிலான வாழ்க்கை முறை, கர்த்தருடைய வார்த்தையில் இணைந்து 

  இருப்போம்.

• எங்களுடைய பலத்திற்கும் நம்பிக்கைக்கும் புத்துயிர் அளியுங்கள். ஆண்டவரே, வழியே 

 இல்லை என்று தோன்றும் போது நீங்கள் வழி செய்வீர்கள்.

• இயேசுவின் நாமத்தில் இப்போதே எங்கள் பிள்ளைகளைப் புதிய அக்கினியால் அபிஷேகம் 

  செய்ய நாங்கள் ஜெபிக்கிறோம்.