தேசத்திற்கான ஜெபம் – மார்ச் 2026
தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீட்பு
பிப்ரவரி மாதத்தில் சுசெட் ஹாட்டிங் (Suzette Hattingh) அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் “ஆம்” மற்றும் “ஆமென்” என்பதாய் இருக்கின்றன என்று நினைவூட்டினார். தேவன் தமது வார்த்தையில் மாற்றமடைவதில்லை. அவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர். இப்போது நாம் அதன் வெளிப்பாட்டைப் பார்க்கவில்லை என்பதனால் தேவன் மறந்துவிட்டார் அல்லது அவர் சொன்னதை நிறைவேற்றமாட்டார் என்று அர்த்தமில்லை. தாமதம் என்பது அவர் சொன்னதை மறுப்பதல்ல.
2 கொரிந்தியர் 1:19–21
தேவன் எத்தனை வாக்குத்தத்தங்களை அளித்திருந்தாலும் அவையெல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்பதாக இருக்கின்றன. ஆகையால், அவர் மூலம் “ஆமென்” என்று சொல்லப்படுவது தேவனுடைய மகிமைக்காகவே ஆகும்.
ஏசாயா 46:8–10
பழைய அதிசயங்களை நினைவுகூருங்கள்.
இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனத்தில் வையுங்கள். முந்திப் பூர்வ காலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன்; என்னைப் போன்றவர் வேறு யாரும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஆரம்பத்திலேயே முடிவை அறிவிக்கிறேன்; இன்னும் நடக்காததை முன்கூட்டியே சொல்லுகிறேன்.
என் திட்டம் நிலை நிற்பது உறுதி; நான் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று அறிவிக்கிறேன்.
இந்த மாதம் நம் ஜெப நேரத்தில் தேவன் தனிப்பட்ட முறையில் நமக்கு, நமது குடும்பங்களுக்கு, சபைகளுக்கு, ஊழியங்களுக்கு மற்றும் நமது தேசமான மலேசியாவிற்குக் கொடுத்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நினைவுகூருவோம்.
தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளவை; அவற்றை நாம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாதம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு அவற்றுக்காக ஜெபிப்போம்.
ஆபக்கூக் 2:1–3
நான் என் காவல் கோபுரத்தின் மேல் ஏறி என் காவல் இடத்தில் நின்று, கர்த்தர் என்னுடன் பேசுவது என்ன என்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது, நான் என்ன உத்தரவு சொல்லுவேன் என்றும் காண காத்திருப்பேன். அப்பொழுது கர்த்தர் என்னிடம்,
“நான் உனக்குக் கொடுக்கும் வெளிப்பாட்டைத் தெளிவாக எழுதிவை; அதை வாசிப்பவன் எளிதில் அறிவதற்காக எழுதுவாய்.
இந்தத் தொலைநோக்குப் பார்வை எதிர்காலத்திற்கானது. அது நிச்சயமாக நிறைவேறும்.
அது தாமதமாகும் போலத் தோன்றினாலும் பொறுமையாக காத்திரு; அது நிச்சயமாக நடக்கும்; தாமதிக்காது” என்றார்.
தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கும் நாம் ஜெபிக்க வேண்டிய படிகள் யாவை:
- தேவன் நமக்கு கொடுத்த வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் பற்றிக் கொள்ள வேண்டும்.
- ஆபக்கூக் போல காவலாளிகளாகத் தினமும் கர்த்தரின் சந்நிதியில் நின்று ஜெபிக்க வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவி நமக்குத் தெளிவான புரிதலை அளிப்பார்.
- தேவன் உமக்கு விளக்கிக் காட்டுகிறதை ஆபக்கூக் போல எழுதிக் கொள்ள வேண்டும்.
- தேவன் செய்ய வேண்டிய செயல்களை வெளிப்படுத்தினால், அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு நாம் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும்.
- நிறைவேற்றத்தின் அடையாளங்களைப் பார்க்கும்போது நன்றி செலுத்த வேண்டும்.
Top of Form
இந்த மாதம் ஒவ்வொரு வாக்குத்தத்தங்களையும் வாரம் வாரமாக எடுத்துக்கொண்டு ஜெபியுங்கள்.
ஒரே ஜெப நேரத்தில் அனைத்தையும் முடிக்க முயற்சிக்க வேண்டாம்.
1. தேவன் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்கான ஜெபம்
(உங்கள் குடும்பம், வேலை மற்றும் ஊழியத்திற்கான வாக்குத்தத்தங்கள் உட்பட)
இந்த வாக்குத்தத்தங்களை மறுபடியும் நினைவுகூர்ந்து அவற்றுக்காக ஜெபியுங்கள்.
ஜெபம்
கர்த்தாவே, கிறிஸ்து இயேசுவில் உம்முடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் “ஆம்” மற்றும் “ஆமென்” என்பதாய் இருக்கின்றன என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நீர் எனக்குச் சொன்ன இந்த வாக்குத்தத்தங்களுக்காக (வேதாகம வசனங்களைச் சொல்லுங்கள்) உமக்கு நன்றி.
நீர் என்னுடன் பேசின அந்த நேரத்திற்காகவும் (நினைவில் இருந்தால் தேதி அல்லது காலத்தைச் சொல்லுங்கள்) உமக்கு நன்றி.
கர்த்தாவே, நீர் அவற்றை மறந்துவிடவில்லை என்பதற்காக நன்றி.
அவற்றைப் பற்றி தெளிவான புரிதலை நான் பெறும்படி ஜெபிக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதற்காக உமக்கு நன்றி.
கர்த்தாவே, இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்குத் தடையாக என்னுள் ஏதாவது இருந்தால் அதை எனக்குக் காட்டும்.
என்னுள் நல்ல கிரியையை ஆரம்பித்த நீர் அதை நிறைவு செய்யும் தேவன் என்பதற்காக உமக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமேன்.
2. மலேசியாவுக்காகத் தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்கான ஜெபம்
தேவன் கொடுத்த முக்கியமான நான்கு தீர்க்கதரிசன வார்த்தைகளை மீண்டும் வாசித்து மேலான புரிதலுக்காக ஜெபியுங்கள்.
தேவன் வாக்குத்தத்தம் அளித்த பல விஷயங்கள் ஏற்கனவே நிறைவேற ஆரம்பித்து விட்டன.
இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தில் நீங்களும் ஒரு பங்காக இருக்கிறீர்கள்.
ஆகையால், தேவனுக்கு நன்றி செலுத்தி, சரியான பாதையில் நிலைத்திருக்க உதவி கேட்போம்.
a) ஏசாயா 66:8–9 (2015 – போதகர் டேனியல் ஹோ)
ஒரு தேசம் ஒரே நாளில் பிறந்ததுண்டா?
ஒரு ஜனங்கள் ஒரே நேரத்தில் உருவானதுண்டா?
ஆனால், சியோன் வேதனைப்படத் தொடங்கிய உடனே அவள் பிள்ளைகள் பிறந்தார்கள்.
“பிறப்புக்குக் கொண்டு வந்து நான் பிறக்கவிடாமல் இருப்பேனா?” என்று கர்த்தர் கேட்கிறார்.
“இல்லை, இந்தத் தேசத்தைப் பிறக்கவிடாமல் நான் தடுக்கமாட்டேன்” என்று உங்கள் தேவன் கூறுகிறார்.
b) சகரியா 2:5–13 (2021 – MUFW தொடக்கம்)
ஓடிப்போய், அந்த இளைஞனிடம், ‘எருசலேம் மதில்கள் இல்லாத நகரமாக மாறும்; ஏனென்றால், அதில் ஏராளமான மக்களும் மிருகங்களும் இருப்பார்கள். 5 நான் அதைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன், நான் அதன் மகிமையாக இருப்பேன்’ என்று கர்த்தர் அறிவிக்கிறார்.
10 கர்த்தர் கூறுகிறார்: “அழகான எருசலேமே, நான் உன்னிடத்தில் வாசம்பண்ண வருகிறேன். 11 அந்த நாளில் அநேக ஜாதிகள் கர்த்தரிடத்தில் சேருவார்கள், அவர்களும் என் ஜனமாயிருப்பார்கள். நான் உன்னிடத்தில் வாசம்பண்ணுவேன், பரலோகப் படைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 12 யூதா தேசம் பரிசுத்த தேசத்தில் கர்த்தருக்குச் சொந்தமானதாக இருக்கும். அவர் மீண்டும் எருசலேமைத் தமக்கென்று நகரமாகத் தேர்ந்தெடுப்பார். 13 எல்லா மனுஷரே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து செயல்படுகிறார்.”
c) நெகேமியா 3 (2021 – MUFW தொடக்கம்)
இந்த ஜெபச் சுவரைக் கட்டுவது அனைத்து வெவ்வேறு ஜெபக் குழுக்களையும் திருச்சபை பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எந்தவொரு குழுவிற்கும் இந்தப் பணி மிகப் பெரியது.
d) உன்னதப்பாட்டு 2:10–13 (மார்ச் 2021)
“என் பிரியமானவளே எழுந்து வா, என்னுடன் வா.
குளிர்காலம் கடந்தது, மழைக்காலம் முடிந்தது.
பூக்கள் பூக்கின்றன.
குருவிகள் பாடும் காலம் வந்தது.
புறாக்களின் சத்தம் கேட்கிறது.
அத்திமரங்கள் கனியத் தொடங்குகின்றன.
திராட்சைத் தண்டுகள் மலர்கின்றன.
எழுந்து வா, என்னுடன் வா.”
3. மலேசியாவுக்கான தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மேல் ஜெபம்
கர்த்தாவே, மலேசியாவின்பால் உமக்கு ஆழ்ந்த அக்கறை இருக்கிறது என்பதற்காக உமக்கு நன்றி.
மலேசியாவுக்காகப் பாரம் சுமக்கும் நடுநிலை ஜெபக்காரர்களை நீர் எழுப்பியிருக்கிறீர் என்பதற்காக உமக்கு நன்றி. உமது திட்டங்கள் இந்தத் தேசத்தில் “பிறக்க” அவர்களைப் பயன்படுத்துகிறீர். (ஏசாயா 66:8இன்) படி உமக்கு நன்றி.
நாங்கள் ஒன்றிணைந்து மலேசியாவைச் சுற்றி ஜெபத்தின் அக்கினிச் சுவரைக் கட்டும்படி நீர் எங்களைச் சேர்த்ததற்காக உமக்கு நன்றி. உமது மகிமையின் அடையாளங்களை மலேசியாவில் காண்கிறோம் என்பதற்காக உமக்கு நன்றி.
உமது உற்சாகமே எங்களைச் செயல்படத் தூண்டியது. உமது பிரியமான மணவாட்டியை எழுப்பி உம்மிடத்திற்கு இழுத்தது நீரே.
- மழைக்காலம் முடிந்து மலர்கள் மலர்கின்ற காலத்தை நாங்கள் பார்க்கிறோம் என்பதற்காக உமக்கு நன்றி. உன்னதப்பாட்டு 2:10இன் படி மலேசியாவில் புதிய பூக்கள் மலரும் காலத்தைப் பார்க்கிறோம். இங்குப் பாடும் காலமும் பரிசுத்த ஆவியின் சத்தமும் தெளிவாகக் கேட்கப்படுகிறது என்பதற்காக உமக்கு நன்றி.
- பரிசுத்த ஆவியே, நீர் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர் என்பதற்காக உமக்கு நன்றி. நீர் செய்கிற காரியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறீர். மலேசியாவுக்கான தேவனுடைய இருதயத்தை அதிகமாக வெளிப்படுத்துகிறீர் என்பதற்காக உமக்கு நன்றி.
- சீனம், மலாய், தமிழ் போன்ற மொழிக் குழுக்கள் ஒன்றிணைந்து ஜெபச் சுவரைக் கட்டும்படி நீர் எங்களை ஒன்றுபடுத்தினீர் என்பதற்காக உமக்கு நன்றி.
- நீங்கள் தலைமுறைகளை ஒன்றிணைத்துள்ளீர். 2 பில்லியன் குழந்தைகள் திட்டத்தை ஆரம்பிக்கும் இந்த நேரத்தில், குழந்தைகளும் கூட அதில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
- எங்கள் தேசத்தின் மேல் உமது மகிமை இறங்கிவருகிறது என்பதற்கான சாட்சிகள் அல்லத் அடையாளங்கள் உண்மையிலேயே தென்படுகின்றன; பல நகரங்களில் அதிகமான திருச்சபைகளும் ஜெபக் குழுக்களும் தங்கள் சபைகளில் ஜெபப் பலிபீடங்களை அமைக்க எழுந்து வருவதைக் காண்கிறோம்.
மலேசியாவைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளின் மீது ஜெபமும் அறிவிப்பும். (மலேசியாவைப் பற்றி பல தீர்க்கதரிசன வார்த்தைகள் உரைக்கப்பட்டுள்ளன. அவற்றை இணைப்புப் பகுதியில் (Appendix) பார்க்கவும்.)
மலேசியாவைப் பற்றி நீங்கள் எங்களுக்கு அளித்த வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் நாங்கள் நினைவுகூரும் போது, உமது வாக்குத்தத்தங்களில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் உடலுக்கு மகத்தான ஒன்றுபாட்டைக் கொண்டு வருகிற அநேக ஜெபக் குழுக்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சகரியா 2:5–11இல் கூறப்பட்டபடி பல ஜாதிகளும் இனங்களும் கர்த்தருடன் இணைந்து தேவனுடைய ஜனங்களாக மாறுவார்கள் என்று நாம் அறிவிக்கிறோம். இரட்சிப்பின் பெரு சுனாமி அலையொன்று இந்தத் தேசத்தில் வரும் என்று நீர் சொன்னீர். அது நிறைவேறும் என்று அறிவிக்கிறோம்.
கிழக்கு மலேசிய திருச்சபைகளில் புதிய காற்று வீசுகிறது என்று அறிவிக்கிறோம்.
அது முழு மலேசியாவுக்கும் வெற்றி தரும் அபிஷேகத்தைக் கொண்டு வரும். இந்தத் தேசத்தின் மூல ஜனங்கள் எழுந்து நிற்பார்கள் என்று அறிவிக்கிறோம். இந்தத் தேசத்தின் விதியைத் திறக்க அவர்கள் பாடவும் ஆடவும் செய்வார்கள்.
போதகர்களும் வணிகத் தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என்று அறிவிக்கிறோம். இதனால், அவர்களுக்கிடையே உள்ள பழைய சுவர்கள் இடிக்கப்படும். மலேசியாவில் தேவனுடைய சபை பெரிய ஒன்றுபாட்டுக்குள் வரும் என்று அறிவிக்கிறோம்.
மலேசியா ஒரு நாள் இந்தப் பிராந்தியத்திற்கு ஒருமைபாட்டையும் ஒன்றுசேர்வையும் கொண்டு வரும் தேசமாக ஆகட்டும். கர்த்தாவே, இப்போது நீர் இந்தப் பிராந்தியத்தின் மேல் ஆராதனையின் நெடுஞ்சாலையையும், மனந்திரும்புதலின் வழியையும், சமாதானமும் சமரசமும் ஏற்படும் பாதையையும் அமைத்துக் கொண்டிருக்கிறீர்.
மலேசியா ஆசியாவின் எழுச்சியைத் தொடங்கச் செய்கிற தூண்டுதலாக இருக்கட்டும்.
(2016இல் போதகர் டோம் ஹெஸ் (Tom Hess) அவர்கள் கண்ட தரிசனத்தின் படி தென்கிழக்கு ஆசியா ஒரு துப்பாக்கி போல உள்ளது: இந்தோனேசியா அதன் குழாயாகவும், சிங்கப்பூர் அதின் அடிக்குத்தியாகவும், மலேசியா அதின் தொடுப்பானியாகவும் (விசை) இருந்தன. இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து ஆவிக்குரிய எழுச்சியை ஏற்படுத்தும் ஒரு துப்பாக்கியாக ஆகும் என்று அவர் கண்டார்.
மலேசியா ஆசியாவின் எழுச்சியைத் தொடங்கும் கருவியாக இருக்கும் என்று நீர் சொன்னீர். அது நிறைவேறும் என்று நாங்கள் அறிவிக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்.