தேசத்திற்கான ஜெபம் – ஜூன் 2026

மலேசியாவின் அடுத்த தலைமுறையை வலுப்படுத்துதல்

தேவனால் வடிவமைக்கப்பட்டு, அடையாளத்தில் வேரூன்றி, ஆவியால் வல்லமையாக்கப்படும் தலைமுறையை எழுப்புதல்

நாம் அடுத்த தலைமுறைக்காக மிக முக்கியமான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மலேசியா முழுவதும் பல இளைஞர்கள் அடையாள குழப்பம், மன அழுத்தம், நம்பிக்கையின்மை, அடிமைத்தனங்கள், இலக்கமய (digital) சிறைபிடித்தல், வாழ்க்கையின் நோக்கத்தைத் தொலைத்தல் போன்ற போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், தேவன் நோக்கமாய்ச் செயல்பட்டு, பரிசுத்தத்தில், தைரியத்தில், எழுப்புதலின் அக்னியில் நடக்கும் ஒரு தலைமுறையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
இது வெறும் சமூகப் பிரச்சினை அல்ல. இது ஒரு தலைமுறையின் தேவ நோக்கத்தைக் குறிவைக்கும் ஆவிக்குரிய போராட்டமாகும்.

கர்த்தர் இந்தத் தலைமுறையின் மேல் ஒரு தீர்க்கதரிசன ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறார். திருச்சபை ஜெபத்திலும், சீஷத்துவத்திலும், ஆவிக்குரிய விழிப்புணர்விலும் பதிலளித்தால், தேவனுடன் நெருக்கத்திலும் வல்லமையிலும் எழும் தலைமுறையை நாம் காண்போம்.

ஏசாயா 44:3–4

“தாகமாயிருக்கிற நிலத்தின் மேல் தண்ணீரையும்,
வறண்ட பூமியின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;
உன் சந்ததியின் மேல் என் ஆவியையும்,
உன் பிள்ளைகளின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
அவர்கள் புல்லைப்போலவும்,
நீரோடைகளருகிலுள்ள அலரி மரங்களைப்போலவும் வளர்வார்கள்.”

யோவேல் 2:28

“அதற்குப் பிறகு நான் மனுஷர் எல்லார் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.
உங்கள் குமாரர்களும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்;
உங்கள் மூப்பர்கள் சொப்பனங்கள் காண்பார்கள்;
உங்கள் வாலிபர் தரிசனங்கள் காண்பார்கள்.”

ஜெபம்

கர்த்தாவே, அடுத்த தலைமுறை உமக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் நன்றியுடன் அறிவிக்கிறோம். குழப்பம், மனப் போராட்டங்கள், இருள் ஆகியவற்றின் நடுவிலும், இந்தத் தலைமுறைக்கான உமது நோக்கங்கள் நிலைத்திருக்கும் என்று அறிவிக்கிறோம்.

மலேசியாவின் இளைஞர்களை உம்முன் உயர்த்துகிறோம்; கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை, ஜொகூர் முதல் கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, பகாங், கெடா, பெர்லிஸ், மலாக்கா, நெகிரி செம்பிலான் வரை; சபா மற்றும் சரவாக்கின் உள் பகுதிகளிலிருந்து பல்கலைக்கழக வளாகங்கள் வரை; நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் நீள் வீடுகள் வரை — தேவனே, இந்தத் தலைமுறையின் மேல் உமது ஆவியை ஊற்றும்.

உமது சத்தத்தை அறிந்தும், பரிசுத்தத்தில் நடந்தும், சத்தியத்தில் நிலைத்தும், எழுப்புதலின் அக்னியைச் சுமந்தும் நிற்கும் குமாரர்களையும் குமாரத்திகளையும் எழுப்பும். நிராகரிப்பு, தந்தையற்ற நிலை, பாதுகாப்பின்மை, ஒப்பீடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, மற்றும் பயம் ஆகியவற்றால் ஏற்பட்ட காயங்களைச் சுகமாக்கும்.

அடுத்த தலைமுறையின் மேல் இருக்கிற இருளின் ஒவ்வொரு செயற்பாட்டையும் முறியடிக்கவும்:

  • தற்கொலை
  • அடிமைத்தனங்கள்
  • அடையாள குழப்பம்
  • அசுத்தமான பாலியல் பழக்கங்கள்
  • கலகம்
  • அக்கறையின்மை
  • வஞ்சகம்
  • நம்பிக்கையின்மை

இந்தத் தேசத்தின் இளைஞர்களின் வழியாகச் சுகப்படுத்துதல், மீட்பு, தைரியம், பரிசுத்தம், தேவனுடன் நெருக்கம் ஆகிய நதிகள் பெருகிப் பாயட்டும். உலகத்திற்காக எரிவதைவிட இயேசுவுக்காக எரியும் தலைமுறையை எழுப்பும். அவர்களை இரகசிய ஸ்தலத்தில் வடிவமைத்து, உமது மகிமைக்காக வெளிப்படையாக வல்லமையுடன் பயன்படுத்தும்.

அடுத்த தலைமுறையை வலுப்படுத்துவதில் நாம் தேவனுடன் எவ்வாறு இணைந்து செயல்படலாம்?

I. தேவன் அடுத்த தலைமுறையை அடையாளம் சந்திப்பின் மூலம் வலுப்படுத்துகிறார்

ஜெபம்

கர்த்தாவே, இந்தத் தலைமுறை உமது குமாரர்களும் குமாரத்திகளுமாகிய அவர்களின் அடையாளத்தில் நிலைநிறுத்தும். இளைஞர்களின் இருதயங்களை உமது சத்தத்தைக் கேட்க விழிப்பூட்டும்.

சத்தம், கவனச் சிதறல், இலக்கவியல் குழப்பம் முதலியவை நிறைந்த இந்தத் தலைமுறையில், உமது சத்தம் தெளிவாகக் கேட்கப்படட்டும்.

இந்தத் தலைமுறைக்குத் தேவனுடைய வார்த்தைக்காகத் தினமும் பசியை உண்டாக்கும்.

“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” — மத்தேயு 4:4

வெறுமையான பொழுதுபோக்குகளின் அடிமைத்தனத்தை முறியடித்து, வேதவசனம், சத்தியம், உம்மோடு நெருக்கம் ஆகியவற்றிற்கான ஆவிக்குரிய பசியை எழுப்பும்.

இளைஞர்கள் உமது குரலைக் கேட்பதைத் தடுக்கும் ஒவ்வொரு தடையையும் அகற்றுங்கள்.

“என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன; நான் அவற்றை அறிந்திருக்கிறேன்; அவை என்னைப் பின்பற்றுகின்றன.” — யோவான் 10:27

ஒப்பீடு, பயம், பாதுகாப்பின்மை, காமம், குழப்பம், வஞ்சகம் ஆகியவற்றின் சத்தங்களை அமைதிப்படுத்தும்.

பரிசுத்த ஆவியானவர் உமது வார்த்தையை அவர்களுக்கு உயிர்ப்பிக்கட்டும்.

“நான் உங்களுக்குச் சொல்கிற வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது.” – யோ 6:63

வேதாகமம் அவர்களுடைய இருதயங்களில் ஜீவனுள்ளதாகவும் செயலாற்றக்கூடியதாகவும் மாறட்டும்.

சொப்பனங்கள், தரிசனங்கள், தீர்க்கதரிசன சந்திப்புகள் மூலம் பேசும்.

“அதற்குப் பிறகு நான் மனுஷர் எல்லார் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் குமாரர்களும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்கள் காண்பார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்கள் காண்பார்கள்.” யோவேல் 2:28

உமது சத்தத்தைப் பகுத்தறிந்து தைரியமாகக் கீழ்ப்படிகிற தீர்க்கதரிசன இளைஞர்களை எழுப்பும்.

உமது அழைப்புக்குக் கீழ்ப்படிவதற்கான விசுவாசத்தையும் தைரியத்தையும் விடுவிக்கும்.

“ஆகையால் விசுவாசம் கேள்வியினாலே வரும்; கேள்வி கிறிஸ்துவின் வார்த்தையினாலே வரும்.” — ரோமர் 10:17

செயலற்ற மனநிலையையும் பயத்தையும் முறியடிக்கவும். இந்தத் தலைமுறை தைரியமான கீழ்ப்படிதலோடு எழும்பட்டும்.

கர்த்தாவே, இந்தத் தலைமுறை உமது காலத்தைக் தவறவிடாதபடி காத்தருளும்.

கல்லூரிகள், பள்ளிகள், கிராமங்கள், சபைகள், வீடுகள் முதலியவற்றை உமது மகிமையால் சந்திக்கும்.

மலேசியாவின் அடுத்த தலைமுறை ஜீவனுள்ள தேவனைச் சந்திக்கட்டும்.

II. தேவன் அடுத்த தலைமுறையைச் செயல்முறை, குணநலன், பரிசுத்தம் முதலியவற்றின் மூலம் வலுப்படுத்துகிறார்

ஜெபம்

கர்த்தாவே, அடுத்த தலைமுறையினரைத் தேவபக்தியுள்ள குணநலனைக் கொண்டவர்களாக உருவாக்கும்.

உயர்வுக்கு முன் செயல்முறை, மறைவாகச் செயல்படுதல், கீழ்ப்படிதல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கர்த்தாவே, இந்தத் தலைமுறை உம்மை ஆழமாகத் தேட கற்றுக்கொடுக்கும்படி வேண்டுகிறோம்.

கவனச் சிதறலும் உடனடி திருப்தியும் நிறைந்த உலகத்தில், பொறுமை, நெருக்கம், மற்றும் ஆவிக்குரிய பசியை எழுப்பும்.

இளைஞர்களின் உள்ளங்களில் உம்முடைய சந்நிதிக்கு ஏங்கும் தாகத்தை உருவாக்கும் ஆண்டவரே.

“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுகிறதுபோல, என் ஆத்துமா தேவனே, உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” — சங்கீதம் 42:1

உமது சந்நிதியை விட பொழுதுபோக்கு இனி அவர்களை அதிகமாக திருப்திப்படுத்தாமல் இருக்கட்டும்.

இளைஞர்களிடத்தில் முதலான அன்பை மீண்டும் நிலைநிறுத்தும் ஆண்டவரே.

“ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த (உன் முதல் அன்பை) விட்டுவிட்டாய் என்பதைக் குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு. ஆகையால் நீ எதிலிருந்து விழுந்தாயென்று நினைத்து மனந்திரும்பி, ஆரம்பத்தில் செய்த கிரியைகளைச் செய்.” — வெளிப்படுத்தின விசேஷம் 2:4–5

இளைஞர்களை மீண்டும் ஜெபம், ஆராதனை, பரிசுத்தம், மற்றும் முழு அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைக்குத் திருப்பும் ஆண்டவரே

இந்த தலைமுறையினர் கிறிஸ்துவில் நிலைத்திருக்கக் கற்றுக்கொடுக்கும் ஆண்டவரே.

ஏனெனில், என்னைத் தவிர நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.” யோவான் 15:5

சுயநம்பிக்கை, வெளிப்பாட்டு மனநிலை, மற்றும் ஆவிக்குரிய வறட்சியை முறியடிக்கவும்.

இளைஞர்களிடையே பிரார்த்தனை பலி பீடங்களை எழுப்புங்கள்

இளைஞர் ஜெபக் கூட்டங்கள், கல்லூரி வளாக எழுச்சிகள், ஆராதனைச் சந்திப்புகள், வேதாகமப் படிப்புகள், மற்றும் இரகசிய ஜெப அறைக்கான தாகத்தை எழுப்பும்

இந்தத் தலைமுறை எதையாவது இழக்க நேர்ந்தாலும் நீதிக்காக நிற்கும் தைரியத்தையும், மனுஷ பயத்தைவிட கர்த்தருக்குப் பயப்படும் இருதயத்தையும் அருளும்.

நோன்பும் பரிசுத்த அர்ப்பணிப்பும் நிறைந்த ஆவியைத் தூண்டுதல்

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைக் காண்பார்கள்.” — மத்தேயு 5:8

சமரசத்தை விட பரிசுத்தத்தைத் தேர்ந்தெடுக்கும் தலைமுறையை எழுப்பும்.

கர்த்தாவே, ஆழமான உமது ஆழத்தை அழைக்கட்டும்.

மலேசியாவில் எழுப்புதல் வரும்வரை உம்முடைய முகத்தைத் தேடும் தலைமுறையை எழுப்பும் ஆண்டவரே.

III சீர்கெட்ட கலாச்சாரத்தில் சத்தியத்திற்காக நிற்க, அடுத்த தலைமுறைக்குக் கடவுள் வல்லமையளிக்கிறார்.

ஜெபம்

கர்த்தாவே, இந்தக் காலத்தின் ஆவிக்குரிய போராட்டங்களை ஜெயிக்க இந்தத் தலைமுறையைப் பலப்படுத்தும். இன்றைய பாபிலோனின் மத்தியில் தானியேல்களைப் போல நிற்கும் இளைஞர்களை உறுதியோடும், பரிசுத்தத்தோடும், தைரியத்தோடும் நிலைத்திருக்க எழுப்பும்.

இளைஞர்கள் கிறிஸ்துவில் தங்களுக்குள்ள அதிகாரத்தை அறியட்டும்.

“தேவன் கிறிஸ்துவோடே நம்மையும் எழுப்பி, கிறிஸ்து இயேசுவுக்குள் பரலோக இடங்களில் அவரோடே உட்கார வைத்தார்.” — எபேசியர் 2:6

பாதிக்கப்பட்ட மனநிலையை முறியடித்து, ஆவிக்குரிய போர்வீரர்களை எழுப்பும்.

அவர்களைத் தேவனுடைய முழுக் கவசத்தையும் அணிய ஆயத்தப்படுத்தும்.

“பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கும்படிக்குத் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” — எபேசியர் 6:11

இந்தத் தலைமுறை சமரசத்துக்கு எதிர்த்து நிற்க உதவும்:

  • ஊடகங்கள்
  • உறவுகள்
  • பொழுதுபோக்குகள்
  • கொள்கைகள்
  • கலாச்சாரத்தின் அழுத்தங்கள்

அவர்களைக் கீழ்க்கண்டவற்றுக்கு எதிராகப் பலப்படுத்தும்:

  • மனஅழுத்தம்
  • மனச்சோர்வு
  • தற்கொலை எண்ணங்கள்
  • அடிமைத்தனங்கள்
  • அசுத்தப் பழக்கங்கள்
  • அடையாள குழப்பம்
  • நண்பர் அழுத்தம்
  • நிராகரிக்கப்படுவோமோ என்ற பயம்

அடுத்த தலைமுறையின் மேல் உள்ள அரண்களைக் இடித்தெறியும்.

“நாங்கள் போராடுகிற ஆயுதங்கள் மாம்சத்துக்குரியவைகள் அல்ல. அரண்களை நிர்மூலமாக்குகிற தேவ வல்லமையுள்ளவைகள். தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாக எழும்புகிற தர்க்கங்களையும் எல்லா மேட்டிமைகளையும் நாங்கள் நிர்மூலமாக்கி, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைபடுத்துகிறோம்.” – 2 கொரி.10:4–5

கீழ்க்கண்ட அரண்களை அழித்துப்போடும்:

  • நம்பிக்கையின்மை
  • தந்தையற்ற மனநிலை
  • கலகம்
  • சுயவெறுப்பு
  • இலக்கவியல் அடிமைத்தனம்
  • சூனியமும் வஞ்சகமும்
  • செயலற்ற தன்மையும் அக்கறையின்மையும்

அவர்களின் இருதயங்களைச் சமரசத்திலிருந்து காத்தருளும்.

“எல்லாவற்றிலும் அதிகமாய் உன் இருதயத்தைக் காத்துக்கொள். ஏனெனில், ஜீவ ஊற்றுகள் அதினின்று புறப்படும்.” — நீதிமொழிகள் 4:23

மறைக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் வெளிக்கொண்டு வந்து, சுகத்தையும் விடுதலையையும் அருளும்.

இளைஞர்களிடையே ஆராதிப்பவர்களையும் காவலாளிகளையும் எழுப்பும்.

“அவர்களின் வாயில் தேவனுடைய துதி இருக்கவும், அவர்களின் கைகளில் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் இருக்கவும் செய்வாயாக.” — சங்கீதம் 149:6

பள்ளிகள், கல்லூரிகள், சமூகங்கள் முதலியவற்றின் மேல் இருக்கும் இருளை உடைக்கும் ஆயுதமாக ஆராதனை மாறட்டும்.

கர்த்தாவே, மலேசியாவின் அடுத்த தலைமுறையின் நோக்கத்தை அழிக்க முயல்கிற ஒவ்வோர் ஆவிக்குரிய அரணையும் வெளிப்படுத்தி வேரோடு பிடுங்கும்.

இயேசுவின் இரத்தத்தினால் விடுதலை, பரிசுத்தம், சுகம், எழுப்புதல் முதலியவற்றை விடுவிக்கும்.(வெளிப்படுத்தும்.

IV. தேவன் அடுத்த தலைமுறையை இரகசிய ஸ்தலத்தின் நெருக்கத்தின்

மூலம் வலுப்படுத்துகிறார்

ஜெபம்

ஆண்டவரே, உமது இருதயத்திற்கு ஏற்ற இளம் தாவீதுகளை எழுப்பும்.

பொது அங்கீகாரத்தை விட உமது பிரசன்னத்தை அதிகமாக நேசிக்க இந்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடும்.

இரகசிய ஸ்தலத்தில் ஆராதிப்பவர்களை உருவாக்கும்.

“மனுஷன் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” — 1 சாமுவேல் 16:7

உமது சந்நிதியில் நெருக்கம், அர்ப்பணிப்பு, ஆனந்தம் முதலியவற்றை மீட்டெடுக்கும்.

துதி ஆராதனை அவர்கள் வாழ்க்கை முறையாகவும் பலமாகவும் ஆகட்டும்.

மறைமுகப் போராட்டங்களுக்கு அவர்களைத் தயார்படுத்துங்கள்

தாவீது கோலியாத்தை எதிர்கொள்ளும் முன் சிங்கத்தையும் கரடியையும் எதிர்த்துப் போராடியதுபோல, இந்தத் தலைமுறையையும் மறைவான வெற்றிகளின் (ஜெயங்களின்) மூலம் தயார்ப்படுத்தும்.

காணப்படாத இடங்களில் உண்மையாய் நிலைத்திருக்க கற்றுக்கொடுக்கவும்.

தாழ்மையான தலைவர்களை எழுப்பும்.

இளைஞர்களைப் பெருமை, தற்பெருமை, வெளிப்பாட்டுக் கலாச்சாரத்திலிருந்து பாதுகாப்பீராக.

தாழ்மையிலும் அன்பிலும் வேரூன்றிய ஊழிய மனப்பான்மைகளை உருவாக்குவீராக.

ஆண்டவரே, இந்தத் தலைமுறை எழுப்புதலின் நெருப்பையும், அதைத் தக்கவைக்கும் குணத்தையும் கொண்டிருக்கச் செய்வீராக.

V. தேவன் அடுத்த தலைமுறையை அறுவடைப் புலத்திற்கு அனுப்புவதன் மூலம் வலுப்படுத்துகிறார்

ஜெபம்

ஆண்டவரே, தேசங்கள் மீதான உமது இருதயத்திற்கு அடுத்த தலைமுறையினரை எழுப்பும்.

அக்கறையின்மை, சுகவாழ்வு, சுயநல வாழ்க்கையின் ஆவி முதலிய எல்லாவற்றையும் தகர்த்தெறியும்.

இளைஞர்கள் இந்தத் தலைமுறையில் வெறுமனே பிழைத்து வாழ்வதற்காக அழைக்கப்படவில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவுக்கு ஒளியாகவும் சாட்சிகளாகவும் இந்தத் தலைமுறைக்குள் அனுப்பப்படவே அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தும்.

தேவனுடைய அழைப்புக்கு “ஆம்” என்று சொல்லும் தலைமுறையை எழுப்பும்.

“இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.” — ஏசாயா 6:8

சாமுவேல் உமது சத்தத்துக்குப் பதிலளித்ததுபோல், முழு இருதயத்தோடும் கீழ்ப்படிய தயாரான இளைஞர்களை எழுப்பும்.

மலேசியா முழுவதும் இளம் சுவிசேஷப் பணியாளர்கள், சுவிசேஷகர்கள், பரிந்துரைப்போர், சபை நடுவோர், ஆராதிப்போர், சீர்திருத்தக்காரர்கள் போன்றோர் எழும்பட்டும்.

இழந்துபோனவர்களுக்காக இரக்கத்தின் அக்கினியை ஏற்றும்

“அவர் திரளான ஜனங்களைக் கண்டபோது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்தும் சிதறியும் இருந்ததால், அவர்கள்மேல் மனதுருகினார்.” — மத்தேயு 9:36

உடைந்து போனவர்களிடமும், ஏழைகளிடமும், மறக்கப்பட்டவர்களிடமும், இன்னும் சுவிசேஷம் எட்டாதவர்களிடமும் உள்ள அலட்சிய மனப்பான்மையை உடைத்தெரியச் செய்யும் ஆண்டவரே.

இந்தத் தலைமுறைக்குக் கீழ்க்கண்டவற்றிற்கான உமது இருதயத்தை அருளும்:

  • கல்லூரிகள்
  • பள்ளிகள்
  • கிராமங்கள்
  • உள் பகுதிகள்
  • நகரங்கள்
  • ஜாதிகள்

இளைஞர்கள் சுவிசேஷத்தைத் தைரியமாகப் பிரசங்கிக்க வல்லமையை அளிக்கவும்.

“உலகமெங்கும் போய்ச் சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” — மாற்கு 16:15

பயம், வெட்கம், மிரட்டுதலை அகற்றும்.

இந்தத் தலைமுறையை மன தைரியத்தால் நிரப்பும்:

  • சுவிசேஷத்தைப் பகிர்வதற்கு
  • நோயாளிகளுக்காக ஜெபிப்பதற்கு
  • மற்றவர்களைச் சீஷர்களாக்குவதற்கு
  • பொதுவாக இயேசுவுக்காக நிற்பதற்கு

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வேலை இடங்கள், சமூக ஊடகங்கள், சமூகங்களில் அஞ்சாத சாட்சிகளை எழுப்பும்.

மலேசியாவிலிருந்து பிற ஜாதிகளுக்கெல்லாம் ஆவிக்குரிய எழுப்புதலை அனுப்பும் ஆண்டவரே.

“என்னிடத்தில் கேள்; நான் ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமது சுதந்தரமாகவும் தருவேன்.” — சங்கீதம் 2:8

கர்த்தாவே, மலேசியாவின் இளைஞர்களைப் பயன்படுத்தி ஆசியாவிலும் பூமியின் ஜாதிகளுக்கு இடையில் உமது தாக்கத்தை ஏற்படுத்தும்..

ஒவ்வோர் இனத்திலும் பின்னணியிலும் இருந்து இளைஞர்களை எழுப்பும்:

  • மலாய்
  • சீனர்
  • இந்தியர்
  • பழங்குடியினர்
  • சபா மற்றும் சரவாக் பழங்குடிகள்

அறுவடைப் புலத்திற்கான நிலைத்தன்மையை உருவாக்கும்.

“அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம்.” — மத்தேயு 9:37

இந்தத் தலைமுறையை வெறும் உணர்ச்சி நிறைந்த தருணங்களுக்காக மட்டும் அல்ல, முழுமையான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மற்றும் உண்மைத் தன்மையுள்ள வாழ்க்கைக்காக ஆயத்தப்படுத்தும் ஆண்டவரே.

சுகவாழ்வு, புகழ், அல்லது வெற்றியைவிட இயேசுவை அதிகமாக நேசிக்க கற்றுக் கொடுக்கவும்.

சிலுவையைச் சுமந்து முழுமையாக உம்மைப் பின்பற்றத் தயாரான தலைமுறையாக அவர்களை மாற்றும்.

அறிக்கை

மலேசியாவில் ஒரு புதிய தலைமுறை எழும்பும் என்று பிரகடனம் செய்கிறோம்.

அடுத்த தலைமுறை இருள், குழப்பம் அல்லது நம்பிக்கையின்மைக்கு ஆளாகாது என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம்.

இறைவனின் குரலை அறிந்த மகன்களும் மகள்களும் அடங்கிய ஒரு தலைமுறையை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

இளைஞர்களின் மனங்களும் உணர்வுகளும் குணமடைவதாக என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம்.

மனஅழுத்தம், மனச்சோர்வு, அடிமைத்தனங்கள், தற்கொலை முதலிய எண்ணங்களிலிருந்து விடுதலையை அறிவிக்கிறோம்.

இந்தத் தலைமுறையின் மீது தூய்மையையும், பரிசுத்தத்தையும், இறை வேட்கையையும் நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

பள்ளிகள், கல்லூரி வளாகங்கள், கிராமங்கள், நகரங்கள், தேவாலயங்களில் எழுப்புதல் அக்கினிகளை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும், சீஷர்களை உருவாக்கவும், சமுதாயத்தை மாற்றியமைக்கவும் பரிசுத்த ஆவியானவரால் வல்லமையூட்டப்பட்ட ஒரு தலைமுறையை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

நமது நகரங்களின் இளைஞர்கள் இருளின் நடுவில் ஒளியாகப் பிரகாசிப்பார்கள் என்று நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

நாட்டின் உட்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தரிசனம், கண்ணியம் மற்றும் ஆவிக்குரிய அதிகாரத்துடன் எழுவார்கள் என்று நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

மலேசியாவில் பழங்குடியினர், பல்லினங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையே ஒற்றுமையை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், நகரங்கள், மற்றும் சபைகளில் எழுப்புதலின் அக்னி எரியும் என்று அறிவிக்கிறோம்.

பரிசுத்த ஆவியினால் வல்லமையடைந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நோயாளிகளைச் சுகப்படுத்தி, சீஷர்களை உருவாக்கி, சமுதாயத்தை மாற்றும் தலைமுறையைப் பிரகடனப்படுத்துகிறோம்.

எங்கள் நகரங்களின் இளைஞர்கள் இருளின் நடுவே ஒளிகளாய்ப் பிரகாசிப்பார்கள் என்று பிரகடனப்படுத்துகிறோம்.

உள் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தரிசனத்துடனும், கண்ணியத்துடனும், ஆவிக்குரிய அதிகாரத்துடனும் எழும்புவார்கள் என்று அறிவிக்கிறோம்.

மலேசியாவில் இனங்கள், பழங்குடிகள், மற்றும் தலைமுறைகளுக்கிடையே ஒற்றுமையை பிரகடனப்படுத்துகிறோம்.

அடுத்த தலைமுறையின் மேல் அடையாளங்களும், அற்புதங்களும், இரட்சிப்புகளும், பரிசுத்த ஆவியின் பெருக்கங்களும் நிகழும் என்று அறிவிக்கிறோம்.

தேவனுடைய மகிமைக்காக விழிப்புணர்த்தப்பட்ட தலைமுறையை மலேசியா காணும் என்று அறிவிக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில். ஆமென்.