தேசத்திற்கான ஜெபம் – ஜனவரி 2026

ஒரு புதிய நாள், ஒரு புதிய அபிஷேகம்

முக்கிய வசனம்:

எசாயா 28:5–6 (NIV)
அந்நாளில் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மீதமுள்ளவர்களுக்கு
மகிமையான கிரீடமாகவும் அலங்காரமான முடியாகவும் இருப்பார்.
நியாயம் விசாரிக்க அமர்ந்திருப்பவருக்கு அவர் நீதியின் ஆவியாக இருப்பார்;
வாசல்களில் போரைக் களைந்து திருப்புகிறவர்களுக்கு அவர் வலிமையின் ஆதாரமாக இருப்பார்.

2026 ஆம் ஆண்டிற்கான MUFW-இன் தரிசனம்:  புதிய நாள், ஒரு புதிய அபிஷேகம்

ஏன் ஒரு புதிய அபிஷேகம்?

  • தேவன் நம்மிடையே ஒரு புதிய காரியம் செய்யும்படியாக, நம்முடைய தற்போதைய சிந்தனையிலிருந்து நாம் வெளியே வருவதற்காகவும்; புதிய திராட்சரசத்தைப் புதிய தோல்பைகளில் ஊற்றுவதற்காகவும்.
  • வாசல்களில் நடக்கும் போரைக் களைத்துத் திருப்புவதற்காகவும்.

2026-ஆம் ஆண்டுக்குள் நாம் எப்போதும் போல” என்ற தன்னிறைவு மனநிலை பாங்கோடு நுழைய முடியாது. நம்முடைய சோம்பேறித் தனத்தையும், மதச்சடங்கு சிந்தனையையும் உடைத்தெறிய ஓர் அபிஷேகம் நமக்குத் தேவை.

மனித வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் குழந்தைகள், குடும்பங்கள், திருச்சபை என இருளின் அலை வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேவனைத் தேடும் நம்முடைய வேட்டையை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

நம்முடைய கைகளைப் போருக்கும், நம்முடைய விரல்களைப் போராட்டத்திற்கும் பயிற்றுவிக்கக்கூடியவர் அவர் மட்டுமே. (சங்கீதம் 144:1)

2026-இல் நாம் எவ்வாறு ஒரு தளராத (relentless) நிலைப்பாட்டை ஏற்கலாம்?

2 நாளாகமம் 20:17

கர்த்தர் ராஜா யெகோசபாத்திற்கு கொடுத்த 4 கட்டளைகள்

  1. உங்கள் நிலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
  2. உறுதியாக நில்லுங்கள்
  3. பயப்படாதீர்கள்; மனம் தளராதீர்கள்
  4. அவர்களை எதிர்கொள்ளப் போங்கள்

ஜெபம்

1. தைரியமான புதிய முறியடிக்கும் சிந்தனை (Courageous New Breakthrough Mindset) பெறுவதற்கான ஜெபம்

கர்த்தாவே, 2026 இல் புதிய ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் உமது சமுகத்தில் நின்றிருக்கிறோம்.
மதச்சார்ந்த மனப்பாங்கை உடைத்தெறியக்கூடிய ஒரு புதிய அபிஷேகத்தை எங்களுக்கு அருள வேண்டுகிறோம். எங்களைச் சோம்பேறிகளாகவும், உதவியற்றவர்களாகவும்
மாற்றிவிடும் அந்த மதநம்பிக்கையற்ற சிந்தனையிலிருந்து விடுவியுங்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் வல்லமையிலும், பரிசுத்தத்திலும் மகத்தானவர்;
அற்புதங்களைச் செய்கிறவர். உமது மகிமையும், உமது மகத்துவமும் எங்களின் மூலம் வெளிப்படும்படியாக எங்களுக்கு அதிகாரத்துடனும் வல்லமையுடனும் அபிஷேகம் அருளும்.

  • ஆகவே, இப்போது ஒரு சிந்தனை மாற்றத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.
  • எங்கள் உதடுகளால் உம்மைக் கனம் பண்ணி (மரியாதை செய்து), எங்கள் இருதயங்களில் உம்மிடமிருந்து தூரமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. உம்மை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. மனிதர்களால் போதிக்கப்பட்ட விதிகளாக மட்டுமே எங்கள் போதனைகள் இருக்கக் கூடாது. (மத்தேயு 15:8–9)
  • எங்கள் திருச்சபை ஆராதனைகளின் உண்மையான நிலையை எங்கள் கண்களுக்கு வெளிப்படுத்துங்கள். உம்மை மகிமைப்படுத்தாதவற்றை நாங்கள் தெளிவாகக் காணும்படியாகச் செய்யுங்கள். பல வேளைகளில் எங்கள் பிரசங்கமும், ஆராதனையும் ஆவியின் வல்லமையின் வெளிப்பாட்டை இழந்திருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
  • கர்த்தாவே, 2026 ஆம் ஆண்டு எங்கள் ஆராதனைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தட்டும். உமது வல்லமையும், உமது அன்பும் தெளிவாக வெளிப்படும் ஆராதனையாக அது மாறட்டும்; அனைவரும் உம்மைக் கண்டு பயபக்தியுடனும் அச்சத்துடனும் நிற்கும்படியாகச் செய்யுங்கள்.
  • கர்த்தாவே நீர் வாரும்; உமது மகிமையின் வெளிப்பாட்டிற்கான பசியையும் தாகத்தையும் எங்களுக்குள் உண்டாக்குங்கள்.
  • தினந்தோறும் உம்மைத் தேடும் தளராத ஆவியை எங்களுக்கு அருளும்; உமது நாமத்தைப் பரிசுத்தமாகக் கௌரவிக்கவும், உம்முடைய மகத்துவத்தைக் கண்டு அச்சத்தோடு நிற்கவும் எங்களை நடத்துங்கள்.
  • எங்கள் கூட்டுத் ஜெப பலிபீடங்கள் உமது சமுகத்தால் நிரம்பட்டும்;
    எங்களைச் சுற்றி நடப்பவற்றை அல்ல, தேவனுடைய மகிமையையும், மகத்துவத்தையும் நோக்கி எங்கள் கண்களை நிலைநிறுத்துவோமாக.
  • கர்த்தாவே, எங்கள் கண்களை உம்மேல் திருப்புங்கள்; எங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் எங்களைச் சிதறவோ, நசுக்கவோ இடமளிக்காதிருப்பீராக.

2. கர்த்தருக்குள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையிலே உறுதியாக நிற்பதற்கான  

  ஜெபம்

கர்த்தாவே, ஜெபம் என்பது வெறும் வேண்டுகோள் அல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீர் எங்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய நிலையை ஏற்றுக்கொண்டு அதில் நிற்பதே ஜெபம்.

ஆகவே, அந்த நிலையை நாங்கள் கைவிடமாட்டோம்; இதைக் கூறி அறிவிக்கிறோம்:

  • கிறிஸ்து  இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே நீர் எங்களை அவருடனே மரித்தோரிலிருந்து எழுப்பி, பரலோகத்திலுள்ள இடங்களில் அவரோடு சேர்ந்து அமர வைத்தீர். (எபேசியர் 2:6)
  • கிறிஸ்துவின் மூலம் நீர் எங்களை உமது பரிசுத்த ஜனங்களின் சுதந்தரத்தில் பங்குகொள்ள எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்திலிருந்து எங்களை விடுவித்து, நீர் நேசிக்கும் உமது குமாரனின் ராஜ்யத்திற்குள் எங்களை கொண்டு வந்தீர். (கொலோசெயர் 1:12–13)
  • கிறிஸ்துவின் மூலம் அவருடைய இரத்தத்தால் நம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, நம் கடவுளும் பிதாவுமாகிய அவருக்கு ஊழியம் செய்ய ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளதால், நாம் இந்த நிலையில் உறுதியாக நிற்கிறோம். (வெளிப்படுத்தின விசேஷம் 1:5–6)
  • ஆகவே, ஜெபத்தில் உம்மை நோக்கி எங்கள் கைகளை உயர்த்தும் ஒவ்வொரு நேரத்திலும், இந்த நிலையிலே நாங்கள் உறுதியாக நிற்போம்.

3. எதிரியை எதிர்கொள்ள தைரியத்தையும் நிலைத்தன்மையையும் (Courage & Resilience)

   கேட்கும் ஜெபம்

கர்த்தாவே, ஜெபத்தில் எங்கள் நிலைகளை எடுத்துக்கொள்ளும் இந்த நேரத்தில்,
எதிரியை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றுபட்டுத் தளராமல் நிற்கும்படியாக நீர் எங்களை வலிமைப்படுத்த வேண்டுகிறோம்.

  • கர்த்தாவே, 2026 முழுவதும் நாங்கள் வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்கும் படியாக எங்களுக்கு உதவி செய்யும். சாத்தானின் எல்லா யுக்திகளுக்கும் எதிராக உறுதியாக நிற்கும்படியாகத் தேவனுடைய முழு ஆயுதத்தையும் அணிய எங்களை நடத்தும்.
  • சத்தியத்தின் கச்சையையும், தேவனுடைய நீதியின் சரீர கவசத்தையும் அணிந்து கொண்டு, எங்கள் நிலைப்பாட்டில் நிற்க எங்களுக்குப் பயிற்சி கொடுங்கள். நற்செய்தியிலிருந்து வரும் சமாதானத்தைக் காலணிகளாக அணிந்து எப்போதும் ஆயத்தமாக நிற்க எங்களைப் பயிற்றுவியும். இவை அனைத்திற்கும் மேலாக, பிசாசின் அக்கினி அம்புகளைத் தடுக்க விசுவாசத்தின் கேடயத்தைப் பிடித்துக் கொள்கிறோம். மேலும், இரட்சிப்பை உங்கள் தலைக்கவசமாக அணிந்து கொண்டு, கடவுளுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொள்கிறோம். (எபேசியர் 6:14–19)
  • பயம், மிரட்டல் உணர்வுகளுக்குக் காரணமான ஆவி எங்கள் இதயங்களிலும் மனங்களிலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமாட்டோம், ஆனால், எங்களுக்குச் சக்தி, அன்பு மற்றும் சுய ஒழுக்கத்தை அளிக்கும் ஆவியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். (2 தீமோத்தேயு 1:7)
  • பயமோ நம்பிக்கையின்மையோ எங்கள் மனங்களை ஆட்கொள்ள அனுமதிக்கமாட்டோம். மாறாக, எங்கள் ஆத்துமாவை நோக்கி நாங்கள் “வலிமையாயிரு; பயப்படாதே. உன் தேவன் உன் சத்துருக்களை அழிக்க வருகிறார்; உன்னை விடுவிக்க வருகிறார்,” என்று சொல்வோம். (ஏசாயா 35:4)

கர்த்தாவே, எங்கள் பாறையாகிய கர்த்தரை நாங்கள் ஸ்தோத்திரிக்கிறோம்.

நீர் போருக்காக எங்கள் கைகளை  பயிற்றுவிப்பீராக; போராட்டத்திற்கு எங்கள் விரல்களுக்கு திறன்கள் அளிப்பீராக.

நீரே எங்கள் அன்புள்ள துணையும், எங்கள் கோட்டையும்; நீரே எங்கள் பாதுகாப்புக் கோபுரமும், எங்கள் மீட்பரும் ஆகுவீர்.

நீரே எங்கள் கேடயம்; உம்மிடத்தில் நாங்கள் அடைக்கலம் கொள்கிறோம்.

இயேசுவின் நாமத்தினாலே நீர் தேசங்களை அடக்கி வைப்பீர். (சங்கீதம் 144)

இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.