தேசத்திற்கான ஜெபம்: ஜனவரி 2025

2025 ஆம் ஆண்டு பௌதீக மற்றும் ஆன்மீக தளங்களில் பெரிய முடுக்கத்தின் ஆண்டாக இருக்கும். 2024 முடிவடைந்தபோது, நாடுகள் முன்பு எப்போதும் இல்லாத மாற்றங்களைச் சந்தித்தன, அதன் விளைவுகளை நாம் இன்னும் அறியவில்லை. பல விஷயங்கள் இயக்கத்தில் வந்துள்ளன என்பதை ஆன்மீக ரீதியாக உணர்கிறேன், இது நம் அனைவரையும் பாதிக்கும்.

மலேசியாவில் உள்ள தேவனுடைய திருச்சபையாகிய நாம் இதற்குத் தயாராக இருக்கிறோமா?

இதனால்தான் தேவன் நமக்கு ஏசாயா 62:10 இல் ‘வாசல்களின் வழியாகக் கடந்து செல்லுங்கள்‘ என்ற வார்த்தையைக் கொடுத்துள்ளார்.

நம்மில் பலர் ஜெப வாழ்க்கையில் வளர்ந்திருப்பதாகவும், தேவனுடைய பிரசன்னத்தின் சில ஊக்கமளிக்கும் அடையாளங்களையும் கண்டிருந்தாலும், நாம் இருக்கும் இடத்தில் தங்க முடியாது. நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும், 2025 இல் நமக்கு வரும் எதையும் எதிர்கொள்ள சிறந்த தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது தேசத்திற்கான தேவனுடைய சித்தம், திட்டங்களுடன் இணைவதற்காக 2025 ஐ கடந்து செல்ல நம் இருதயங்களிலும் மனத்திலும் ஒரு பெரிய மாற்றம் இருக்க வேண்டும்.

தேவன் நம்மிடம் என்ன செய்யச் சொல்கிறார்?

வாசல்களின் வழியாக கடந்து செல்லுங்கள், வாசல்களின் வழியாக கடந்து செல்லுங்கள்! மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.

நெடுஞ்சாலையைக் கட்டி எழுப்புங்கள், கட்டி எழுப்புங்கள்! கற்களை அகற்றுங்கள். தேசங்களுக்காக ஒரு கொடியை உயர்த்துங்கள்.

10-12 வாசல்களின் வழியாக நடந்து செல்லுங்கள். புறப்பட்டுச் செல்லுங்கள்! 

     மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். 

நெடுஞ்சாலையைக் கட்டுங்கள். அதைச் செய்யுங்கள்!

குப்பைகளை அகற்றுங்கள், எல்லா மக்களுக்கும் ஒரு கொடியை, ஓர் அடையாளத்தை உயர்த்துங்கள்!

ஆம்! தேவன் உலகம் முழுவதற்கும் அறிவித்துள்ளார்: 

“சீயோன் குமாரத்தியே, பார்! உன் இரட்சகர் வருகிறார்,

தாம் சொன்னதைச் செய்ய ஆயத்தமாக, தாம் வாக்களித்ததை நிறைவேற்ற தயாராக” வருகிறார்.

தேவன் சொல்வதாக நான் காணும் 3 விஷயங்கள்

  1. அவர் நமக்காகத் திறந்துள்ள வாசல்களின் வழியாகக் கடந்து செல்ல வேண்டும். இதன் பொருள் நாம் இப்போது எழுந்து செயல்பட வேண்டும் – வெறும் ஜெபம் மட்டுமல்ல. நமது சொந்த மனநிலைகள் நமது தேசத்தில் தேவன் செயல்படுவதை வரம்புக்குட்படுத்த நாம் அனுமதிக்க முடியாது. நமது கூடாரங்களை விரிவாக்கி, கயிறுகளை நீட்டி, மூளையைப் பலப்படுத்தி, தேவன் நமக்காகச் செயல்படுவதை வரம்புக்குட்படுத்தாமல் இருக்க வேண்டிய காலம் இது (ஏசாயா 54:2). நமது தேசத்தின் மீது ஜெப கூடாரம் அமையும் வரை மேலும் ஜெப பலிபீடங்கள் கட்டப்பட வேண்டும். பரிசுத்த அதிருப்தியுடன் நமது தற்போதைய நிலையைத் தாண்டி நாம் செல்ல வேண்டும்!
  2. கர்த்தர் வருவதற்கான நெடுஞ்சாலையைக் கட்டுங்கள். அவர் மலேசியாவில் உள்ள அனைவருக்கும் இரட்சகராக வருகிறார்.
  3. நெடுஞ்சாலை கட்டுவதையும் இயேசு வருவதையும் தடுக்கும் குப்பைகளையும் கற்களையும் அகற்றுங்கள். இந்தக் கற்கள் எவை என்று நாம் நம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

2025 ஆம் ஆண்டைத் தொடங்க MUFW நிகழ்ச்சி நிரலில் என்ன உள்ளது?

  • நீங்கள் எப்படி உபவாசித்து ஜெபிப்பீர்கள் என்பதை முடிவு செய்யலாம், ஆனால், வாரத்தின் முதல் சில நாள்களைத் தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம். 7 நாள்கள் செய்ய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் 3 நாள்களாவது உபவாசித்து ஜெபிக்க ஒதுக்குங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 வாசல்களைக் கடந்து செல்ல தேவன் நமக்கு உதவுமாறு கேட்போம். பரிசுத்த தைரியம், விடாமுயற்சி, தேவன் மீதான விசுவாசத்தின் முற்றிலும் வேறுபட்ட நிலைக்கு நாம் உயர்வோம் என்று ஜெபிப்போம்.
  • 52 மணி நேரம் ஒரு வருடத்தில் உள்ள 52 வாரங்களைக் குறிக்கிறது. இந்த ஆண்டிற்கான நமது முதற்கனிகளாக நாம் இதை தேவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.
  • MUFW இன் முக்கியக் குழுவினர் 52 மணிநேரத்தை ஞாயிறு ஜனவரி 5 இரவு 8-10 மணி பலிபீட நேரத்தில் தொடங்கும். இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை ஜனவரி 6 ஆம் தேதி மூத்த போதகர் பிலிப் லின்னும் (Skyline Sib Sabah); செவ்வாய்கிழமை ஜனவரி 7 ஆம் தேதி போதகர் பெனடிக்ட் ராஜன் (Calvary Community Church JB) kஆகியோர் பங்கேற்பார்கள்.
  • 2025க்கான நமது ஜெபங்கள்:
  • தற்போதைய நிலையில் இருந்து பரிசுத்த அதிருப்திக்கான வாசல்களைக் கடந்து செல்லுதல்.
  • பயத்தின் வாசல்களைக் கடந்து பரிசுத்த தைரியத்தைப் பெறுதல்.
  • நமது பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து தேவனுடைய தெய்வீக நோக்கத்திற்குள் நுழைதல்.
  • நம்பிக்கையின்மை, மனச்சோர்வின் வாசல்களைக் கடந்து, விடாமுயற்சியின் ஆவியைப் பெற்று, ஒருபோதும் கைவிடாமல் இருத்தல். (லூக்கா 18: 1-8)
  • அவிசுவாசத்தின் வாசல்களைக் கடந்து தேவன் மீதான விசுவாசத்தில் உயர்தல்.
  • கர்த்தாவே, என் ஆவியிலும் மலேசியாவில் உள்ள தேவனுடைய திருச்சபையிலும் பரிசுத்த அதிருப்தி எழும்ப வேண்டுகிறேன்.
  • காலேப், யோசுவாவைப் போல வேறுபட்ட ஆவியுள்ள மனிதர்களாக மாறி, அதன் மூலம் அங்குள்ள மாற்றங்களை காண விரும்புகிறோம், யோசுவா,  காலேபின் கதைகளில் மட்டும் திருப்தி அடையமாட்டோம்; அதன் பொருள் என்னவென்று அனுபவிக்க விரும்புகிறோம்.
  • கர்த்தாவே, தெய்வீக நோக்கத்துடன் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். என் வாழ்க்கை, என் குடும்பம், என் வேலை, என் திருச்சபை மற்றும் என் தேசத்திற்கான உமது நோக்கத்திற்குள் வருவதிலிருந்து உலகின் பரபரப்பு என்னைத் தடுக்க அனுமதிக்க மாட்டேன்.
  • உறுதியுடனும் நோக்கத்துடனும் என் ஜெப பலிபீடத்தைக் கட்ட விரும்புகிறேன் என்று அறிவிக்கிறேன். தேவனுடைய வேத வார்த்தையின் அத்தியாயங்களை வாசித்து, உமது குரலைத் தெளிவாகக் கேட்க விரும்புகிறேன்; என் தனிப்பட்ட பலிபீடத்தின் அடுத்த நிலைக்கு நகர கிருபையின் ஆவியைக் கேட்கிறேன்.
  • நீர் எங்களுக்கு நியமித்த பங்கைச் சுதந்தரிக்கக்கூடிய முதிர்ச்சியடைந்த புத்திரர்களாக மாற விரும்புகிறோம். அடுத்த நிலைக்குச் செல்வதை வரங்கள் மற்றும் ஆளுமைகளில் உள்ள வேறுபாடுகள் அல்லது புண்படுத்தல்கள் தடுக்க அனுமதிக்க உதவுங்கள்.
  • மலேசியாவில் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முதிர்ச்சி ஏற்படும்படி ஜெபிக்கிறோம், இது நாம் அவருக்குள் வளர்ந்து, ஒவ்வொரு பகுதியும் தனது பணியைச் செய்யும்போது நமது வெவ்வேறு வரங்களில் சுமுகமாகப் பாய்ந்தோடச் செய்யும். (எபேசியர் 4: 13-16)
  • அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் உள்ள திருச்சபையைப் போல எனக்கும் மலேசியாவில் உள்ள கிறிஸ்துவின் சரீரத்திற்கும் பரிசுத்த தைரியத்தை வேண்டுகிறோம் கர்த்தாவே.
  • உமது வார்த்தையைப் பேசவும் மிகுந்த தைரியத்துடன் எங்கள் விசுவாசத்தில் வாழவும் எங்களுக்குத் திறமையை அளியும். (அப்போஸ்தலர் 4:29-30)
  • நீண்ட காலமாக அச்சுறுத்தலின் ஆவி எங்களை முடக்க அனுமதித்தோம், ஆனால், இப்போது, இந்த ஆண்டு நாங்கள் எதிர்கொள்ளும் எந்தச் சவால்களுக்கும் மிகுந்த ஞானத்துடனும் பரிசுத்த தைரியத்துடனும் பதிலளிக்க அன்பு, வல்லமை மற்றும் தெளிவான மனத்தின் ஆவியை எங்களுக்குத் தாரும். (2 தீமோத்தேயு 1:7)
  • கர்த்தாவே, எங்களில் உள்ள அவிசுவாச ஆவியை முறியடிக்க உம்மீது விசுவாசம் வேண்டும்.
  • ‘இதைச் செய்ய முடியாது’ என்று எப்போதும் சொல்லி, எங்கள் மனநிலைகளில் எதிரி ஒரு வரம்பை விதித்துள்ளான் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். கர்த்தாவே, இதை நிறுத்தி, உம்மைத் தேடுகிறவர்களுக்கு நீர் பலனளிக்கிறவர் என்று விசுவாசிக்கும் புதுப்பிக்கப்பட்ட விசுவாச மனநிலையைக் கேட்கிறோம். (எபிரெயர் 11:6)
  • ஜெபிக்கும்போது சோர்வடையாமல் நமது பலிபீடங்களைக் கவனத்துடன் பராமரிக்கப் பரிசுத்த விடாமுயற்சியை எங்களுக்குத் தாரும். இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிற உம்மைத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீர் நீதியை நிலை நாட்டுவீர். (லூக்கா 18:7)
  • கர்த்தாவே, 2025 எங்கள் தேசத்தில் கர்த்தருக்கு ஒரு நெடுஞ்சாலை கட்டப்படும்படி கிறிஸ்துவின் சரீரத்தில் பெரிய ஒத்துழைப்பின் ஆண்டாக இருக்க வேண்டுகிறோம். இந்தச் தேசத்தின் மீதான உமது அன்பை நாங்கள் காண்கிறோம். 2025 ஆம் ஆண்டு, ஒவ்வொரு மொழிக் குழுவிலிருந்தும் ஒவ்வொரு சபையிலிருந்தும் உள்ள தேவ ஜனங்களாகிய நாங்கள் அனைவரும் “ஒரே சாலையில் ஒரே திசையில் நடந்து, உள்ளளவிலும் வெளியளவிலும் ஒன்றாக இருப்போம், ஏனெனில், அனைவரையும் ஆளுகிற, அனைவர் மூலமாகவும் செயல்படுகிற, நம் அனைவரிலும் உறைகிற ஒரே எஜமானர், ஒரே தேவன், ஒரே பிதா மட்டுமே உள்ளார்!” என்று ஜெபிக்கிறோம். (எபேசியர் 4:4-6 MSG)

நமது வசதி மண்டலத்திற்கு அப்பாற்பட்டு நமது கூடாரங்களை விரிவாக்கி, கயிறுகளை நீட்டி, மூளையைப் பலப்படுத்தும் ஆண்டாக 2025 இருக்கட்டும்! உமது ராஜ்யம் வரவும், உமது சித்தம் மலேசியாவில் நிறைவேறவும், இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், ஆமென்.