தேசத்திற்கான ஜெபம் – பிப்ரவரி 2025
பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசாரியத்துவம்
புதிய ஏற்பாட்டின் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசாரியத்துவ கருத்தானது கிறிஸ்து மூலமாக, எல்லா விசுவாசிகளும் தேவனின் சேவைக்காகப் பிரித்தெடுக்கப்பட வேண்டிய ஆசாரியர்கள் என்பதை வலியுறுத்துகிறது, அவருடைய ராஜ்யத்தில் சிலாக்கியங்களும் பொறுப்புகளும் உண்டு. 1 பேதுரு 2:5-9 விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தைப் பற்றி குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள நம்மை வழிநடத்துகிறது. முதலாவது, விசுவாசிகள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சிலாக்கியம் பெற்றவர்கள். விசுவாசிகளின் ஆசாரியத்துவத்தைப் பற்றி அறிய வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், நாம் ஒரு நோக்கத்திற்காகத் தெரிந்து கொள்ளப்பட்டோம்: ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துவதற்கும் (எபிரெயர் 13:15-16) “நம்மை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களைச் சொல்வதற்கும் ஆகும்.” (1 பேதுரு 2:10). எனவே, நமது நோக்கம் வாழ்க்கையாலும் (1 பேதுரு 2:5) வார்த்தையாலும் (1 பேதுரு 2:9), தேவனுக்குச் சேவை செய்வதாகும். அதாவது, இதன் பொருள் அனைத்துக் கிறிஸ்தவர்களும் தேவனிடம் நேரடி தொடர்பும் மற்றும் ஆசாரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளனர்.
பிரதிஷ்டை என்பது, அடிப்படையில், ஏதோ ஒன்றை அல்லது யாரையாவது புனித நோக்கத்திற்காகப் பிரித்தெடுக்கும் செயலாகும். இது தேவனுக்கான வேண்டுமென்றே செய்யப்படும் அர்ப்பணிப்பு, பரிசுத்தம் மற்றும் தெய்வீக சேவையைக் குறிக்கிறது. ரோமர் 12:1-2 கிறிஸ்தவ பிரதிஷ்டையின் சாராம்சத்தை உள்ளடக்கிய முக்கியமான பகுதியாகும். இங்கே, அப்போஸ்தலர் பவுல் விசுவாசிகளைச் சடங்கு பலிகள் மூலம் அல்ல, மாறாகத் தங்கள் வாழ்க்கையையே ஜீவ பலியாக அல்லது தொடர்ச்சியான பிரதிஷ்டையாகச் செலுத்துமாறு வேண்டுகிறார். இது தேவனுக்கான தினசரி அர்ப்பணிப்பைக் குறிக்கிறது, இங்கே ஒருவரின் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் அவருடைய சேவைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது எண்ணங்கள், செயல்கள், அணுகுமுறைகள் முதலியவற்றைப் பாதிக்கும் முழுமையான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இது மனத்தின் மாற்றத்தையும், உலக முறைகளிலிருந்து விலகுவதையும் உள்ளடக்கிய, ஒருவரின் வாழ்க்கையைத் தேவனுடைய சித்தத்துடன் இணக்கப்படுத்துகிறது.
புதிய ஏற்பாட்டில் பிரதிஷ்டை என்பது பரிசுத்தமாக்குதல், அதாவது பரிசுத்தமாகும் செயல்முறையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. பரிசுத்தமாக்குதல் முதன்மையாகப் பரிசுத்த ஆவியின் வேலையாக இருந்தாலும், விசுவாசிகள் பிரதிஷ்டை மூலம் இந்தச் செயல்முறையில் தீவிரமாகப் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். பிரதிஷ்டை என்பது விசுவாசிக்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையேயான ஒரு கூட்டுச் செயலாகும், அங்கு விசுவாசி தன்னைத் தேவனின் நோக்கங்களுக்காகத் தன்னார்வமாகப் பிரித்தெடுத்து, ஆவியானவர் அவர்களுக்குள்ளும் அவர்கள் மூலமாகவும் செயல்பட அனுமதிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:23).
பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசாரியத்துவத்திற்கான ஜெபம்
- தனிப்பட்ட பிரதிஷ்டை:
ஆண்டவரே, என் இருதயத்தைச் சுத்திகரித்து, நீர் பரிசுத்தராய் இருக்கிறது போல
என்னையும் பரிசுத்தமாக்கும். பரிசுத்தமான வாழ்க்கை முறையையும் உமக்கான
பிரித்தெடுப்பையும் பராமரிக்க எனக்கு உதவும். எளிதாகச் சிக்க வைக்கும் ஒவ்வொரு
பாரத்தையும் பாவத்தையும் விட்டுவிட எனக்கு உம்முடைய கிருபை தாரும். உலக
சமரசங்களுக்கு மேலாக வாழ என்னைப் பலப்படுத்தும். தினந்தோறும் உம்முடைய
பரிசுத்த ஆவியால் என்னைப் புதுப்பியும்.
- ஆசாரிய அதிகாரம்:
ஆண்டவரே, கிறிஸ்துவில் என் ஆசாரிய அதிகாரத்தைப் புரிந்துகொண்டு அதில் நடக்க எனக்கு உதவும். ஆவிக்குரிய அதிகாரத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்த எனக்குத் தைரியம் தாரும். மற்றவர்களுக்காக இடைவெளியில் திறம்பட நிற்க என்னை இயலச்செய்யும். உமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த எனக்குக் கற்றுத் தாரும். ஆவிக்குரிய போராட்டத்தைப் பற்றிய என் புரிதலை அதிகரியும். மற்றவர்களுக்கு உமது ஆசீர்வாதத்தின் வழியாக என்னைப் பயன்படுத்திக் கொள்ளும். மனம் உடைந்தவர்களுக்குச் சுகம் கொண்டுவர என்னைப் பயன்படுத்தும். கிறிஸ்துவில் இரட்சிப்பிற்கு மற்றவர்களை வழிநடத்த எனக்கு உதவும். சீஷர்களைத் திறம்பட உருவாக்க என்னை இயலச்செய்யும். என்னைச் சமாதானத்தின் கருவியாக ஆக்கும்.
- ஆசாரிய ஊழியம்:
பிதாவே, மற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் என்னைப் பயனுள்ளவனாக்கும். தேவையில் இருப்பவர்களுக்கு உமது கிருபையை ஊழியம் செய்ய எனக்கு உதவும். உமது வார்த்தையின்படி மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்க ஞானம் தாரும். மக்கள் முன் உம்மைச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்த என்னை இயங்கச் செய்யும். என் அழைப்பில் உண்மையாகச் சேவை செய்ய என்னைப் பலப்படுத்தும். பிதாவே, என் ஆசாரிய கடமைகளில் என்னை உண்மையுள்ளவனாக்கும். உண்மையான நோக்கங்களுடன் மற்றவர்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவும். நல்ல போர்வீரனாகக் கஷ்டங்களைச் சகிக்க எனக்குக் கிருபை தாரும். கிறிஸ்துவின் சரீரத்தைத் திறம்பட கட்டியெழுப்ப என்னை இயங்கச் செய்யும். உமது வீட்டில் கனமான பாத்திரமாக என்னை ஆக்கும்.
- ஆவிக்குரிய வளர்ச்சி:
ஆண்டவரே, உமது வார்த்தையின் புரிதலை எனக்குள் ஆழப்படுத்தும். உமது ஆவிக்கான உணர்திறனை அதிகரியும். ஆவிக்குரிய பகுத்தறிவில் வளர எனக்கு உதவும். என் வாழ்க்கையில் ஆவியின் கனிகள் வளர துணைபுரியும். கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தைப் பற்றிய பெரிய வெளிப்பாட்டைத் தாரும். ஆண்டவரே, என் ஜெப வாழ்க்கையைப் பலப்படுத்தும். தவறாமல் வேத ஆராய்ச்சி செய்ய எனக்கு உதவும். உபவாசத்தில் ஒழுக்கத்தைத் தாரும். ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிக்க என்னை இயலச் செய்யும். உமது வார்த்தையின் தியானத்தில் என்னை உண்மையுள்ளவனாக வைத்திரும்.
- பாதுகாப்பும் பாதுகாத்தலும்:
ஆண்டவரே, ஆவிக்குரிய மாசுபடுதலிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். நான் விழுந்துபோகாமலும் பின்மாற்றம் அடையாமலும் இருக்க என்னைக் காத்துக்கொள்ளும். தவறான போதனைகளிலிருந்து என் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். என் சாட்சியையும் நேர்மையையும் காத்துக்கொள்ளும். வஞ்சனையிலிருந்து என் இருதயத்தைக் காத்துக்கொள்ளும்.
- ஆசாரிய குணாதிசயம்:
கிறிஸ்துவின் குணாதிசயத்தை என்னில் வளர்த்தெடும். தாழ்மையோடும் சாந்தத்தோடும் நடக்க எனக்கு உதவும். நல்ல முடிவை அடையும்வரை உண்மையாக நிலைத்திருக்க பொறுமையையும் நீடிய சாந்தத்தையும் தாரும். எல்லோரிடத்திலும் அன்பு காட்ட என்னை இயலச்செய்யும். என் வாழ்க்கையில் தெய்வீக ஞானத்தையும் தேவ பயத்தையும் கட்டியெழுப்பும்.
- குடும்ப ஆசாரியத்துவம்:
பிதாவே, தெய்வ பக்தியில் என் குடும்பத்தை வழிநடத்த எனக்கு உதவும். வீட்டில் திறம்பட ஊழியம் செய்ய என்னை இயலச்செய்யும். என் பிள்ளைகளுக்கு உமது வழிகளைக் கற்பிக்க ஞானம் தாரும். என் வீட்டில் தெய்வீகச் சூழலைப் பராமரிக்க எனக்கு உதவும். குடும்ப பலிபீடம் / துதி நேரங்களில் என்னை உண்மையுள்ளவனாக்கும்.
- கூட்டு ஆசாரியத்துவம்:
ஆண்டவரே, கிறிஸ்துவின் சரீரத்தில் திறம்பட செயல்பட எனக்கு உதவும். மற்ற விசுவாசிகளுடன் ஒற்றுமையாக நடக்க என்னை இயலச்செய்யும். ஆவிக்குரிய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய எனக்குக் கிருபை தாரும். சபையின் நன்மைக்காக என் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்த எனக்கு உதவும். உமது ராஜ்யத்தில் குழு உணர்வுள்ள பங்காளியாக என்னை ஆக்கும்.