தேசியத்திற்கான ஜெபம் – ஏப்ரல் 2026
தேசத்திற்காக இந்த நிலத்தில் புதிய ஆவிக்குரிய காரியங்களை எழுப்புதல்
2026 மார்ச் 1 முதல் 3 வரை, அப்போஸ்தலர் ஜூலியஸ் சுபி, நம் தேசத்திற்காகப் புதியவற்றைத் தூண்டுங்கள் என்று எங்களுக்குச் சவால் விட்டார்.
மலேசியா என்ற இந்தத் தேசத்தில் புதியவற்றை எவ்வாறு தூண்டலாம் என்பதற்கான பல விலையுயர்ந்த ஆவிக்குரிய கொள்கைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
இது மிகவும் முக்கியமான ஒரு காலம். இந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசன சன்னல் திறக்கப்பட்டுள்ளது.
அந்தச் சன்னலை நாம் உணர்ந்து அதற்குள் நகர்ந்தால், நிலத்தைச் சுதந்தரித்து, பலனைக் காணவும், முன்னேற்றம் அடையவும் எளிதான ஒன்றாகும்.
ஏசாயா 42:9
“இதோ, பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவை நடந்தேறிவிட்டன; புதியவைகளை நானே அறிவிக்கிறேன்; அவை முளைக்குமுன்னே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஏசாயா 43:19
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; அது இப்பொழுதே முளைக்கும்; அதை நீங்கள் அறியமாட்டீர்களோ? நான் வனாந்தரத்தில் வழியையும், பாலைவனத்தில் நதிகளையும் உண்டாக்குவேன்.”
ஜெபம்
கர்த்தாவே, எங்கள் தேசத்தில் புதிய காரியங்களைச் செய்வதாக நீர் வாக்களித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
உமது வாக்குத்தத்தங்களின்மேல் நாங்கள் நிற்கின்றோம்; புதிய காரியங்கள் முளைத்தெழும் என்று அறிவிக்கிறோம்.
முன்னேறுவதற்குத் தடையாக நிற்கும் கடந்தகாலப் பிணைப்புகளிலிருந்து எங்களை விடுவிக்கும்படி ஜெபிக்கிறோம். கர்த்தாவே, வனாந்தரத்தில் வழியை உண்டாக்கும்; வனாந்தர அனுபவத்தில் இருந்தவர்களை மீட்டு, அவர்களை விடுதலை செய்யும். எங்கள் தேசத்தில் புத்துணர்ச்சி, புதுப்பிப்பு, மறுசீரமைப்பு, சுகமடைதல் மற்றும் எழுப்புதல் நதிகள் பெருகிப் பாயும் என்று அறிவிக்கிறோம்.
இப்போது தேசத்தில் புதியவற்றை எவ்வாறு தூண்டுவது?
ஜெபம்
- தேவனிடமிருந்து ரேமா வார்த்தை நமக்குத் தேவை (Rhema = ஒரு
குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நபருக்காக உயிரோடு பேசப்படும் தேவவார்த்தை)
- கர்த்தாவே, உம்மிடமிருந்து ரேமா வார்த்தையைப் பெற எங்களைச் சரியான நிலையில் நிறுத்தும். அதற்காகச் சில காரியங்களில் எங்களை உறுதிப்படுத்தும்:
- தினமும் வேதாகமத்தை குறைந்தது 3 அதிகாரங்களுக்கு மேல் வாசிக்க எங்களுக்கு அருள் தாரும்.
(லூக்கா 4:4)
“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது.”
- தேவனுடைய சத்தத்தைக் கேட்க இடையூறாக இருக்கும் அனைத்தையும் அகற்றும். யோவான் 10:27 இல் “என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன; நான் அவற்றை அறிந்திருக்கிறேன்; அவை என்னைப் பின்பற்றுகின்றன.” என்கிறார்.
- பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்குப் புத்துயிர் அளித்து உயிர்ப்பிக்கும்படி ஜெபிக்கிறோம். “ஆவியே உயிர்க்கிறவர்; மாம்சம் ஒன்றுக்கும் பயனில்லை; நான் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது” என்கிறார் யோவான் 6:63.
- கனவுகள் மற்றும் தரிசனங்கள் மூலம் எங்களோடு பேசும். “அதற்குப் பிறகு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் முதியோர் சொப்பனங்களைக் காண்பார்கள்; உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள்,” (யோவேல் 2:28) என்று வேத வார்த்தை சொல்லுகிறது.
- எங்களுக்கு வெளிப்படுத்தும் ரேமா வார்த்தைக்குப் கீழ்ப்படிந்து, அதன்படி செயல்பட உதவும்.
விசுவாசத்தின் வார்த்தையை வெளிப்படுத்தும் ஜெபம்
(ரோமர் 10:17)
- கர்த்தாவே, நீர் எங்களைச் செய்யும்படி அழைக்கும் காரியங்களை நிறைவேற்றுவதற்காக, பேசப்பட்ட வார்த்தையின் மூலம் விசுவாசத்தை வெளிப்படுத்தும் கிருபையை அருளும்.
“ஆகையால், விசுவாசம் கேள்வியினாலே வரும்; கேள்வி கிறிஸ்துவின் வார்த்தையினாலே வரும்.” - ஆண்டவரே, உம்மிடமிருந்து கேட்க நாங்கள் மிகவும் ஏங்குகிறோம்.
- உமது சந்திப்பு நேரத்தை நாங்கள் தவறவிடாதபடி காத்தருளும்.
- இந்தத் தேசத்தின் மேல் உமது மகிமையைக் காண நாங்கள் விரும்புகிறோம்.
II. கர்த்தரைத் தேடும் நீண்ட காலம் புதியவற்றைத் தூண்டும்
ஜெபம்
- கர்த்தாவே, உம்மைத் தேடும் திறனை எங்களில் அதிகரிக்கவும்; உம்முடன் நெருக்கமான உறவில் வளரச் செய்யும்.
(எரேமியா 29:11–13) இல் “நான் உங்களுக்காக நினைக்கிற நினைவுகளை அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவை சமாதானத்திற்கே அன்றித் தீங்கிற்கல்ல; உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிற நினைவுகள். அப்பொழுது நீங்கள் கூடி வந்து, என்னைத் தொழுது கொண்டு என்னை நோக்கிக் விண்ணப்பம் பண்ணுவீர்கள்; என்னை நோக்கி ஜெபிப்பீர்கள்; நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். நீங்கள் என்னை முழு இருதயத்தோடும் தேடும்போது என்னைக் கண்டடைவீர்கள்.” - உம்மைப் பற்றிய மேலும் அதிகமான தாகத்தையும் ஏக்கத்தையும் எங்களில் உண்டாக்கும்.
சங்கீதம் 42:1–2
“மானானது நீரோடைகளுக்கு வாஞ்சித்துக் கதறுவது போல, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது, தேவனே. என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனை நோக்கித் தாகமாயிருக்கிறது.”
- “தேவனே, நீரே என் தேவன்; அதிகாலையிலே உம்மைத் தேடுகிறேன்; நீரில்லாத, வறண்ட, பரந்த பூமியில் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது; என் மாம்சம் உம்மை வாஞ்சிக்கிறது.” (சங்கீதம் 63:1)
சங்கீதம் 84:1–2
“சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவை! என் ஆத்துமா கர்த்தருடைய பிராகாரங்களின் மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது.”
ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி, நாங்கள் எங்கள் முதல் அன்புக்குத் திரும்ப உதவி செய்யும்.
வெளிப்படுத்தல் 2:4–5
“ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த உன் முதல் அன்பை விட்டுவிட்டாய் என்பதே உன்மேல் எனக்குள்ள குறை. ஆகையால், நீ எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாயென்று நினைத்து மனந்திரும்பி, ஆரம்பத்தில் செய்த கிரியைகளைச் செய். இல்லாவிட்டால், நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.”
- கிறிஸ்துவில் நிலைத்திருக்க எங்களுக்கு உதவும்; அவரை விட்டுப் பிரிந்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
யோவான் 15:4–5
“நீங்கள் என்னிலே நிலைத்திருங்கள்; நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடி திராட்சச் செடியில் நிலைத்திருக்காவிட்டால் தானாகவே கனிகொடுக்க முடியாதது போல, நீங்கள் என்னிலே நிலைத்திருக்காவிட்டால் கனிகொடுக்க முடியாது… என்னை விட்டுப் பிரிந்து நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.”
- கர்த்தாவே, ஆவிக்குரிய தளத்தில் வழித்தடங்கள் உருவாகும்படி, நீண்ட காலம் ஜெபிக்க ஓர் உடன்படிக்கை செய்து, அதில் உண்மையுடன் நிலைத்திருக்க எங்களுக்கு உதவும்.
- ஆழம் ஆழத்தை அழைக்கிறது; எங்களை ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் எழுப்புமாக. உமது முகத்தைத் தேடுவதற்கான தாகத்தையும் தீவிரத்தையும் எங்களுக்கு அருளும்,
- இந்தத் தேசத்தில் புதிய முன்னேற்றங்களையும் திறப்புகளையும் காணும் வரைக்கும்.
- இந்தத் தேசத்தில் புதிய காரியங்கள் நடைபெறும் வரைக்கும், ஜெபத்தில் விடாமுயற்சியுடன் முன்னேறுவதற்கான கிருபையையும் பலத்தையும் எங்களுக்குத் தாரும்.
III. தேசத்தில் புதிய காரியங்கள் நிகழத் தூண்டுவதில், வெற்றிகரமான ஆவிக்குரிய போராட்டமும் அடங்கியுள்ளது.
ஜெபம்:கர்த்தாவே, சத்துருவுக்கு எதிரான ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றி பெற எங்களுக்கு உதவும்.
நாங்கள் வெறும் ஜெயிப்பவர்கள் அல்ல; மிகுந்த வெற்றியாளர்கள் என்பதான எங்கள் ஆவிக்குரிய நிலையை அறிந்து நிற்க எங்களுக்குக் கிருபை தாரும்.
எபேசியர் 2:6
“அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே எழுப்பி, உன்னதங்களில் (பரலோக இடங்களில்) அவரோடே உட்கார வைத்தார்.”
எங்களை ஆவிக்குரிய போருக்கு ஆயத்தப்படுத்தும்.
எபேசியர் 6:10–12
“கடைசியாக, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கும்படி தேவனுடைய முழு கவசத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நமக்கு மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் விரோதமாகப் போராட்டமில்லை; அதிகாரங்களுக்கும், ஆளுகைகளுக்கும், இந்த இருளின் உலகாதிபதிகளுக்கும், ஆகாயமண்டலங்களில் இருக்கிற பொல்லாத ஆவிக்குரிய சேனைகளுக்கும் விரோதமாகப் போராட்டம் உண்டு.”
தேவனுடையமுழு கவசத்தையும் தினமும் தரித்துக்கொள்ளஎங்களுக்கு உதவி செய்யும்.எபேசியர் 6:11, 13–18
“தேவனுடைய முழு கவசத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்; ஆகையால், நீங்கள் நிலைத்திருக்கும்படி தேவனுடைய முழு கவசத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்; சத்தியம் என்னும் அரைக்கச்சை, நீதியென்னும் மார்புக்கவசம், விசுவாசமென்னும் கேடகம், இரட்சிப்பென்னும் தலைக்கவசம், ஆவியின் பட்டயம் ஆகிய தேவனுடைய வார்த்தை… எல்லாக் காலங்களிலும் ஆவியினாலே ஜெபியுங்கள்.”
தேவன் தரும்ஆவிக்குரிய போராயுதங்களால்எங்களை ஆயத்தப்படுத்தும்.
2 கொரிந்தியர் 10:4–5
“எங்கள் போராயுதங்கள் மாம்சத்துக்குரியவை அல்ல; அவை அரண்களை இடிக்க வல்ல தேவ வல்லமையுள்ளவை; தர்க்கங்களையும் தேவனை அறியும் அறிவுக்கு விரோதமாக எழும்புகிற எல்லா உயர்வுகளையும் இடித்தெறிகின்றவை.”
பாவமான எல்லா திறந்த வாசல்களிலிருந்தும் எங்கள் இருதயங்களைப் பாதுகாக்கவும்.
சங்கீதம் 139:23–24
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். என்னுள் துன்மார்க்கமான வழி உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
திறந்த வாசல்கள்:
- மன்னிக்காமை
- கசப்பு
- பயம்
- வழக்கமான பாவம்
- எதிர்மறைப் பேச்சு
எபேசியர் 4:27
“பிசாசுக்குத் தளம் அல்லது இடம் கொடுக்காதிருங்கள்.”
நீதிமொழிகள் 4:23
“எல்லாவற்றையும் விட உன் இருதயத்தை விழிப்போடு காத்துக்கொள்; அதிலிருந்தே ஜூவ அல்லது உயிரின் ஊற்றுகள் புறப்படுகின்றன.”
ஆராதனையை எங்கள்தினசரி போராயுதமாகமாற்ற உதவும். (சங்கீதம் 149:6)
“அவர்களுடைய வாயில் தேவனை உயர்த்தும் ஸ்தோத்திரமும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையான பட்டயமும் இருக்கட்டும்.”
மத்தேயு 12:29
“அன்றியும் பலவானை முதலில் கட்டாமல் அவன் வீட்டுக்குள் புகுந்து அவன் பொருட்களை எவன் கொள்ளையிட முடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.”
ஆண்டவரே, உமது நேரத்தில், இந்தத் தேசத்தைக் கட்டுப்படுத்தும் வலுவான ஆவிக்குரிய பலத்தை எங்களுக்கு வெளிப்படுத்தும். அதைச் சமாளிக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கும் போது மனந்திரும்புதல், மன்னிப்பு, உமது இரத்தத்தின் வல்லமை, உமது மகத்தான நாமம் ஆகியவற்றின் மூலம் அந்தப் பிடியை உடைக்க எங்களுக்குக் கிருபை தாரும்.
விசுவாச அறிக்கை
- இந்தப் புதிய காலத்தில், இந்தத் தேசத்தில் தேவன் புதிய காரியங்களைச் செய்வார் என்று நாங்கள் விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- இந்தத் தேசத்தில் புதிய எழுச்சியின் புதிய காலம் தொடங்குகிறது என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- கிறிஸ்துவின் சபையில் ஒற்றுமையும் ஒன்றுபட்ட மனமும் கொண்ட புதிய காலம் வருகிறதே என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- அறுவடையும் கனிவும் நிறைந்த புதிய காலம் வருகிறது என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- எங்கள் அரசாங்கத்தின் மேல் நீதியும் தேவபயமும் நிறைந்த புதிய காலம் வருக என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- இந்த தேசத்தில் இன ஒற்றுமையின் புதிய காலத்தை நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்..
- வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் புதிய திருப்புமுனைகளும் முன்னேற்றங்களும் வரும் என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
- இந்தத் தேசத்தின் மேல் தேவனுடைய மகிமை வெளிப்படும் வகையில், அடையாளங்களும் அதிசயங்களும் நிறைந்த புதிய காலம் வரும் என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.