முக்கியமான நிகழ்வுக்கான பிரார்த்தனை
நோய் தொற்றிலிருந்து (எண்டெமிக் காலத்தில்) தேசத்தை மீண்டும் கட்டமைத்தல்
(குறிப்பு: இது 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 1. தேசிய பொருளாதார மீட்பு; 2. தேசிய கல்வி மீட்பு. உங்களுக்கு நேரமின்மை இருந்தால், பிரார்த்தனை செய்ய 1 பகுதியை மட்டும் தேர்வு செய்யவும்.)
எரேமியா 29:7, 11-13
7 மேலும், நான் உங்களைச் சிறைபட்டுப் போகப்பண்ணின பட்டணத்தின் அமைதியையும் செழுமையையும் தேடுங்கள். அதற்காகக் கர்த்தரிடம் ஜெபியுங்கள், ஏனென்றால், அது செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.” … 11நான் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன்,” என்று கர்த்தர் கூறுகிறார். அவை தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுது கொண்டு என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடு என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டு பிடிப்பீர்கள் ”
A. தேசிய பொருளாதார மீட்பு
அறிமுகம்
உலகளாவிய வர்த்தகம், முதலீட்டுகளில் பெரிய சரிவு காரணமாக, கோவிட்-19 தொற்றுநோய் மலேசியா போன்ற திறந்த பொருளாதாரத்தைக் குறிப்பாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. மலேசியாவின் பொருளாதார மீட்சியானது உலகளாவிய சூழலைச் சார்ந்துள்ளது – ஏற்றுமதிகளும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் (FDI) நேரடியாக உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குகின்றன.
ஆயினும்கூட, உலகளாவிய வளர்ச்சி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, வளரும் ஆசியாவிற்கான உலகளாவிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் (FDI) 45% வரை வீழ்ச்சியடையும். இந்த மோசமான கண்ணோட்டம் அரிதான FDIக்கான ஆசியான் நாடுகளுக்கிடையே போட்டியைத் தீவிரப்படுத்தும். எவ்வாறாயினும், உற்பத்தியில் கோவிட்-உந்துதல் சரிவை அடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) தங்கள் விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்த முயற்சிக்கின்றன; சீனாவிலிருந்து இடம்பெயர்கின்றன.
ஆசியான் பிராந்தியமானது இந்த இடமாற்றங்களின் முக்கியப் பயனாளியாகத் தெரிகிறது, இது உறுப்பு நாடுகளுக்கு மிகவும் தேவையான முதலீடுகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, MNCகள் மற்றும் FDIகளை ஈர்க்கும் திறன் கொண்ட தொழில்களை வளர்ப்பதை மலேசியா பரிசீலிக்க வேண்டும் – பொருளாதார வளர்ச்சிக்கான புதிய உத்வேகத்தை உருவாக்கவும், நீண்ட கால மீட்சியைத் தூண்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முதலீட்டு (சப்ளையர்) நிறுவனங்களின் நல்ல வலையமைப்பை உருவாக்க வேண்டும்..
மலேசியாவுக்காகச் செய்ய வேண்டிய பிரார்த்தனை :
- நேரடி முதலீட்டு ஊக்குவிப்புகள் மூலம் அல்லாமல், வலுவான உள்நாட்டுத் தொழில்துறை வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை (MNCs) ஈர்க்கும் கொள்கைகளைத் தொடரவும்.
- முதலீட்டு (சப்ளையர்)-நிறுவனங்களின் நல்ல வலையமைப்பை உருவாக்கி, மேலும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்ட தொழில்களைக் கண்டறிந்து வளர்ப்பது.
- உற்பத்தித் துறையில் உள்ள வாய்ப்புகளை அடையாளம் காணவும், இது ஒரு பிராந்திய உற்பத்தி மையத்தை உருவாக்குவதற்கு வசதியாக இருக்கும், இதனால், மலேசியா ஒரு பிராந்திய உற்பத்தி மையத் தளமாக ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருக்கும்.
- வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப பரிமாற்றம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நிதிக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது
. குறைந்த உற்பத்தித் திறன், உழைப்பு மிகுந்த உற்பத்தி ஆகியவற்றில் இருந்து மாறுவதற்குச் சிறு, நடுத்தர நிறுவனங்ககளை (SME) ஆதரித்து, அதிக மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்களில் MNCகளுக்குச் சிறந்த சேவையை வழங்க, FDI ஈர்ப்பதன் மூலம் உள்நாட்டு மீட்சியை வலுப்படுத்தவும், மேலும் சிறிய நிறுவனங்களுக்கு மேலும் விரிவான நன்மைகளை உறுதி செய்யவும்.
- வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதற்காகத் திறமையான தொழிலாளர்கள், நாடு தழுவிய இலக்கவியல் (டிஜிட்டல்) இணைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் போட்டி சார்பு கொள்கைகள் போன்ற சரியான பொருளாதார சூழலை உருவாக்கவும்.
கோவிட்-19 மீட்பு உத்தி தழுவல்: மலேசியா ஒரு பிராந்திய உற்பத்தி மையம்
B. தேசிய கல்வி மீட்பு
அறிமுகம்
ஏப்ரல் 2021இல், ஆசிய மேம்பாட்டு வங்கி, COVID-19 தொற்றுநோயின் விளைவாக மலேசியாவில் பெரும்பாலான குழந்தைகள் கல்வி முன்னேற்றத்தில் பெரும் இழப்பைச் சந்தித்ததாக அறிவித்தது. ஆசியாவின் வளரும் நாடுகளில்,மலேசியா அதிக கற்றல் இழப்பைக் கொண்டுள்ளது. மலேசியாவின் கற்றல் இழப்பு: 1. மியான்மரைத் தவிர, அனைத்து ஆசியான் உறுப்பினர்களின் இழப்புகளையும் மீறுகிறது; 2. பங்களாதேசம் மற்றும் நேபாளத்தின் இழப்புகளுக்கு இணையானது; 3. ஆசிய வளரும் நாடுகளில் அதிக இழப்பு அடைந்த நாடு.
கல்வி வறுமை என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மலேசியப் பொருளாதாரத்திற்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். விரைவில் தைரியமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். அது மட்டுமின்றி, குழந்தைகளைப் பாதித்துள்ள மனநலத் தொற்றுநோய், நீண்டகால பள்ளி மூடல் மூலம் அதிகரித்துள்ளது; அது கற்றலின் தரம், நமது எதிர்கால பணியாளர்களின் தரம் மற்றும் நமது உற்பத்தித்திறன் ஆகியவற்றைக் கணிசமாகப் பாதிக்கிறது.
தொற்றுநோய்க்குப் பிந்தைய கற்றலில் இழப்பை எதிர்கொள்ளும் மாணவர்களைச் சீரமைக்கும் அவசரக்கால தேசிய கல்வி மீட்புத் திட்டத்தின் தேவை உள்ளது. நாம் தைரியமாகவும், விரைவாகவும், விரிவாகவும் செயல்படவில்லை என்றால், நாம் எதிர்கொள்ளக் கூடிய முக்கிய, குறிப்பிடத்தக்க தாக்கங்கள் பின்வருமாறு:
- கடந்த இரண்டு ஆண்டுகளில் கற்றலின் இழப்பால் 40% க்கும் அதிகமான குழந்தைகள் கணிசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையை நாம் வரவிருக்கும் பல ஆண்டுகள் எதிர்கொள்ள நேரிடும்.: (அ) ஆரம்பக் கல்வி இடைநிற்றல்களின் உயர்ந்த விகிதம்; (ஆ) குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் (இ) நீண்டகால தொழிலாளர் உற்பத்தித் திறனில் கடுமையான தாக்கம்; (ஈ) பொருளாதார வீழ்ச்சி; (உ) சமூகப் பிரச்சனைகளும் மோசமான சமூக உறுதியற்ற தன்மை அதிகரித்தல்.
- நாம் இப்போது பாலர் பள்ளித் துறையில் (கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் உட்பட) நீண்ட கால முதலீடுகளைச் செய்யவில்லை என்றால், பல குழந்தைகள் கல்விக்குத் தயார்படுத்தப்படாமல் இருப்பதால், நடந்து கொண்டிருக்கும் கல்வி நெருக்கடி பல ஆண்டுகளாகத் தொடரும். முதன்மை 1. மார்ச் 31, 2022 வரை, இருபத்தைந்து சதவீதம் (1,210) அனைத்து மழலையர் மற்றும் பாலர் பள்ளி சேவைகள் மூடப்பட்டன.
- 3. குழந்தைகளின் தற்போதைய தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள மனநல (பள்ளி இழப்பு, வீட்டில் அடைப்பு மற்றும் சக சமூக தொடர்பு இழப்பு ஆகியவற்றின் விளைவாக) பாதிப்பு நாட்டின் நீண்ட கால சுகாதார தேவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக தற்கொலை விகிதங்கள் மற்றும் மனநல நோயியல் ஆகியவை சுகாதார சேவைகளைக் கஷ்டப்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இது வலுவான பணியாளர்களை விட குறைவாகவே இருக்கும்.
பின்வரும் முக்கிய முன்முயற்சிகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிவோம்:
- ஒவ்வொரு குழந்தையின் சூழ்நிலையையும் நிலையையும் புரிந்து கொள்ள அனைத்து மாணவர்களின் விரைவான மதிப்பீட்டை மேற்கொள்ளுங்கள்.
- ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கு நிதி உதவி உட்பட, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் அதிக ஆதரவு தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியவும்.
- அதிகமான தற்காலிக ஆசிரியர்கள்/கற்பித்தல் ஆதரவை வழங்குதல், குறிப்பாக ஆண்டு 1, 2 மற்றும் இடைமாறுபாட்டுக்குரிய ஆண்டுகளில் உள்ள மாணவர்கள், பள்ளிக்குத் தயாராகாத அல்லது தொடர சிரமப்படும் குழந்தைகளுக்கு உதவுதல்.
- நெருக்கடி நீடிப்பதைத் தடுக்க, பாலர் பள்ளித் துறையை (குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி, குழந்தைப் பருவத் தலையீடு / கற்றல் இயலாமை சேவைகள்) மீட்டெடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க நிதி உதவியை ஒதுக்கீடு செய்தல்.
- பள்ளிக் கல்வி அல்லது தொழில் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்குத் திரும்புவதற்கு, பள்ளியை விட்டு வெளியேறியவர்களைக் கண்டறிந்து அவர்களை அணுகவும்.
- பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, மனநல வல்லுநர்கள், சங்கங்களைப் பயன்படுத்தி ஆதரவை வழங்குவதன் மூலம் மாணவர்களின் மனநலத் தேவைகளைப் பற்றி அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யுங்கள்.
- ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவ தனிப்பட்ட கவனம் செலுத்துவதன் மூலம் எந்தக் குழந்தையையும் விட்டுவிடாதீர்கள்.
- கல்வியை வலுப்படுத்த சில இலக்கவியல் கற்றல் வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும்.
- இந்தத் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும்.
- வகுப்பறை கோவிட்-19 பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் எனப் பெற்றோருக்கு உறுதியளிக்கவும்.
- கல்வியின் இழப்புக் காலத்தை மீட்பதற்கான பாடசாலைகளின் முயற்சிகளுக்குப் பெற்றோர் ஆதரவு வழங்குதல்.
- கல்வி அமைச்சு (MOE), பெற்றோர்கள், சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் பிற முகவர்களிடமிருந்து உள்ளூர் முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறலாம்.
“ஒரு தேசிய அவசரநிலை – எங்கள் குழந்தைகளின் கற்றல் இழப்பு: மலேசியாவில் கோவிட்-19க்குப் பிந்தைய பள்ளி மீட்புக்கான பாதை”: மாற்றங்களுடன்