ஆபத்து அல்லது நெருக்கடி நிகழ்வுக்கான பிரார்த்தனை: கோவிட் 19

 

பரலோகத்தில்  உள்ள எங்கள் பிதாவே, நோய் மற்றும் அழிவின் வெள்ளத்தில் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவர், அவருடைய மக்களுக்குப் பலம்  அளிப்பவர்; தம் மக்கள் சமாதானத்துடன் இருக்க ஆசீர்வதிப்பவர் (சங் 29: 10-11)

உன்னை உயர்த்துவதற்கும், உங்கள் தெய்வத் தன்மையைப் போன்றுவதற்கும் நாங்கள் உங்களிடம் வருகிறோம், இந்தத் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட எங்கள் கண்களை உறுதியாக விசுவாசத்தின் காரணரும் முடிப்பவருமான இயேசுவின் மீது செலுத்துகிறோம்.

உங்கள் ராஜ்யம் மலேசியாவுக்கு வரும் என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம்,  பரலோகத்தில் இருப்பது போலவே நல்ல, மகிழ்ச்சியான மற்றும் பரிபூரணமானது மலேசியாவில் செய்யப்படும் அறிக்கையிடுகிறோம்.

கர்த்தாவே, இந்நாளில் எங்களுக்கு அவசியமான தேவையை எங்களுக்குக் கொடுங்கள்:

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் குணமாக்கும். நாம் அனைவரையும் குணப்படுத்தும் இயேசுவின் இரத்தத்தின் ஆற்றலுக்குக் கீழ் கொண்டு வருகிறோம். (உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்கள் பெயரைக்குறிப்பிடுங்கள்)

தீவிர கண்காணிப்புப் பிரிவில் தங்கள் உயிர்களுக்காகப் போராடுபவர்களை மரணத்திலிருந்து விடுவிய்யும்

தொற்றுநோயின் பாதிப்பால் வேலை, குடும்பங்கள் மற்றும் பெரும் நிதித் தேவை, மற்றும் குடும்பங்களில் நோய்களைக் கையாள்வது போன்றவற்றில் அனைவருக்கும் உதவி மற்றும் நம்பிக்கை தாருங்கள் (பெயர்கள் மற்றும் தேவைகளைச் சேர்த்துக் கொள்ளவும்)

அனைத்து முன்னிலை பணியாளர்களுக்கும் வேண்டிய உறுதியான மன தைரியம் தாரும்.  அவர்கள் நோயாளிகளைக்கவனித்துக் கொள்வதுபோல், அவர்கள்தம்  குடும்பத்தினரை நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். (உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர் அல்லது அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையைக் குறிப்பிடுங்கள்)

தடுப்பூசி திட்டம், பொருளாதாரம் இரண்டையும் நிர்வகிக்கவும், கோவிட் வைரஸ் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தேவையான ஞானமும் ஒருமைப்பாடும் எங்கள் அரசுக்குத் தாரும்.

எங்களுக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை நாங்கள் மன்னிப்பதைப் போலவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்.(பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறார்) ஒருவருக்கொருவர் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பைக் கைவிடுவதற்கான சோதனையில் ஆண்டவரே எங்களை வழிநடத்த வேண்டாம். உங்கள் மீது எங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாத பயம், விரக்தி அல்லது முணுமுணுப்புகளுக்கு அடிபணிய வேண்டாம். எல்லா வித  சதித் திட்டங்கள் மற்றும் தீய ஆவிகளின் தாக்குதல்களிலிருந்து எங்களை விடுவிக்கவும். கர்த்தரே, எங்கள் தேசத்தை விரக்தியில் மூழ்கடிக்க விரும்பும் இருளின் சக்திகளிலிருந்து விடுவிக்கவும். நாங்கள் உம்மை மட்டுமே ஆராதிக்கிறோம். உம்முடைய ராஜ்யம்,ஆற்றல் மற்றும் மகிமை மட்டுமே என்றென்றும் உள்ளது என்று அறிவிக்கிறோம், ஆமென்.

சங்கீதம் 33-ஐ பிரகடனம் செய்வோம்

சங்கீதம் 33 (என்.ஐ.வி)

1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத்

தகும்.

2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக்

கீர்த்தனம் பண்ணுங்கள்.

3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை

நேர்த்தியாய் வாசியுங்கள்.

4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம்

சத்தியமுமாயிருக்கிறது.

5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால்

நிறைந்திருக்கிறது.

6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால்

அவற்றின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷ

வைப்பாக வைக்கிறார்.

8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு

அஞ்சியிருப்பதாக.

9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை

அவமாக்குகிறார்.

11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள்

தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச்

சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும்

கண்ணோக்கமாயிருக்கிறார்.

15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள்

செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

16 எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன்

பலத்தின் மிகுதியால் தப்பான்.

17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை

மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண்

   அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத்

துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய

   இருதயம் அவருக்குள் களிகூரும்.

22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை

   எங்கள்மேல் இருப்பதாக.

 

வாரம் 14 – குடும்பங்களில் தெய்வீக ஒழுங்கை மீட்டெடுத்தல்