முக்கியமான நிகழ்வுக்கான பிரார்த்தனை

2022 ஆம் ஆண்டின் முதல் வாரத்தின் [ஜனவரி 1-7] ஒப்படைப்புக்கான அழைப்பு

ஜனவரி 1 முதல் 7 வரை ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் உபவாசம் இருக்கவும், ஜெபிக்கவும், அவரைத் தேடவும், மலேசியாவில் உள்ள தம்முடைய மக்களை எழும்பி ஒன்றுசேரும்படிக் கர்த்தர் நம்மை வலியுறுத்தினார்.

உங்களில் பலர் இந்தப் பிரார்த்தனை இடங்களைத் தொகுத்து வழங்க உள் நுழைந்துள்ளீர்கள், மேலும், இந்த 7நாள்கள் இரவும் பகலும் பிரார்த்தனைகளில் எங்களுடன் சேர உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். ஒவ்வோர்இரவும் 8 மணி முதல் 10 மணி வரை மலேசியாவில் உள்ள சில கடவுளின் மனிதர்களை எங்களுடன் பங்கெடுத்துக்கொள்ள அழைத்துள்ளோம். ஜனவரி 4 – 6 ஆம் தேதிகளில், உகாண்டாவைச் சேர்ந்த போதகர் ஜேம்ஸ் கவல்யா தேசத்தைக் குணப்படுத்துதல் பற்றிய தொடரைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும், நாம் ஜனவரி 7 ஆம் தேதி ஒப்படைப்பு (பிரதிஷ்டை)  மற்றும் புனித நற்கருணையுடன் முடிப்போம்.

2022 இல் தேவாலயம் ஓர் ஆற்றல் வாய்ந்த சீரமைப்புக்குள் வர, உங்களுக்குத் தெரிந்த அனைவருடனும் இதைப் பகிரவும்.

 

2022 இல் பிரவேசிக்கும்போது நாம் அவரை எவ்வாறு தேடுவது?

 “எழும்பி பிரகாசிக்கவும்”

ஏசாயா 60

“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்துவிட்டது, கர்த்தருடைய மகிமை உன்மேல் எழும்பும்.

2 பார், இருள் பூமியை மூடுகிறது, ஜனங்களின் மேல் அடர்ந்த இருள் இருக்கிறது.

ஆனால், கர்த்தர் உங்கள் மேல் எழுந்தருளுகிறார், அவருடைய மகிமை உங்கள் மேல் தோன்றும்.

3 தேசங்கள் உன் வெளிச்சத்துக்கும், ராஜாக்கள் உன் விடியலின் பிரகாசத்துக்கும் வருவார்கள்.

இது உறக்கத்திலிருந்து வெளியேறி செயலில் இறங்குமாறு தேவன் தம் திருச்சபையை அழைக்கும் ஆண்டு – நம் தேசத்தில் இருள் வருவதைக் காணும்போது இன்னும் அதிகமாக எழுந்து பிரகாசிக்க வேண்டும். அதன் திறவுகோல் திருச்சபையில் உள்ளது

எபேசியர் 1: 20-23 (MSG)

“கிறிஸ்து பிரபஞ்சத்தை இயக்கும் பொறுப்பில் இருக்கிறார், விண்மீன் திரள்கள் முதல் அரசாங்கங்கள் வரை, அவருடைய ஆட்சியிலிருந்து எந்தப் பெயரும் அதிகாரமும் விலக்கப்படவில்லை. தற்போதைக்கு மட்டுமல்ல, என்றென்றும். அனைத்திற்கும் அவர் பொறுப்பாளர், எல்லாவற்றிலும் இறுதி வார்த்தை அவருக்கு உள்ளது. இவை அனைத்தின் மையத்தில், கிறிஸ்து திருச்சபையை ஆளுகிறார். நீங்கள் பார்க்கிற திருச்சபை உலகத்திற்குப்புறம்பானதல்ல; உலகம் திருச்சபைக்குப் புறம்பானது. திருச்சபை என்பது கிறிஸ்துவின் உடலாகும், அதில் அவர் பேசுகிறார் மற்றும் செயல்படுகிறார், இதன் மூலம் அவர் தனது இருப்பைக் கொண்டு அனைத்தையும் நிரப்புகிறார்.

 

கிறிஸ்து தம் திருச்சபையின் மூலம் பேசவும் செயல்படவும், முதிர்ச்சி அடைவதன் மூலம் சபை எழும்பிப் பிரகாசிக்க ஜெபிப்போம். மந்தைகளாக உள்ள விசுவாசிகளை  அரசர்களின் ராஜாவுக்கு ஏற்ற அரச போர்க் குதிரைகளாகமாற்றி, போர் நாளுக்குத் தயாராகும்படி திருச்சபையைப் பக்குவப்படுத்த கர்த்தர் பரிசுத்த ஆவியை ஊற்றுவார்.

போர் களத்தில் எதிரிகளைத் தெருக்களில் உள்ள சேற்றில் மிதிக்கும் வீரர்களைப் போல நாம் ஒன்றாக இருப்போம். கர்த்தர் நம்மோடு இருப்பதால் நாம் ஒன்றாகப் போரிடுவோம், எதிரி குதிரை வீரர்களை வீழ்த்தி வெட்கப்பட வைப்போம். (சகரியா 10: 1-5)

இது 2022-இல் கர்த்தரின் நகர்வாக இருக்கும். இப்போது ஜெபிப்போம்…..

  1. ர்த்தரை நன்கு அறிந்துகொள்ள அவருடைய திருச்சபை எழும்ப ஜெபியுங்கள் (எபி 1:17-19)
  • சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் நிற்கிறோம், உம்மை நன்கு அறிந்து கொள்வதற்குப் புதிய ஞானத்தையும் வெளிப்பாட்டையும் எங்களுக்குத் தருவீர்கள். உம்மைப் பற்றிய நேற்றைய அறிவில் நாங்கள் திருப்தி அடையவில்லை. நாங்கள் உங்களுடன் நெருக்கத்தை வளர்க்க விரும்புகிறோம், அப்போதுதான் எதிரியின் அனைத்துச் சக்திகளையும் தந்திரங்களையும் நாங்கள் உறுதியாக எதிர்க்க முடியும். (டேனியல் 11:32)
  • ஆண்டவரே, எங்கள் இதயங்களின் கண்கள் ஒருமுகமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன்வழி நாங்கள் என்ன செய்ய அழைக்கிறீர்கள் என்பதை நாங்கள் சரியாகப் பார்க்கவும், தெளிவாகக் காணவும் கேட்கவும் முடியும் என்றும், நீங்கள் கேட்கும் எல்லாவற்றிலும் உங்களுக்குக் கீழ்ப்படிவதாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம், மேலும் உங்கள் நித்திய திட்டங்களிலிருந்து வழிதவறி சென்று ஏமாந்து போகவிடாதீர்கள்.
  • ஆண்டவரே, உமது ராஜ்ஜியமும் உமது சித்தமும் எங்கள் கீழ்ப்படிதலால் எங்கள் தேசத்தில் நிறைவேறும்படி நாங்கள் உமது சித்தத்தின்படி நடக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம்.
  1. தேவனுடைய திருச்சபை பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட ஜெபியுங்கள்

லூக்கா 24:48-49

“இவற்றிற்கு நீங்கள் சாட்சிகள். என் தகப்பன் வாக்களித்ததை நான் உங்களுக்கு அனுப்பப் போகிறேன்; ஆனால் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையை நீங்கள் அணியும்வரை நகரத்தில் இருங்கள்” என்றார்.

  • ஆண்டவரே, நற்செய்தியின் சாட்சிகளாக இருக்க நாங்கள் அழைக்கப்பட்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்குப் பரிசுத்த ஆவியின் கிருபையைப் பரிசுக்காக நாங்கள் பெற உதவியதற்குஉமக்கு நன்றி செலுத்துகிறோம், அது நாங்கள் பயன்மிக்க சாட்சிகளாக இருக்க உதவும். எங்களின் சுயவல்லமையினால் அல்ல; அனைத்தும் பரிசுத்த ஆவியின் வல்லமையினால்  செய்யப்பட்டன.
  • ஆண்டவரே எங்களை உமது பரிசுத்த ஆவியின் உள் பலத்தால் பலப்படுத்துங்கள் (எபே. 3:16)
  • ஆண்டவரே, உமது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப எங்களைச் சீரமைக்க எங்கள் பாவ வழிகள்தடையாக உள்ளன. பரிசுத்த ஆவிக்கு அடிபணியவும், மாம்சத்திற்கு இடமளிக்காமல் இருக்கவும்எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
  • பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களுக்குக் கீழ்ப்படிய எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள், இதனால் கடவுளின் செயல்கள் நமது தேவாலயங்களிலும் நம் தேசத்திலும் வெளிப்படும், மேலும் மனிதர்களின் நம்பிக்கை இப்போது கர்த்தரின் சக்தியின் நிரூபணத்தில் தங்கியிருக்கும்.
  1. கடவுளின் திருச்சபை ஒன்றுசேர்ந்து எழுந்து பிரகாசிக்க ஜெபியுங்கள்

லூக்கா 10:2

2 அவர் அவர்களிடம், “அறுவடை மிகுதி, ஆனால் வேலையாட்கள் குறைவு. ஆகையால், அறுவடையின் ஆண்டவரிடம், அவருடைய அறுவடை வயலுக்கு வேலையாட்களை அனுப்பும்படி கேளுங்கள்.

  • ஆண்டவரே மனநிறைவின் உணர்விலிருந்து எங்களை உடைத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது அறுவடை முற்றியிருக்கும்; அறுவடை வயலுக்கு எங்களை வேலையாட்களாக அனுப்பும்படி உம்மிடம் வேண்டுகிறோம். நாங்கள் இனியும் தாமதிக்க விரும்பவில்லை. இந்த ஆண்டு உங்கள் திருச்சபையை அதன் ஆறுதல் மண்டலத்திற்கு வெளியே நகர்த்தவும்.
  • நாங்கள் சமூகங்களுக்கு மத்தியில் செல்லும்போது, ​ செல்லும் எல்லா இடங்களிலும் அமைதி, குணப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான ஞானம் மற்றும் அதிகாரத்தின் ஆவியை எங்களுக்கு வழங்குங்கள்.
  • நாங்கள் பிசாசுகளை விரட்டவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும் ஆன்மீக அதிகாரத்தைக் கேட்கிறோம்.
  • நீங்கள் எங்களை அழைக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாங்கள் திறம்பட செயல்பட, அதிகாரிகளின்தயவு எங்களுக்குக் கிடைக்க உமது உதவி கேட்கிறோம்
  • எல்லாரும் நம்மை ஒருவராகப் பார்க்கும் வகையில், நம்முடைய வெவ்வேறு திருச்சபைகள் மற்றும் ஸ்தாபனங்களில் இருந்து வந்த நம் அனைவரையும் இறைவன் ஒன்றுபடுத்துவாராக.
  • உமது மகிமைக்கான பொதுவான பார்வையையும், மலேசியாவில் உமது ராஜ்யம் வருவதைக் காண பொதுவான விருப்பத்தையும் எங்களுக்கு வழங்குங்கள்.
  • எங்களின் வெவ்வேறு தாலந்துகளுக்கு ஏற்ப எங்களை மூலோபாய அமைப்புகளில் வைக்கவும். மலேசியாவிற்கு நீங்கள் கொண்டுள்ள பெரிய திட்டங்கள் நிறைவேறும் வகையில், கர்த்தரின் மகிமை இருளில் பிரகாசிக்கும் வகையில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு மற்றும் நற்செயல்களில் தூண்டுவோம்.

 

இப்போது ஆண்டவரே, எங்களுக்குத் தெரிந்த எதையும் நம் கர்த்தரால் செய்ய முடியும் என்று அறிவிக்கிறோம் – நம்  கற்பனை அல்லது யூகம் அல்லது கனவு காண்பதைவிட அதிகம் செய்ய வல்லவர். அவர் நம்மைத் தூர தள்ளுவதன் மூலம் அல்ல, ஆனால் நமக்குள், அவருடைய ஆவி நமக்குள் ஆழமாகவும் மென்மையாகவும் செயல்படுவதன் மூலம் அதைச் செய்கிறார்.

 

திருச்சபையில் கடவுளுக்கு மகிமை!

மேசியாவில், இயேசுவில் கடவுளுக்கு மகிமை!

எல்லா தலைமுறையினருக்கும் மகிமை!

எல்லா ஆயிரமாண்டுகளிலும் மகிமை! ஓ, ஆமாம்! (எபேசியர் 3: 20-21 MSG)

 

கடவுள் எழுந்தருளட்டும், அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படட்டும்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்

 

உள் நுழை