ஆபத்து அல்லது நெருக்கடி நிகழ்வுக்கான பிரார்த்தனை
நம் நாட்டின் (நெருக்கடி) முக்கிய நிகழ்வுகளுக்கான பிரார்த்தனை
புதிய அரசு நிர்வாகம் மற்றும் புதிய அமைச்சரவை
- பரலோகத் தகப்பனே, புதிய பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அவரது புதிய அமைச்சரவை தேசத்தைத் தெய்வீக ஞானம், நேர்மை, திறமை மற்றும் செயல்திறனுடன் ஆட்சி புரிய ஆசிர்வதியுங்கள். கர்த்தரே அவர்கள் எடுக்கும் முடிவுகள் சுய அறிவின் அடிப்படையில் இன்றி,புத்திசாலித்தனமான ஆலோசனையின் அடிப்படையில் எடுக்க அவர்களுக்கு உதவுங்கள். இதன் வழி தேசத்தில் அமைதியும் நலனும், உண்மையும் நீதியும் எங்களிடையே நிலவ வேண்டுகிறோம்.
- இந்தத் தொற்றுநோயிலிருந்து மலேசியாவை வழிநடத்த தேசிய மீட்பு அமைப்புக்கு ஞானத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குங்கள். இதன் மூலம் தேசத்தின் பொருளாதார, சமூக, கல்வி, மனநல ஆரோக்கியம் உட்பட அனைத்துத் துறைகளிலும் நாடு ஒரு புதிய இயல்பு நிலைக்கு மாறி, புதிய இயல்புக்கு ஏற்ப வாழ தயார்படுத்தும்.
- ஆண்டவரே, பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியதற்கு நன்றி. பெருமை, சச்சரவு மற்றும் சுயநலத்தின் ஆவி பாராளுமன்றத்தின் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் பொறுப்பேற்க நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமரும் தற்போதைய அரசாங்கமும் உரிய செயல்முறைகள் சீராக நடைபெற அச்சம் இல்லாமல் செயலாற்றப் பிரார்த்திக்கிறோம்.