பின் இணைப்பு:

மலேசியாவைப் பற்றிக் கூறப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள்

2016 ஆகஸ்ட் 16 – சிண்டி ஜேக்கப்ஸ் (Cindy Jacobs) அவர்கள் மலேசியாவைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனம்

மலேசியாவில் ஒரு பெரிய ஆன்மிக எழுச்சி— ஒரு மகத்தான விழிப்புணர்வு எழுச்சி வரப்போகிறது.

24 மணி நேர ஜெப அபிஷேகம் மலேசியாவின் மேல் வரப்போகிறது.
நீங்கள் ஜெபக் கோபுரங்களை அமைப்பீர்கள்.
நீங்கள் ஜெபக் கோபுரங்களை எழுப்புவீர்கள்.

தாவீதின் கூடாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவீர்கள்.

இது மீட்பின் மகத்தான காலம் என்று கர்த்தர் அறிவிக்கிறார்.

மலேசிய திருச்சபைகளில் பெரிய ஒருமைபாடு ஏற்படும்.
பல திருச்சபை பிரிவுகளைச் சேர்ந்த மேய்ப்பர்கள் ஒன்றிணைவார்கள் என்று கர்த்தர் கூறுகிறார்.

கிழக்கு மலேசியாவை நோக்கிப் பாருங்கள் — அதுவே முக்கியம். அதுவே திறவுகோல்.

அங்கே நான் ஓர் அக்கினியை ஏற்படுத்துவேன் என்று கர்த்தர் கூறுகிறார். அந்த அக்கினி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.

கிழக்கில் ஆரம்பிக்கும் அந்த அக்கினி முழுத் தேசத்திற்கும் பரவும் என்று கர்த்தர் அறிவிக்கிறார்.

அல்லேலூயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

2019 – சக் பியர்ஸ் (Chuck Pierce)ன் தீர்க்கதரிசனம்

தேவனுடைய உடன்படிக்கை வார்த்தை அறுவடை காலத்தைச் சுற்றி அமைந்துள்ளது; இதைக் கர்த்தரின் பண்டிகைகள் காட்டுகின்றன. தேவன் நாம் அறுவடை மனப்பான்மையைக் கொண்டிருப்பதை விரும்புகிறார்.

இந்தப் போர்னியோ (Borneo) தீவில் புருனை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைகின்றன. பல மாற்றங்களை எதிர்பாருங்கள். தேவனுக்கு ஒரு பிராந்தியத்திற்கான திட்டம் இருந்தால், அது நிறைவேறும் வரை அவர் நிறுத்தமாட்டார்; அது அவர் நிர்ணயித்த சரியான நேரத்தில் பூரணமாகும். தேவன் எப்போதும் தம்மைத் தேடுகிற ஜனங்களை நோக்கிப் பார்ப்பவர். புதிய முறையில் முற்றுப்பெற்ற வெற்றியை நோக்கிய ஆராதனை மலேசியாவுக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு முக்கிய காலகட்டத்திலும் தேவன் தமது ஆவியின் புதிய காற்றை அனுப்புகிறார்.

இயேசு கூறியதாவது: “நீ பேதுரு; இந்தப் பாறையின் மேல் நான் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதைக் கெடுப்பதில்லை.” (மத்தேயு 16:18). இதன் அர்த்தம் வெளிப்பாட்டின் பாறையின் மேல் அவர் தமது “எக்ளேசியா” (ecclesia) — அழைக்கப்பட்ட, அனுப்பப்பட்ட ஜனங்களை — கட்டுவேன் என்பதாகும். அதாவது, அவர் பிரதேசங்களுக்குள் தமது தூதர்களைப் அனுப்பி, மாற்றம் கொண்டு வரவும், கட்டவும், அவிழ்க்கவும் செய்கிறார்.

ஒரு சபை முழுமையாக உருவெடுக்க எழுபது ஆண்டுகள் எடுக்கிறது என்று கூறப்படுகிறது. சபை தன் பலங்களையும் பலவீனங்களையும் நேர்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் பிறகு, பலவீனங்களைச் சீர்செய்து, அவற்றையே வலிமையாக்கும் வழியைத் தேட வேண்டும்.

கிழக்கு மலேசிய சபைகளில் வீசும் புதிய காற்று வெற்றி தரும் அபிஷேகத்தைக் கொண்டு வருகிறது.

இவற்றிக்குப் பின் , இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். மன்னே எக்காள சத்தம் போல என்னுடன் பேச நான் கேட்டிருந்த சத்தமானது; “இங்கே ஏறி வா; இனி நடக்கவிருக்கும் காரியங்களை உனக்குக் காண்பிப்பேன்” (வெளிப்படுத்தல் 4:1). இந்தப் புதிய காலத்தில் ஆவிக்குரிய போராட்டம் அதிகரிக்கும். இது “பாம்பும் சிங்கமும்” போராடும் காலமாக இருக்கும். தேவனுடைய மக்கள் இந்தப் போராட்டத்தில் எப்படிச் செயல்படுவது என்று கற்றுக்கொண்டு பூமியில் ஜெயிப்பார்கள். கிழக்கு மலேசியா எதிர்காலத்திற்கான திறவுகோல். அது நிலைத்தன்மையின் குரலாக இருக்கும். போர்னியோ தீவு மலேசியாவின் ஆன்மிக எழுச்சிக்கான முக்கிய மையமாக மாறும்.

போர்னியோவில் விழிப்பு அபிஷேகம் நடைபெறுகிறது, இது ஏசாயா 35ஐ குறிக்கும் ஒரு புதிய கவசம், ஒரு புதிய நெடுஞ்சாலை, ஒரு புதிய விழிப்புணர்வு முதலிய விதைக்கப்பட்டவை மலர்ந்து கனி தரும்

போர்னியோ மற்றும் கிழக்கு மலேசியா பற்றிய தீர்க்கதரிசனம்

கோத்தா கினபாலு அதிசயங்களின் வாசலாக இருக்கும். அடுத்த 8 மாதங்களில் கோத்தா கினபாலுவை மலரச் செய்வேன் என்று கர்த்தர் கூறுகிறார். வடகிழக்கு மலேசியாவில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதிசயங்களின் வாசலைத் திறப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார். சிபு என்பது ஆணையின் விதையாக இருக்கும். புதிய அறிவிப்புக் காலத்தில் புதிய அபிஷேகம் சிபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் வாயை விரித்துப் பேசும் போது, முன்பு தடைப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். கோத்தா கினபாலுவில் அதிசயங்கள் நடைபெறும்போது, சிபு வெளிப்படையாகப் பேசுவார்; உங்கள் அதிகார வரம்பை விரிவுபடுத்துவார்.

அடுத்த 3 ஆண்டுகளில் போர்னியோ தீவு கடல்சார் மையமாக மாறும். கூச்சிங் புதிய அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஒரு புதிய அடையாளம் வந்துவிட்டது. இந்த மாற்றத்தில், வணிக உலகில் ஒரு புதிய விழிப்புணர்வு வரும். அரசாங்கத்திலும் மாற்றங்கள் நிகழும்.

ஏசாயா 45:11 இல்: கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், “வரப்போகிற காரியங்களைக் குறித்து என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளையும் என் கைகளின் கிரியைகளையும் குறித்தும் எனக்குக் கட்டளையிடுவீர்களா?” என்கிறார். கடவுளின் கையின் செயல்களைச் செய்ய நாம் கட்டளையிடலாம்; பின்னர் அற்புதங்கள் நடப்பதைக் கவனிக்கலாம்.

கர்த்தர் “என் கண்கள் இந்தத் தேசத்தின் மேல் இருக்கின்றன. ஆனால், என் கைகள் செயல்படும்படி நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று கூறுகிறார்: ஒவ்வொரு விபரமும் நிறைவேறும்படி கட்டளையிடுங்கள். அடுத்த 3 ஆண்டுகளில் என் கிரியைகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். சிபு காரியங்களை ஆணையிட, நான் வேலை செய்யத் தொடங்குவேன். ஒரு கட்டளை, ஓர் ஆணை, நான் நகரத் தொடங்குவேன்.

போர்னியோ தேசத்தில் பெரிய மாற்றம் வரப்போகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் தேவனுடைய ஆட்சியைப் பற்றிய போராட்டம் இருக்கும். ஆனால், தேவன் புதிய ஒழுங்கை நிறுவுகிறார். இந்தத் தேசத்திற்காகத் தேவனுடைய வார்த்தையைப் பேசும் ராஜ்ய ஜனங்களைத் தேவன் எழுப்புகிறார். புதிய அபிஷேகம் வருவதற்குத் தயாராக இருங்கள். புதிய ஆவிக்குரிய சக்தி தேவனுடைய மக்கள் மேல் இறங்கும். “கிழக்கு மலேசியாவின் ஆன்மிக சூழ்நிலை மாறிவிட்டது.” புதிய காலத்தில் தேவனுடைய மக்களின் குரல் கேட்கப்படும். எனது ஆவி திருச்சபைகள், நகரங்களில் வெளிப்படத் தொடங்கும், மேலும் பலர் “கிழக்கு மலேசியாவின் சூழல் மாறிவிட்டது” என்று கூறுவார்கள். புதிய சகாப்தத்தில் எனது மக்கள் குரல் கேட்கும்.

கோத்தா கினபாலுவிலிருந்து கூச்சிங் வரை “யூதா” ஆராதனைகாரர்களை நான் எழுப்புகிறேன். இந்த ஒன்றிணைந்த ஆராதனையில் பரலோக சத்தம் இருக்கும். மக்கள் ஆராதிக்கும் போது பரலோகமும் பூமியும் ஒன்றாக இணையும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

  1. காற்றைக் கட்டுப்படுத்த அழைக்கும் அதிகாரம்
  2. பிரிக்கப்பட்டவற்றை மீண்டும் ஒன்றிணைக்கும் அதிகாரம்
  3. புதிய பரிசுத்த ஆவியின் இயக்கத்தை உருவாக்குதல்

இது விடுதலையின் காலம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தத் தேசத்தில் பெரிய மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். சுதந்திரமாக ஆராதியுங்கள் சுதந்திரத்தின் சத்தம் திருச்சபைகளில் ஒலிக்கும் போது, எதிரிக்கு எதிராக வெற்றி ஏற்படும். புதிய தலைமுறை ஆராதகர்கள் எழுப்பப்படுவார்கள். மூன்று தலைமுறைகள் ஒன்றாகத் தீர்க்கதரிசனம் பேசும். யூதா முன்னிலையில் நகரும்.

அப்போஸ்தல-தீர்க்கதரிசன ஆட்சி

ஐந்து ஊழிய வரங்களை ஒன்றிணைக்க அப்போஸ்தல-தீர்க்கதரிசன ஒழுங்கு நிறுவப்பட வேண்டும். கிழக்கு மலேசியா உலகத்திற்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. தேவனுடைய சபை வல்லமையுடன் எழும்பும் மாதிரியாக இருக்கும்.

இந்த அப்போஸ்தல-தீர்க்கதரிசன ஒழுங்கு இவ்வாறு நிறுவப்படும்:

  1. ஒவ்வொரு நபரும் அவரவர் அதிகாரப் பரப்பையும், நீங்கள் எவ்வாறு சீரமைக்கிறீர்கள் மற்றும் செயல்படுகிறீர்கள் என்பதையும் அறிவீர்கள், தேவாலயத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் உள்ள திருச்சபைகளிலும் செயல்பட வேண்டும்.
  2. தேவன் கடந்த காலத்தில் செய்ததை அறிந்து அதை எதிர்காலத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

கிழக்கு மலேசிய மக்கள் குழப்பமான சூழ்நிலையிலும் பரிசுத்த ஆவி அதிகாரத்தோடு இறங்குவதை அனுபவிப்பார்கள். ஆசியாவின் கடல்சார் துறைமுகங்களில் மாற்றம் ஏற்படும். இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இந்தப் புதிய காலத்தில் தேவன் உடைத்தெரிவைக் கொண்டு வருகிறார்.

இந்தப் புதிய பருவத்தில் கடவுள் நுழையப் போகிறார். கிழக்கு மலேசியாவிற்கு ஒரு புதிய மகிமை பரிமாணம் வருகிறது. ஒரு புதிய மகிமை கலாச்சாரம் கட்டப்பட வேண்டும், சந்தையில் பலிபீடம் கட்டப்பட வேண்டும், கல்வி மற்றும் தேவாலயம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

  • வணிக துறையில் ஜெப பலிபீடங்கள்
  • கல்வித் துறையில் புதுப்பிப்பு
  • சபைகளில் புத்துயிர்ப்பு

 வானத்தின் ஒரு ஜன்னல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அந்த ஜன்னலிலிருந்து கடவுள் உங்களில் உயிர் பெற்று வருகிறார். உங்கள் கர்ஜனை எதிரியை விட அதிகமாக இருக்கும். தீர்க்கதரிசி ஏஷா, அந்த ஜன்னல் வழியாக சுடுமாறு ராஜா யோவாஷிடம் கூறினார்.

வானத்தின் ஒரு சன்னல் அமைக்கப்பட்டுள்ளது; அந்த ஜன்னல் வழியாகத் தேவன் கர்ஜித்து, உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்கிறார். உங்கள் கர்ஜனை எதிரியின் கர்ஜனையைவிட பெரியதாக இருக்கும். தீர்க்கதரிசி எலிசா (Elisha) ராஜா யோவாஸ் (Joash) அவர்களிடம் அந்த ஜன்னல் வழியாக அம்பை எய்யும்படி சொன்னார். அவர் கைகள்மேல் தமது கைகளை வைத்து வலிமை கொடுத்தார். யோவாஷ் மூன்று முறை மட்டுமே எய்தார். யோவாஸ் 7 முறை சுட்டிருந்தால், அவர் முழுப் பிராந்தியத்தையும் மாற்றியிருப்பார் என்பதால், வயதான தீர்க்கதரிசி கோபமடைந்தார்.

தீர்க்கதரிசன அபிஷேகம் உங்கள் கைகளில் வைக்கப்பட்டுள்ளது. தேவன் கடந்த கால வரம்புகளை அகற்றுகிறார். நீங்கள் எதை இலக்காகக் கொள்ள வேண்டுமோ அதை இலக்காகக் கொள்ள நான் உங்களுக்குப் புதிய பலத்தைத் தருகிறேன். எனவே, பின் வாங்காதீர்கள். புதிய பலம், புதிய சக்தி, புதிய அபிஷேகம், புதிய வெளிப்பாட்டுடன் நீங்கள் முன்னேறிச் செல்லும் நேரம் இது.

நீ சுட்டுக்கொண்டே இருப்பாய், போர்னியோ வரை சுட்டுக்கொண்டே இருப்பாய் ……நிறுத்தாமல் முன்னேறுங்கள்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பின்னடையாதீர்கள். பரிசுத்த ஆவி உங்களை நடத்துவார். இந்தத் தேசத்தின் அல்லது நிலத்தின் முதல் மக்களுக்கு நிலத்தின் மரபணு (DNA) உள்ளது. அவர்கள் பாடவும் ஆடவும் நிலத்தைத் திறக்கவும் திறன் கொண்டவர்கள். யூதா முன்னிலையில் நகரும். அடுத்த 3 ஆண்டுகளில் போர்னியோவில் வல்லமையான ஆராதனை எழும். கோத்தா கினபாலு, சிபு, கூச்சிங் ஆகிய நகரங்களின் தாக்கம் இந்தோனேசியாவைப் பாதிக்கும். பரலோகமும் பூமியும் இணைந்து ஆராதிப்பது தீவையே உலுக்கும்.

மலேசியாவைப் பற்றிய சிண்டி ஜேக்கப்ஸ் தீர்க்கதரிசனம் (சான் ஹோசே, கோஸ்டாரிகா)

இந்த வார்த்தைகள் மலேசியாவிற்கு உரியது.

கிழக்கு மலேசியா நாட்டின் பிற பகுதிகளுடன் இணையும் ஒரு பெரிய ஒற்றுமை நகர்வு வரப்போகிறது. இது பெரிய இயக்கமாக வரும் என்று கர்த்தர் கூறுகிறார்.

போதகர்கள் (மேய்ப்பர்கள்), தலைவர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைவார்கள்.

பல ஆண்டுகளாகத் திருச்சபை பிரிவுகளுக்கிடையே இருந்த சுவர்கள் இடிக்கப்படும். மலேசியத் திருச்சபை பெரிய ஒருமைபாட்டுக்குள் வரும். ஆழமான அன்பும் ஆவிக்குரிய ஐக்கிய உறவும் உருவாகும். அதன் மூலம் தேசம் குணமடையும் என்று கர்த்தர் கூறுகிறார்.

தேசம் முழுமையாக குணமடையாததற்கான ஒரு காரணம் — திருச்சபைகளுக்கிடையில் முழுமையான ஒருமைபாடு இன்னும் வரவில்லை. ஆகவே, பெரிய அளவிலான ஒருமைபாடு தேவை.

இப்போது ஒருமைப்பாடு இல்லையே என்று அல்ல; ஆனால், இன்னும் உயர்ந்த அளவிலான ஒருமைப்பாடு வரப்போகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் செய்து வரும் ஜெப இயக்கம் நல்லபடியாக நடைபெறுகிறது என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
மேலும், ஜெப இயக்கங்களுக்கிடையிலும் கர்த்தர் ஒருமைப்பாட்டைக் கொண்டு வர போகிறார்.

பல ஜெப இயக்கங்கள் இருக்கின்றன; ஆனால், அவை எப்போதும் ஒருமைப்பாட்டில் இல்லை. அவர்கள் ஒரே விஷயங்களுக்காக ஜெபிக்கிறார்கள்; ஆனால், எப்போதும் ஒரு மனத்துடன் ஜெபிக்கவில்லை.

மலேசியாவில் பல ஜெபக் கோபுரங்கள் கட்டப்படப் போகின்றன என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். இந்த முழு இயக்கமும் இப்படிப்பட்ட ஜெபக் கோபுரங்களை அமைக்கத் தொடங்கும்.

அங்கு வணிகத் தலைவர்களையும் நான் கண்டேன்; இந்த ஜெபக் கோபுரங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி உதவும்படி தேவன் அவர்களின் இதயத்தைத் தூண்டுவார்.

ஜெப போராளிகள் தேவனை நோக்கி கூப்பிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வீடு  இல்லை; செல்வதற்கும் ஜெபிப்பதற்கும் ஓர் இடமும் இல்லை.

தேவன் 24/7 ஜெபக் கோபுரங்களை எழுப்பப் போகிறார். இப்போது அவற்றில் சில மிகவும் சிறியதாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தோனேசியாவிலும், மேலும் பிற நாடுகளிலும் உள்ள உண்மையான கட்டிடங்கள் எழுப்பப்படும்.

இது நிச்சயமாக நடைபெறும். ஏனெனில், மலேசியாவிலிருந்து எழும் ஒரு உள்மனக் குரல், ஒரு தீவிரமான ஜெபக் குரல், ஆசியாவைச் சுகப்படுத்தும் என்று கர்த்தர் கூறுகிறார்.

ஹார்வெஸ்ட் ஆஃப் சயோன் அப்போஸ்தலிக் சென்டரில் வெளியிடப்பட்டது
(Posted in Harvest of Zion Apostolic Centre)

(23 மே 2020) கோர்டன் தியோங்கின் தீர்க்கதரிசன வார்த்தை (சிங்கப்பூர்)

கர்த்தர் சொல்லுகிறார்: இந்தக் காலத்திலும், பெந்தெகொஸ்தே நாளிலிருந்து தொடங்கி, நான் காவலாளிகளின் விளக்கை முற்றிலும் புதிய விதத்தில் ஏற்றப் போகிறேன். முன்பு காவலாளிகள் காணாத ஒரு புதிய பரிமாணத்தை நான் வெளிப்படுத்தப்போகிறேன். மலேசியா உலகத்திற்கு ஒருமைப்பாட்டையும் ஒன்றிணைப்பையும் கொண்டு வரும் தேசமாக இருக்கிறது.

மலேசியாவின் ஜனங்களே, உங்கள் விளக்குத் தூண்களை ஏற்றுங்கள்! ஏனெனில், நான் என் அக்னியின் கரத்தைக் கொண்டு வருகிறேன். உங்களை வெளிச்சப்படுத்துவதற்காக என் அக்னியை நீட்டுகிறேன். பின்னடையாதீர்கள்; பழக்கமான பழைய நிலைக்கு மீண்டும் திரும்பாதீர்கள். பழைய சிந்தனை முறைகளையும் செயல்பாடுகளையும் விட்டு விடுங்கள். என் ஆவியோடு நகருங்கள்; என் அக்னியோடு நகருங்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை நான் வழி நடத்திய நாள்களைப் போல, இருளில் என் அக்னியே வழிகாட்டியாக இருந்தது. அப்படியே இன்று, நாளை, நாளையும் — இருளில் என் ஆவியே உங்களுக்கு வெளிச்சமாக இருக்கும்.

“நான் பார்ப்பதற்கு ஒரு சின்னம் அல்ல. நான் பேசுகிற தேவன், கேட்கிற தேவன், குணமாக்குகிற தேவன். என்னை நம்புகிறவர்களுக்கு அதிசயங்களையும் அடையாளங்களையும் செய்கிறேன்.” என்னைத் தேடுகிறவர்களை உயர்த்துவேன். என்னைப் பின்பற்றுகிறவர்களை நான் நிர்ணயித்த நிறைவுக்குக் கொண்டு வருவேன். பலர் என்னை ஒரு சின்னமாக மட்டும் பார்க்கிறார்கள். ஆனால், ஏற்றும் ஒளியைப் போல் ஒளியை ஏற்றுகிறவர்களுக்கே என் கிருபை இருக்கும். அவர்கள் யோசுவா மற்றும் காலேப் தலைமுறை. அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரம்பியவர்களாக இருப்பார்கள்.

மலேசியாவே, நம்பிக்கை கொள்; ஏனெனில், நாம் சேவிக்கும் தேவனே நம்பிக்கையாக இருக்கிறார். நம்பிக்கையின் வெளிச்சம் பிரகாசிக்கட்டும், தீர்க்கதரிசனங்களின் வெளிச்சம் வெளிவரட்டும், சத்தியத்தின் வெளிச்சம் வெளிப்படுத்தட்டும், தேவனுடைய ஜனங்களின் வெளிச்சம் எழுந்து பிரகாசிக்கட்டும்.

Top of Form

தீர்க்கதரிசனம் – ஜூலியஸ் சுபி (Julius Subii)

60 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்.

நீங்கள் உங்கள் தேசத்தின் மிக முக்கியமான வாசலுக்குள் நுழைந்திருக்கிறீர்கள். இந்த வாசல் பத்து ஆண்டுகள் நீடிக்கும். இந்தக் காலத்தில் மலேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்ட பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும். இந்த வாசலில் எழுப்புதல் வெடிக்கும். தேசத்தின் மீதும் திருச்சபையின் மீதும் உள்ள அடிமைத்தனம் உடைக்கப்படும்

எழுபது ஆண்டுகள் நிறைவடைய வந்தபோது, தானியேல் உயர்ந்த நிலையான மத்தியஸ்தல ஜெபத்திற்குள் நுழைந்து சிறைப்பட்ட நிலையைக் கலைக்க ஜெபித்தார்.

இது மலேசியாவில் தேவனிடத்திற்கான மகா திரும்புதலின் வாசலாகும்.
இது தேசத்தின் கட்டுப்பாடுகளையும் சங்கிலிகளையும் உடைக்கும் வாசலாகும்.

இது வாய்ப்புகளின் வாசலாகும்.
இது உழுதெழுப்ப வேண்டிய காலமாகும்.

பரிந்துரையைப் பொறுத்தவரை இயக்கத்தில் மற்றொரு மூச்சு இருக்கும். இந்த மூச்சு இளம் தலைமுறையினரின் ஈடுபாட்டின் மூலம் வருகிறது. இளைஞர்கள் சேர அதிக விருப்பம் இருக்கும்.

இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான தரிசனம்

ரிக் ரிடிங்ஸ் (Rick Ridings) 24 டிசம்பர் 2019 ஜெருசலேமில் பெற்ற தரிசனம்

24 டிசம்பரில் அதிகாலையில் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா தொடர்பான தரிசனம் ஒன்று கொடுக்கப்பட்டது.

நான் இதை இன்று, டிசம்பர் 26 அன்று வெளியிடலாமா என்று கர்த்தரிடத்தில் உறுதிப்படுத்தலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த உறுதிப்படுத்தல் எனக்கு வந்தது. இந்தோனேசியா தலைவர் ஒருவரிடமிருந்து தொடர்பு வந்தது. அவர், ”நாளை, டிசம்பர் 27, இந்தோனேசியா சுதந்திரப் போராட்டம் நான்கு ஆண்டுகள் நடைபெற்றதற்குப் பிறகு, டச்சு ஆட்சியினர் இந்தோனேசியாவின் இறையாண்மையை இறுதியாக அங்கீகரித்த 70ஆம் ஆண்டு நினைவு நாளாகும்” என்றார்.

அந்தத் தரிசனத்தில், இறையாண்மை பெற்ற இந்தோனேசியா மிகவும் முக்கியமான தீர்மான காலகட்டத்தில் இருப்பதை நான் கண்டேன். அந்தத் தீர்மானம், இஸ்ரேல்  நாட்டின் இறையாண்மையை அவர்கள் எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பதைக் குறித்து இருக்கிறது. இஸ்ரேலுடன் உள்ள உறவைப் பொறுத்து ஆசீர்வாதம் அல்லது அதிர்ச்சி வரும் என்று காணப்பட்டது.

இந்தோனேசியா நாட்டின் சில பகுதிகள் மேற்கத்திய உலகில் நீண்ட காலமாக ”மசாலா தீவுகள்“ (Spice Islands) என்று அழைக்கப்பட்டன என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள்.

அந்த மசாலா தீவுகள் இன்று பொதுவாக மலுக்குத் தீவுகள் (Maluku Islands) என்று அறியப்படுகின்றன. அங்கிருந்து கப்பல்கள் புறப்பட்டு, பழமையான கிரேக்க மற்றும் ரோமப் பேரரசுகளுக்கு அங்கு உற்பத்தியாகிய அரிய மசாலாக்களைக் கொண்டு சென்றன.

கடலின் அபாயங்களையும், பாலைவனங்களைக் கடந்து செல்லும் வணிகப் பாதைகளின் ஆபத்துகளையும் கடந்து சென்ற அந்த மசாலாக்கள் மிகவும் மதிப்புமிக்கவையாக இருந்தன.

அவ்வளவு மதிப்புடையவையாக இருந்ததால், ஞானிகள் குழந்தை இயேசு கிறிஸ்துக்குக் கொடுத்த குங்கிலியம் மற்றும் முர் ஆகியவை, அவர்கள் அளித்த மூன்றாவது பரிசான பொன்னுக்கு இணையான மதிப்புடையவையாக இருந்தன.

என் தரிசனத்தில் இந்தோனேசியா ஒரு தூபக்கலசம் போல காணப்பட்டது. அவர்களின் துதி ஆராதனை தேவனுக்குத் தூபமாக உயர்கிறது.

இந்தோனேசியா நாட்டைத் தாங்கியிருந்த தூபக்கலம் மேற்குத் திசையில் இஸ்ரேல் நாட்டை நோக்கி ஆடும்போது, அந்தத் தேசம், அதன் நிலைத்தன்மை, பொருளாதாரம் முதலியவை மிகுந்த ஆசீர்வாதத்தை அனுபவித்தன.

அதே தூபக்கலம் கிழக்கு நோக்கி, இஸ்ரவேலை விட்டு விலகும் திசையில் திரும்பி ஆடும்போது, அந்தத் தேசம், அதன் நிலைத்தன்மை, பொருளாதாரம் முதலியவை மிகவும் அதிர்ச்சியடைந்து குலுங்கின.

இந்தோனேசியா அரசாங்கம், தங்கள் தேசத்தை அதிகமான நிலைத்தன்மையிலும் ஆசீர்வாதத்திலும் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்த தீர்மானிக்கும் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

அவர்கள் இஸ்ரேல் நாட்டுடன் வலுவான உறவைத் தேர்ந்தெடுத்தால், அது அவர்களின் தேசத்திற்கு அதிகமான நிலைத்தன்மையும் ஆசீர்வாதமும் கொண்டு வரும் என்பதைப் பற்றியதே அந்த முடிவு (பார்க்க: ஆதி.12:2–3).

பின்னர், இந்தோனேசியா இஸ்ரவேலுடன் உறவைத் தெளிவாகவும் வலுவாகவும் தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கக்கூடும் என்பதையும் நான் தரிசனத்தில் கண்டேன்.

அந்தத் தரிசனத்தில், இந்தோனேசியா நாட்டைத் தாங்கிய தூபக்கலம் மேற்குத் திசையில்  இஸ்ரேலை நோக்கி நிலைத்தது.

அவர்கள் அப்படியே செய்தபோது, அந்த அசையும் தூபக்கலம், மேற்கத்திய இந்தோனேசியாவின் பெரிய நகரமான பத்தாம் (Batam) நகரத்தின் விசையை (அனைத்து இணைந்த தீவுகளுடன் சேர்ந்து) தள்ளியது; அந்த நகரத்தின் வடிவம் ஒரு விசை போலவே இருந்தது. அந்த விசை, சிங்கப்பூரை நோக்கி சென்றது; தரிசனத்தில் அது விசை ஊற்றுப் போலத் தெரிந்தது.

இந்தோனேசியாவின் விசை சிங்கப்பூரின் விசை ஊற்றைப் திருப்பும்போது, சிங்கப்பூர் என்ற சாவித்துளையில் சென்று திறந்தது.

அப்போது: அது, மலேசியா இருப்பிடமாகப் பிடித்திருந்த கூண்டு திறக்கப்பட்டது.

மலேசியா விடுதலை பெறும் என்று தரிசனத்தில் காணப்பட்டது.

2019 டிசம்பர் 26 அன்று அந்த நாடுகளில் உள்ள ஆவிக்குரிய தலைவர்கள் ஆவிகளைப் பரிசோதிக்கும் திறனுடனும் (விவேகத்துடனும்) ஜெபத்திலும் நிலைத்திருக்க வேண்டும்.

Rick Ridings Succat Hallel 24/7 பிரார்த்தனை மற்றும் பூஜை மனை, Jerusalem.

டாம் ஹெஸ் (Tom Hess)ன் மலேசியாவுக்கான முன்னேற்பாடு வார்த்தையும் தரிசனங்களும்: 2016

2016 மே 28 அன்று, டாம் ஹெஸ் Hall of Prayer for All Nations ஜெரூசலேமில் இருந்து கோலாலும்பூரில் இருந்தபோது, கடவுள் அவருக்கு ஒரு முக்கியமான தரிசனமும் முன்னேற்பாடும் கொடுத்தார்: கடவுள் தற்போது ஒரு பெரும் நெடுஞ்சாலை மற்றும் வழிபாட்டின் வழி, மனந் திரும்புதலின் வழி மற்றும் சமரசத்தின் வழி என பாதையை உருவாக்கி வருகிறார். அவர் தென்கிழக்கு ஆசியா பற்றிய ஒரு தரிசனம் கண்டார். அதில் ஒரு துப்பாக்கியைப் போல் இந்தோனேசியா துப்பாக்கியின் குழாய், சிங்கப்பூர் தீப்பெட்டி, மலேசியா அதன் விசை (தூண்டுதல்), இந்த மூன்று பாராளுமன்றங்களும் மறுமலர்ச்சி ஆயுதமாக மாறுகின்றன. மலேசியா ஆசிய புத்துயிர்ப்பின் தொடக்கமாக இருக்கும்.

இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டை வெளியிடும் போது, ‘’கடவுள் மலேசியாவை ஆசியாவின் புதுச்சுடர் எழுச்சியை ஆரம்பிக்கும் தூண்டுகோலாக மாற்றுவார்” என்று அவர் கூறினார். அவர் அமைதியின் அரசன் இயேசு கிறிஸ்து வெள்ளை குதிரையில் மேற்கு ஆசியாவுக்கு வருவார்.

பல ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் “மலேசியா” என்ற பெயரைச் சீன மொழியில் அதே பொருளில் புரிந்து கொண்டுள்ளனர்; அதாவது, ஜீசஸ் வெள்ளை குதிரையில் மேற்கு ஆசியாவுக்கு வருகிறார் என்பதாகும்.

சிண்டி ஜேக்கப் தீர்க்கதரிசனம் – 15 செப்டம்பர் 2024

கர்த்தர், “நான் உங்களைச் சீர்திருத்தத்தின் இடத்திற்குக் கொண்டு வருவேன்.” என்று கூறுகிறார். மேலும், நீங்கள் அவருக்கு இடம் கொடுத்தால், ”அவர் உங்களின் பழைய அமைப்புகள் உடைக்கப்படும்; பழைய முறைகள் மாற்றப்படும் இடத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் கூறுகிறார். சிலர் இது மலேசியாவில் நடக்காது என்பார்கள். ஆனால், நம்புகிறவர்களுக்கு எல்லாம் சாத்தியம்,’’ என்று கர்த்தர் கூறுகிறார். நான் இந்த நாட்டின் அமைப்புடன் பேசத் தயாராகிறேன். நீங்கள் ஊழலின் மேல் ஊழல் வெளிப்படுவதைக் காண்பீர்கள். நான் பல நாடுகள் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மாதிரி அமைப்பை நிறுவுவேன் — பொருளாதார ரீதியாக மட்டும் அல்ல. நான் பல்கலைக்கழகங்களிலும் சீர்திருத்தம் செய்வேன். நான் மாணவர்களுக்குள் சில ஏமாற்றங்களையும் விரக்திகளையும் காண்கிறேன். ஆனால், கர்த்தர் கூறுகிறார்: “ஜெபியுங்கள், நடுவுநின்று வேண்டுங்கள்; கல்வி அமைப்பிற்குள் நான் நீதியைக் கொண்டு வரத் தயாராகிறேன்.”

(சபையினரிடம் பேசுகிறார்)


நீங்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள்; சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் சீடர்களாக்க சீர்திருத்தக்காரர்களுக்கான அபிஷேகம் இருக்கிறது. சமூகத்தின் எல்லா துறைகளிலும் சீர்திருத்தம் செய்ய தேவன் அபிஷேகம் கொடுப்பார். புதிய வணிக யோசனைகள் வரும்.

கர்த்தர் கூறுகிறார்:

“மலேசியாவில் இருந்து ஒரு மறுமலர்ச்சியை நான் எழுப்புகிறேனே அல்லவா? அந்த மறுமலர்ச்சி மக்கள் மிகவும் படைப்பாற்றலுடன் இருப்பார்கள். இதில் நான் டிஜிட்டல் கலைப்பணிகளைப் பார்க்கிறேன், பல புதிய விஷயங்களைப் பார்க்கிறேன் — புதிய செயற்கை நுண்ணறிவு (A.I.) வளர்ச்சிகளையும் பார்க்கிறேன். என் மக்கள் முன்னணியில் இருக்க வேண்டும்; தொழில்நுட்பச் சீர்திருத்தத்தின் முன் வரிசையில் நிற்க வேண்டும்.”

ஆகையால், பிதாவே, இந்த மறுமலர்ச்சிக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.  இசைக் கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, வறுமையை ஒழிக்க அறிவியல் சார்ந்த தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்களை எழுப்புவதற்காக உமக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில், ஆமென்.

From: Glory of Zion International “Malaysia Has Entered a New Era of Influence!”

வெள்ளிக்கிழமை, ஜூலை 4, 2025

அன்பான தேச மாற்றத்திற்கான முன்னோடிகள்,

இன்று மலேசியாவில் ராஜ்ய வரலாறு உருவானது!

ஜூலை 4 அன்று உலகில் நான் எங்கு இருந்திருக்கலாம். ஆனால், தேவன் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்டு அறிவிக்க மலேசியாவின் பினாங்கில் இருக்கவேண்டும் என்று நான் தெளிவாக அறிந்திருந்தேன். இன்றிரவு நடைபெற்ற “தேவராஜ்ய விடுவிப்பு – ஆசியா” (Kingdom Release Asia) கூட்டம் எதிர்பார்ப்புகளைத் தாண்டியது. செப்டம்பர் மாதத்திலேயே கர்த்தர் என்னிடம், “என் மதிப்பீட்டை அறிவிக்க உன்னை மலேசியாவுக்குக் கொண்டு வருவேன்” என்று கூறினார். அந்த அறிவிப்பின் ஒலி இன்றிரவு ஆரம்பமானது; நாங்கள் வானத்தை நோக்கி பத்து முறை “அல்லேலூயா” என்று முழங்கினோம். கர்த்தர் என்னை 2 ராஜாக்கள் 13ஆம் அதிகாரத்திலிருந்து  பகிரச் செய்தார். மேலும், நாம் “அம்பு எய்ய” முடியும் ஒரு தருணத்தில் இருக்கிறோம்; அது ஆசியாவின் இன்னும் பத்து நாடுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மலேசியாவைத் தேவன் ஒரு முன் மாதிரி நாடாக (prototype nation) பயன்படுத்தி ஆரம்பித்து, அந்த நாடுகளின் ஒவ்வொன்றிலும் மத அமைப்புகளில் மறுசீரமைப்பு ஏற்படும் என்று அறிவிக்கும்படி நாம் உத்தரவிடப்பட்டோம்.

நாங்கள் பத்து முறை முழங்கியபின் அந்த முழக்கம் வளிமண்டலத்தைத் துளைத்தது; அப்போது தேவனுடைய ஆவி “இந்த பிரதேசத்தின் சாட்சியை மறுசீரமைக்கவே நான் உங்களை இன்றிரவு இங்கே கூட்டி வைத்தேன்” என்று கூறினார். உங்கள் முழக்கங்களினால், இந்தப் பகுதியிலும் இந்தப் பூமியின் வட்டாரத்திலும் உள்ள நாடுகள் இனிமேல் என்னுடன் எவ்வாறு நகர வேண்டும் என்பதை மாற்றி அமைக்கும் வெளிப்பாட்டை நான் இப்போது அனுப்புகிறேன். இந்தப் பிரதேசத்தின் ‘நாகம்’ என்று கூறப்படும் ஆட்சிக்குள் நாடுகள் இனி கட்டுப்படுத்தப்படாமல் இருக்கவே, நான் உங்களை என் முன்னிலையில் ஒன்றிணைத்தேன்.

இது இந்தப் பிரதேசத்தில் உங்களின் அடுத்த மூன்று ஆண்டுக் காலத்தின் ஆரம்பம்; நீங்கள் அக்கினியை எதிர்கொள்வதும், இந்தப் பிரதேசத்தின் அக்கினிக்கு மேல் ஆட்சி செலுத்துவதும் தொடங்குகிறது. என் அக்கினி என் ஜனங்களில் உயிர்ப்புடன் எழும்பத் தயார்.

இந்தப் பிரதேசத்தின் மத அமைப்புகளால் ஒடுக்கப்பட்டிருந்த சபையை, இதற்கு முன் இல்லாத முக்கியத்துவம் மற்றும் முன்னிலை நிலைக்கு நான் ஊதிப் எழுப்புவேன் என்று நான் அறிவிக்கிறேன்.

தயாராகுங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஜெபித்திருக்கிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் உயர்ந்த இடத்திற்கு எழுந்துவிட்டீர்கள் என்று நான் சொல்வதைக் கேட்பீர்கள். இந்தப் பகுதியில் எதிர்காலத்தைத் திறக்க வேண்டிய திறவுகோல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.”

இந்தப் பயணத்திற்கு டெக்சாஸிலிருந்து மூன்று திறவுகோல்கள் இணைக்கப்பட்ட ஒரு வளையத்தைக் கொண்டு வரும்படி கர்த்தர் எனக்கு உத்தரவிட்டார். அந்தத் திறவுகோல்களைத் தலைமைத்துவத்திற்குக் கொடுத்து, கலந்து கொண்ட அனைவரிடமும் நான் தீர்க்கதரிசனமாக அறிவித்தேன்: “இந்த இடத்திற்குப் (பினாங்கு) உங்களை நான் இழுத்துக் கொண்டு வந்தேன். இப்போது, புதிய அபிஷேகத்துடனும், கடந்த காலத்தில் உங்களைச் சிறைபிடித்து வைத்திருந்த 3-மடிப்புத் தண்டு திறக்கப்படுவதைக் காணும் திறனுடனும் அனுப்புகிறேன். உங்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த அமைப்பைத் திறக்கவும், எதிர்காலத்திலும் உங்களைக் கட்டுப்படுத்த முயலும் அந்தக் கட்டமைப்பை உடைக்கவும் உதவும் திறவுகோல்களை நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன்.” நான் திறவுகோல்களை வழங்கிய பின், மாநாட்டு ஏற்பாட்டாளரான ”டெரன்ஸ் போ ”ஒன்பது மாதங்களுக்கு முன்பு தேவனுடைய ஆவி அவர்களிடம், “அவர் திறவுகோல்களுடன் கருவுற்றவராய் வருவார்; உங்களுக்குத் திறவுகோல்களை அளிக்க வருவார்” என்று சொல்லியிருந்ததாக” தெரிவித்தார். .

கர்த்தர் மட்டுமே! பின்னர் அவர் ஒரு தீர்க்கதரிசன செயலாகச் சாவியைத் “திருப்பி” உதவுமாறும், தேசம் தேசமாக, அவர்களை முன்னேறவும் வெல்லவும் காரணமான விசுவாசத்தைத் திறக்குமாறும் என்னிடம் கேட்டார்.Top of Form

உங்கள் பிரார்த்தனைகளுக்கு நான் போதுமான நன்றி சொல்ல முடியாது – என்னையும் ஆரோனையும் இங்குப் பாதுகாப்பாக அழைத்து வந்தற்கு மட்டுமல்ல, மலேசியா மற்றும் ஆசியாவிற்கான பரலோக ராஜ்ய அறிவிப்பின் ஒரு பகுதியாக இருக்கவும் வைத்துள்ளீர்கள். இங்கே ஒரு நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது, மேலும், கடவுளின் ராஜ்யத்தைத் திறக்க வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் தேவதூதர் செயல்பாடு ஆகியவற்றிற்காக நீங்கள் தொடர்ந்து பரிந்துரை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

சனிக்கிழமை காலை மற்றும் பிற்பகலிலும் நான் மீண்டும் ஊழியம் செய்வேன். அதன் பிறகு வீட்டிற்குப் புறப்படுவேன். அந்த அமர்வுகளை “Asia Revival Centre” யூடியூப் சேனலில் நீங்கள் பார்க்க முடியும்.

நீங்கள் எங்கு வசித்தாலும் பரவாயில்லை — மலேசியாவிலிருந்து நான் அறிவிக்கிறேன்:
உங்கள் விசுவாசத்தின் ஒரு புதிய வெளிப்பாடு இப்போது செயல்படுத்தப்படுகிறது.

ஆசீர்வாதங்கள்.Bottom of Form

Top of Form

சக் டி. பியர்ஸ்
க்ளோரி ஆஃப் சயோன் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ்
7801 S Interstate 35E
கொரிந்த், டெக்சாஸ் 76210
அமெரிக்கா