கடவுளை அறிய ஓர் இதயம்

வாழ்த்துகள். இந்த ஆண்டு NECF 40 நாள்கள் உபவாசம் – பிரார்த்தனை (7/8-15/9) ’கடவுளின் இதயத்தை அறிய’ என்றஅழகான அழைப்பைக் கொண்டுள்ளது. எந்த நேரத்திலும் நாம் அவருடைய மனதையோ கைகளையோ மட்டும் அறியாமல் அவருடைய இருதயத்தை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு சிக்கல்களுக்கும் பெரும் நிச்சயமற்ற நிலைகளுக்கும் மத்தியில் நமது வீடுகளையும், திருச்சபைகளையும், நமது சமூகங்களையும் நிரம்பி வழியச் செய்ய நம் இதயங்களிலிருந்து ஜீவத் தண்ணீரின் ஆறுகள் ஓடும் என்பது அவருடைய இதயத்தை நாம் அறிந்தால் மட்டுமே நாம் உணர முடியும்.

எனவே இந்தத் தேசிய உபவாசம் – பிரார்த்தனையில் பங்கேற்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

  • NECF பிரார்த்தனை வழிகாட்டிகளைப் பயன்படுத்தித் தினசரி உபவாசம் – பிரார்த்தனைக்கு உரிய வழிபாட்டைஅமைக்கவும்.
  • உங்கள் திருச்சபை பிரார்த்தனை பலிபீடங்களில் சேரவும்
  • ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 14 வரை ;டைபெறும் MUFW அதிகாலை பலிபீடங்கள் (6.30am-8.00am) மற்றும் இரவு பலிபீடங்கள் (11.00pm-12.30am) இணையவும்.

நீங்கள் அவருடைய முகத்தைத் தேடும்போது அவரை மேலும் அறிய கர்த்தர் உண்மையிலேயே உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

GDE Error: Error retrieving file - if necessary turn off error checking (404:Not Found)