கிறிஸ்துவின் சரீர தெய்வீக ஒழுங்கை மீட்டெடுத்தல்

வாரம் 6 & 7 (ஏப்ரல் 5-18)

 

நன்றி நவில்தல்

பிதாவே, திருச்சபை மீதான உங்களின் வியப்பூட்டும் மற்றும் அளவிட முடியாத அன்பிற்கு நன்றி. கர்த்தரே, எங்கள்பால் உள்ள உம்முடைய அன்பின் அகலம், நீளம், ஆழம் மற்றும் உயரம் ஆகியவற்றை உணர்ந்து புரிந்துகொள்ள உதவுங்கள்; உங்களைப் போன்றே உங்கள் திருச்சபையை நாங்கள் நேசிக்க வேண்டும் (எபே 3: 17-19).

ஆண்டவரே, நீங்கள் பூமியில் இருந்தபோது சபை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டாக இருந்தீர்கள். நீங்கள் சென்ற எல்லா இடங்களில் இருந்த மக்களை நேசித்தீர்கள்; சேவை செய்தீர்கள்; கற்பித்தீர்கள் மற்றும் குணப்படுத்தினீர்கள். இருளின் சக்திகளை உங்கள் அதிகாரத்தினால் அகற்றி, உங்கள் தேவாலயத்திற்குத் தெய்வீக ஒழுங்கைக் கொடுத்து, வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் ஆசீர்வாதங்கள் பின்பற்றி வருவதை உறுதி செய்தீர். இது நிச்சயமாக உங்கள் தேவாலயத்திற்காக நீங்கள் விரும்பியதாகும்.

 

1. அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும்

  ஆசிரியர்களின் பங்கு

விசுவாசத்தில் ஒற்றுமையை அடையும் வரை, நாம் முதிர்ச்சியடையும் வரை, இயேசு கிறிஸ்துவின் தன்மை, வழிகள் மற்றும் அதிகாரம் மற்றும் சக்தி ஆகியவற்றின் முழுமையுடன் நடந்து செல்லும் வரை, கிறிஸ்துவின் சரீரம் கட்டமைக்கப்படுவதற்காக உங்கள் மக்களை சேவைப் பணிகளுக்குத் தயார்படுத்துதல் – இல்லை இனிமேல் கைக்குழந்தைகள் தூக்கி எறியப்படுவது, பொய்யான ஆசிரியர்களால் இனிமேல் ஏமாற்றப்படுவதில்லை, உண்மையை நாம் கேட்கும்போது அதைக் கண்டறிந்து அதன் பின்னால் உள்ள இருதயத்தை அடையாளம் காண முடியும் (எபே 4: 11-14) ”

நீங்கள் கொடுத்த இந்த ஐந்து வகை ஊழியத் திறன்களுக்கு நன்றி, இதன்வழி தேவனுடைய திருச்சபையானது முழுமை, நல்லொழுக்கப் போதனை, ஒருங்கிணைப்பின் அனுபவத்தைப் பெறும். இந்தக் காலக்கட்டத்தில் இத்தெய்வீக ஒழுங்கைப் பற்றிய அதிகமான புரிதலை எங்களுக்குக் கொடுங்கள். இதனால் மலேசியாவில் உள்ள கர்த்தரின் திருச்சபை விசுவாசத்தில் முழு ஒற்றுமையை அடைந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அதிகாரத்தில் நடக்கும்.

 

2. மலேசியாவில் உள்ள ஆன்மீக பிதாக்களைக் கணம் செய்தல்

உங்கள் சபை மூப்பர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியுங்கள். ஏனென்றால், அவர்கள் உங்கள் ஆத்மாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்காய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல,  மகிழ்ச்சியாக அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குகள். அவர்கள் துக்கத்தோடே அதைச் செய்தால், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. (எபிரெயர் 13:17).

ஆண்டவரே நீங்கள் கணம் செய்வதற்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வார்த்தை ஒருவரையொருவர் கணம் செய்ய சொல்கிறது. (ரோமர் 12:10)

ஆண்டவரே, நாங்கள் உம்மைக் கணம் பண்ணுகிறோம். அவ்வாறு செய்யும்போது, ​​எங்கள் தேசத்தில் தேவனுடைய திருச்சபையின் வரலாற்றில் எங்களுக்கு எடுத்துக்காட்டாக, முன்னுதாரணமாக விளங்கிய ஆண்களையும் பெண்களையும் கணம் பண்ணுகிறோம்.

இன்று நம் தேசத்தில் நாம் பின்பற்றுவதற்கான பாதைகளை வகுத்து முன்னோடியாகத் திகழ்ந்த தற்போதைய பல தலைவர்கள், ஆன்மீகத் தந்தைகள் மற்றும் தாய்மார்களை மதிக்க விரும்புகிறோம், அவர்கள்தான் இப்போது நாங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர்கள்.

 

3. அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுவிசேஷ ஊழியர்களைக் கணம் செய்தல்

கர்த்தரே, மலேசியாவில் நீங்கள் எழுப்பிய போதகர்கள், உங்கள் வார்த்தையைக் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சுவிசேஷ ஊழியக்கார்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, இக்காலக் கட்டத்தில் பரிசுத்த ஆவியின் புதிய அபிஷேகத்தால் அவர்களை நிரப்புவீர்கள் என்று அறிக்கை செய்கிறோம்; இதன் மூலம் அவர்கள் புதிய திராட்சை இரசமும் புதிய எண்ணெயும் வெளிப்படும். இது ஒவ்வொரு சபையிலும் நித்திய ஜீவ தண்ணீர் ஆறுகள் பாய ஆரம்பிக்கும்; இதனால் நாம் அனைவரும் தேவ ராஜ்யத்தின் துரிதப்படுத்தும் வேலையைக் காணலும்.

(மேலே உள்ளவர்களுள் ஒருவரைப் பற்றி யோசித்து, அவர்களின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பேசுங்கள்)

 

பிரகடனம்:

ஆண்டவரே, நீங்கள் சொன்னது போல, இப்புதிய பருவத்தில் எங்கள் மத்தியில் புதிய காரியத்தைச் செய்கிறீர்கள் (ஏசாயா 43:19).

எனவே, புதிய பருவம் நம்மீது இருப்பதாக நாங்கள் அறிவிக்கிறோம். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. நம் தேசத்தில் உண்மையில் காட்டுப் புறாவின் சத்தம் கேட்கிறது (உன்னதப்பாட்டு 2:11).

மலேசியா தேவாலயம் பலவீனமாகவோ பிளவு பட்டதாகவோ இருக்காது.  ஜெபிக்கும்போதும், ஜெப அரணில் நம் நிலைப்பாட்டில் நிற்கும்போதும், தெய்வீக ஒழுங்கை மீட்டெடுப்பதையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையையும் அறிவிக்கிறோம். எங்கள் தேசத்தின் பிதாக்களும் ஆன்மீகத் தலைவர்களும் தங்கள் பாத்திரங்களை அதிகாரத்துடனும் ஒற்றுமையுடனும் ஏற்றுக்கொள்வார்கள், இதன் மூலம் அப்போஸ்தலர்களின் செயல்களின் நாள்களைப் போலவே மிகுந்த கிருபையையும் விடுவிப்பார்கள் (அப்போஸ்தலர் 4:33). அதனுடன், எங்கள் பிள்ளைகள் ஆன்மீக அதிகாரத்தில் எழுந்திருப்பார்கள்.

எங்கள் தேசத்திற்கு மிகவும் தேவைப்படும் புதிய திராட்சைப் பழச்சாறுக்கு ஏற்ற புதிய மதுக் குடுவை தயாரிக்கப்படுவதாக நாங்கள் அறிவிக்கிறோம். கிறிஸ்துவின் சரீரத்தின் மீது இதற்கு முன்பு பார்த்ததிராத பெரும் அதிகாரம் வருகிறது என்றும் அறிவிக்கிறோம்.

திருச்சபை ஒற்றுமையுடன் நிற்கும்போதும், ​​நம்முடைய ஆன்மீகத் தலைவர்களிடையே உண்மையான மரியாதையும் கணமும் குணப்படுத்துதலும் இருப்பதால், நம்முடைய ஆண்டவர் இயேசு முழு வெளிப்படையான அழகுடன் வெளிப்படுவார் என்று நாங்கள் அறிவிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

உள் நுழை